2100 ஆம் ஆண்டில் இந்த உலகம் 'இப்படி' தான் இருக்கப் போகுதாம் - அடித்துக் கூறி ஆச்சரியப்படுத்தும் நிபுணர்கள்!

முந்தைய காலத்தில் நாம் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும், அதற்கு நமது உடலுழைப்பு தேவைப்பட்டது. ஆனால் தற்போதைய நவீன உலகில் நமது வேலைகளை சுலபமாக்கும் வகையில் பலவிதமான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னமும் பல்வேறு தொழில்நுட்பங்களை நிபுணர்கள் கண்டுபிடித்தும் வருகிறார்கள். இவை அனைத்துமே நமது வாழ்க்கையை சுலபமாக்குவதற்கு தான்.

ஆனால் 2100 ஆம் ஆண்டில் இவ்வுலகமே வித்தியாசமாக மாறவுள்ளது. அதுவும் ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பது போன்று மக்கள் நிலத்தடி நகரங்களில் வாழ்வார்கள் மற்றும் எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க AI வழிகாட்டிகளை சார்ந்திருப்பார்கள். இது மாதிரியான விஷயங்களை நாம் அனைவரும் சயின்ஸ்-ஃபிக்சன் திரைப்படங்களில் கண்டிருக்கலாம்.

Five Surprising Technologies That Will Be Here By 2100

புஷ்ஃபாரின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான எட் ஜான்சன் டெய்லிமெயில்.காம்மிற்கு கூறுகையில், 2100-ல் நமது வாழ்க்கை தொழில்நுட்பத்துடன் மட்டும் பிணைக்கப்பட்டிருக்காது, தொழில்நுட்பத்தினால் வாழ்க்கையை வடிவமைக்கப்பட்டு, வழிநடத்தப்படுவதாக இருக்கும். இப்போது எதிர்காலத்தில் எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் வந்து உலகை மாற்றக்கூடும் என்பதைக் காண்போம். இதில் சில நல்லவையாகவோ, கெட்டவையாகவோ இருக்கலாம்.

டிஜிட்டல் மனிதர்கள் இருப்பார்கள்

2100 ஆம் ஆண்டில் நிஜ மனிதர்களுடன மனித வடிவிலான ரோபோக்கள் மற்றும் டிஜிட்டல் மனிதர்களும் இணைந்து வாழ்வார்கள். இதில் ரோபோக்கள் அறுவை சிகிச்சைகள் மற்றும் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இருக்கும்.

அதுவும் மனிதர்களின் அறிவுறுத்தல்கள், கல்வியாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் எதுவும் தேவையில்லாமல் டிஜிட்டல் மனிதர்களை ஆதரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாகும். அதோடு இந்த டிஜிட்டல் மனிதர்கள் ஒரு நல்ல நண்பர்களாக அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.

அதாவது AI-ல் இயக்கப்பட்ட டிஜிட்டல் மனிதர்கள் மற்றும் மனித வடிவிலான ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் அனைத்து வகையான வேலைகளையும் செய்யும். அதில் வீட்டு வேலைகளை செய்வது முதல் உயர்நிலை கல்வியை சொல்லிக் கொடுப்பது, சிக்கலான அறுவை சிகிச்சையை செய்வது வரை அனைத்து வேலைகளையும் செய்யும் என சம் விவாஸின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராப் சிம்ஸ் கூறியுள்ளார்.

AI வழிகாட்டிகள் ஒருவரது வேலையை தீர்மானிக்கும்

தற்போது சுயமாக சிந்தித்து வேலை செய்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் ஒருவருக்கு சிறந்த வேலை எது, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது போன்றவற்றில் முடிவுகளை எடுக்க AI வழிகாட்டிகள் ஒவ்வொரு மனிதனுடனும் வாழ்வார்கள் என புஷ்ஃபரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் எட் ஜான்சன் கூறுகிறார்.

மேலும் 2100 ஆம் ஆண்டில் AI வழிகாட்டிகள் கண்ணிமைகும் நேரத்தில் வேலைகளை நொடியில் முடிக்கும். மொத்தத்தில் 2100 ஆம் ஆண்டில் வாழ்க்கையானது மனித ஆவிக்கும், சிலிகான் ஆன்மாவிற்கும் இடையேயுள்ள ஆழ்ந்த ஒருங்கிணைப்பைப் பற்றியதாக இருக்கும்.

நிலத்தடி நகரங்கள்

2100 ஆம் ஆண்டுகளில் உலகமே வித்தியாசமாக மாறிவிடும். இதுவரை நிலப்பரப்பின் மேல் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள், எதிர்காலத்தில் நிலத்திற்கு அடியில் நகரங்களை உருவாக்கி வாழ்வார்கள்.

அதுவும் இம்மாதிரியான நிலத்தடி நகரங்களை உருவாக்க புதிய வாழ்க்கைக்கான இடங்கள், கட்டிடங்களை கட்ட ஆக்மென்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி ரோபோக்கள் சுரங்கங்களைத் தோண்டும் என புதிய சுரங்கப்பாதை உருவாக்கும் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருக்கும் ரோபாட்டிக்ஸ் நிறுவனமான ஹைப்பர்டன்னல் தெரிவித்துள்ளது.

கேமராக்கள் வீடியோக்களில் வாட்டர்மார்க்குகள் இருக்கும்

தற்போது போலி வீடியோக்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. உண்மையான வீடியோ எது, போலி வீடியோ எது என்று கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் அரசாங்கங்கள் கேமரா தயாரிப்பாளர்களை டிஜிட்டல் வாட்டர்மார்க்குகளை சேர்க்கும்படி கட்டாயப்படுத்தும். இதன் மூலம் மக்கள் வீடியோக்களின் மீது நம்பிக்கை வைக்க முடியும்.

பாதுகாப்பு நிறுவனமான செக்டிகோவின் தலைமை அனுபவ அதிகாரியான டிக் காலன், டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மக்கள் போட்டோ, வீடியோ, குரல் பதிவு போன்றவற்றின் நம்பகத்தன்மையை மக்கள் நீண்ட காலம் நம்பமாட்டார்கள்.

எனவே மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், இதற்கு தீர்வு கட்டவும், 2100 ஆம் ஆண்டுகளில் அனைத்து வகையான ரெகார்டிங் சாதனங்களும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட டைம் வாட்டர் மார்க்கைக் கொண்டிருக்கும். இந்த என்க்ரிப்ட் செய்யப்பட்ட வாட்டர் மார்க்குகள் போலியான டீப்ஃபேக் போட்டோ மற்றும் வீடியோக்களை உண்மையான படங்களில் இருந்து பிரித்துக் காட்டும்.

குழந்தைகளுக்கு அவதார்கள் பாடங்களை எடுக்கும்

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு ஆலோசகர்களான அவதார்கள் குழந்தைகளுக்கு பாடங்களை நடத்துவதைக் காணக்கூடும் என்று கபுனி கல்வி நிறுவனத்தின் CEO மற்றும் நிறுவனர் நிமேஷ் படேல் கூறினார். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு அவதார்கள் ஆசிரியராக இருக்கும்.

இந்த அவதார்கள் மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். இந்த காலத்தில் மாணவர்கள் வானியல் இயற்பியலை படிப்பதற்கு விர்சுவல் விண்வெளிக்கே அழைத்து செல்லப்படுவார்கள், வரலாற்று பாடங்களை கற்க அந்த காலத்திற்கே அழைத்து செல்லப்படுவார்கள். இப்படி மாணவர்களுக்கு AI வழிகாட்டிகள் பாடங்களை சிறப்பாக எடுப்பார்கள்.

Desktop Bottom Promotion