Latest Updates
-
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க.. - கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன?
நிச்சயதார்த்த மோதிரம் முதல் முழங்காலில் முட்டியிட்டு புரோபோஸ் செய்யும் முறை வரை- எப்படி வந்தது தெரியுமா?
History Of Proposing Marriage In Tamil: இன்றைய கால கட்டத்தில் காதலை புரோபோஷல் செய்யும் முறைகள் கூட மாறிக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு காதலர்களும் தங்கள் காதலை வித்தியாசமான முறையில் புரோபோஸ் செய்ய விரும்புகின்றனர். அதிலும் காதலியை திருமணம் செய்வதற்காக ஒருவர் முழங்காலில் முட்டியிட்டு புரோபோஸ் செய்வது ஏன்?
இப்படி முழங்காலில் முட்டியிட்டு புரோபோஸ் செய்வது பாரம்பரிய முறை என்று கூறுகின்றனர். பல நூற்றாண்டு காலமாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். சரி வாங்க இதைப்பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

நிச்சயதார்த்த மோதிரங்கள்:
நிச்சயதார்த்த மோதிரங்களை பயன்படுத்துவது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணத்தின் போது தங்க மோதிரம் கொடுத்து உறுதிமொழியை எடுத்துக் கொள்கின்றனர். இந்த மாதிரி செய்வது பண்டைய ரோமன் கலாச்சாரத்தில் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொள்வது பொதுவெளியில் நடைபெற்றது.
பிறகு முழங்காலில் முட்டியிட்டு புரோபோஸ் செய்யும் முறை இடைக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. வைர மோதிரங்களை வழங்கும் நிகழ்வுகள் 1470 களில் பணக்காரர்களிடையே ஏற்பட்டது. இதனால் வைர மோதிரங்கள் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றது.
முழங்காலில் முட்டியிட்டு புரோபோஸ் செய்யும் முறை
முழங்காலில் முட்டியிட்டு காதலிக்கு புரோபோஸ் செய்யும் முறை இடைக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. காதலிக்கு முழங்காலில் முட்டியிட்டு புரோபோஸ் செய்வது துணையின் மீதான பக்தியை அது காட்டுகிறது. ஒரு பக்க மக்களால் இந்த முறை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், மறுபக்க மக்களால் இது அடிமைத்தனமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் 19 ஆம் நூற்றாண்டில் திருமண முன் மொழிவுகளில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
லீப் ஆண்டு புரோபோசல்
பாரம்பரிய திருமண முன்மொழிவுகள் உலகெங்கிலும் புகழ் பெற்றது. ஆண் பெண் இருவரும் திருமண முன்மொழிவுகளில் பங்கு பெற வேண்டும். இருவரின் ஒப்புதலும் திருமணத்திற்கு அவசியமாக பார்க்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில், இளவரசி சார்லோட் தனது சொந்தக் கணவரை தேர்ந்தெடுத்தார் என்ற செய்தி உலகெங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. லீப் வருட புரோபோஷல் என்பது மிகவும் பிரபலமானது. மேலும் பெண்களின் ஒப்புதலும் திருமணத்தில் பார்க்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் நாட்டுப்புறவியலாளர்கள் தங்களுடைய சொந்த கட்டுக்கதைகளைப் பரப்பினர். அதை எலிசபெதன் 'கம்யூன் லாவ்' நடைமுறை என்று கூறினர். பிப்ரவரி 29 லீப் வருட புரோபோஷல் பெருசாக பார்க்கப்பட்டது. 1839 இல் விக்டோரியா ராணி மற்றும் இளவரசர் ஆல்பர்ட் நிச்சயதார்த்தத்தில் கூட நிறைய விஷயங்கள் பின்பற்றப்பட்டன. ஆட்சி செய்யும் மன்னராக இருந்ததால், அவர் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் பாம்பு வடிவ தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
லீப் வருட புரோபோஷல் ஒரு பாரம்பரியம்
லீப் இயர் ப்ரொபோசல் என்பது ஒரு பாரம்பரியம், இதில் பெண்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை , பிப்ரவரி 29 அன்று, பெண்கள் தங்கள் ஆண் துணையிடம் புரோபோஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். லீப் ஆண்டு முன்மொழிவு பாரம்பரியம் 5 ஆம் நூற்றாண்டின் அயர்லாந்தின் பழைய பாரம்பரியத்திலிருந்து உருவாகியது.
அயர்லாந்தில் இந்த போக்கு தொடங்கியபோது, ஸ்காட்லாந்து மற்றும் பின்லாந்து முழுவதும் பிரபலமடைந்தது. இறுதியாக, 1800 களின் முற்பகுதியில், அமெரிக்கா பெண்கள் தங்கள் உறவின் எதிர்காலத்தை தாங்களாகவே தேர்ந்தெடுக்க முன் வந்தனர்.
இந்த லீப் இயர் புரோபோஷலை ஸ்காட்லாந்தின் ராணி மார்கரெட் 1288 இல் ஒரு சட்டத்தை இயற்றியதாகக் கூறப்படுகிறது. பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்களிடம் இதை செய்யலாம். பெண்கள் முழங்காலில் மண்டியிட்டு புரோபோஸ் செய்யலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
செயிண்ட் பிரிட்ஜெட் மற்றும் செயிண்ட் பேட்ரிக் ஆகியோரின் புராணக்கதையின் அடிப்படையில் பிப்ரவரி 29 அன்று லீப் டே அன்று திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சட்டபூர்வமான அடிப்படையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications