Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
70 கணவர்களை கொண்ட வரலாற்றின் சக்திவாய்ந்த ராணி யார் தெரியுமா? அவங்க கணவர்களை என்ன செய்தார் தெரியுமா?
பண்டைய உலகை ஆண்ட மகாராணிகள் என்று வரும்போது நம் நினைவிற்கு முதலில் வருவது ராணி அமினா, எகிப்தின் ஹடேஷ்புட், ராணி கிளியோபாட்ரா போன்றவர்கள்தான். ஆனால் ஆப்பிரிக்காவை ஆண்ட ராணி நஜிங்கா பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆப்பிரிக்க வரலாற்றில் தலைசிறந்த பெண் தலைவர்களில் ஒருவராக ராணி நஜிங்கா எம்பாண்டி விளங்கினார். Njinga Mbandi போல தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஆட்சி முறையிலும் தனித்துவமாக விளங்கிய பெண் ஆட்சியாளர்கள் யாரும் இல்லையென்றே சொல்ல்லாம்.

புகழ்பெற்ற மற்றும் செல்வந்த அங்கோலா ஆளும் வர்க்கத்தில் பிறந்த, Njinga சமூகத்தின் விதிமுறைகள் மீறி, போர்களில் ஈடுபட்டு ராஜ்ஜியத்தை ஆளத்தொடங்கினார். அவர் அதை வேடிக்கைக்காக மட்டும் செய்யவில்லை, அவர் உண்மையிலேயே உலகை மாற்ற விரும்பியதால் அதனை செய்தார். அவரது விதிமுறைகள் மற்றும் ஆட்சி அங்கோலா வரலாற்றை மாற்றியமைத்தது.
பெயரின் அர்த்தம்
Njinga பிறக்கும் போதே சிக்கல்களுடன் பிறந்தார். அவர் பிறந்தபோது, அவருடைய கழுத்தில் தொப்புள் கொடி சுற்றியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிக்கலான சூழ்நிலையில் பிறந்த போதிலும், Njinga உயிர் பிழைத்து நன்றாக இருந்தார்.
அவர் கிம்புண்டு மொழியில் "குஜிங்கா" என்பதிலிருந்து வரும் Njinga என்று பெயரிடப்பட்டார். குஜிங்கா என்றால் முறுக்கு மற்றும் திருப்பம் என்று பொருள். சிலர் அவர் பெயர் Nzinga என்றும், மற்றவர்கள் Njinga என்றும் வாதிட்டனர்.
அவர் ராணியாவார் என்று கணிக்கப்பட்டது
நஜிங்கா ஒரு அரச குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, ங்கோலா கிலுவாஞ்சி கியா சம்பா, அங்கோலாவின் அரசராக இருந்தார். அவருக்கு ஒரு சகோதரன் இருந்தார், அவரது தந்தைக்கு பிறகு அவர் ஆட்சி பொறுப்பேற்றார்.
என்ஜிங்காவின் தாயார், கெங்கேலா கா என்கோம்பே, தனது மகள் ராணியாக வருவார் என்று தீர்க்கதரிசனம் கூறினார். பெண்கள் அரியணையில் அமர்வது வழக்கத்திற்கு மாறானதாக இருந்ததால், அவரின் தீர்க்கதரிசனம் யாராலும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அவர் பாதுகாப்பிற்காக ஓட வேண்டியிருந்தது
என்ஜிங்காவின் சகோதரர் தனது தந்தையை வீழ்த்தி ராஜ்ஜியத்தைக் கைப்பற்றினார். தனது தந்தைக்கு தான் செய்ததை போல் அவரை பதவியில் இருந்து யாரேனும் அகற்றி விடுவார்களா என்று அச்சத்தில் இருந்தார்.
அவர் தனது சகோதரியின் மகனைக் கொன்றார். மேலும் தனது சகோதரிக்கு கருத்தடை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். Njinga தனது கொடுங்கோலன் சகோதரனிடமிருந்து தப்பி ஓட வேண்டியிருந்தது. அவர் பக்கத்து ராஜ்ஜியமான மாதம்பாவுக்கு ஓடினார்.
திறமையான பேச்சுவார்த்தையாளர்
நஜிங்கா சகோதரர் எம்பாண்டி ஆட்சி வீழ்ச்சியடைந்தது. போர்த்துகீசியர்களிடமிருந்து தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தன. ராஜ்ஜியத்தின் சார்பாக போர்த்துகீசியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் தனது சகோதரியை அனுப்பினார்.
Njinga நன்கு படித்தவர் மற்றும் சரளமாக போர்த்துகீசியம் பேசினார். அவர் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்று, போர்த்துகீசிய கவர்னர் ஜோவோ கார் எ டி சோசாவை சந்தித்தார். இது போர்த்துகீசியர்களுக்கும் அவரது மக்களுக்கும் இடையே ஒரு சமாதான பேச்சுவார்த்தையாக அமைந்தது.
நஜிங்கா உறுதியாக இருந்தார் மற்றும் போர்த்துகீசியர்களுக்கான வர்த்தக வழிகளை நிறுவுவதற்கு ஈடாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் Ndongo ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இந்த சந்திப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், Njinga பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, அவருக்கு எந்த நாற்காலியும் அளிக்கப்படவில்லை. கவர்னரை விடத் தாழ்ந்தவராகத் தோன்றும் படி அவர் அமர நிர்பந்திக்கப்பட்டார்.
நஜிங்கா ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை கொண்டு வந்தார், அவர் தனது பரிவாரங்களில் ஒருவரை முட்டிபோட்டு வைத்து அவரது முதுகில் அமர்ந்தார். அந்த செயல் போர்த்துகீசியர்களை ஆச்சரியப்படுத்தியது.
திறைமையான இராஜதந்திரியாக இருந்தார்
அவர் கவர்னரை சந்தித்த பிறகு, நல்ல நம்பிக்கையின் வெளிப்பாடாக நஜிங்கா மதம் மாறினார். அவர் ஒரு கத்தோலிக்கராக ஞானஸ்நானம் பெற்றார் மற்றும் அவரது பெயரை டோனா அன்னா டி சோசா என்று மாற்றிக்கொண்டார்.
நஜிங்காவின் மத மாற்றம் ஒரு மதச் செயல் அல்ல, மாறாக கணக்கிடப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும். போர்த்துகீசிய மிஷனரிகள் தங்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தேசத்திற்கு கொண்டு வருவதற்காக ராஜ்ஜியத்தில் அமைக்க அனுமதித்தார். மேலும் அவர் டச்சு இராணுவத்துடன் சக்திவாய்ந்த கூட்டணியையும் உருவாக்கினார்.
இரண்டு ராஜ்ஜியங்களை ஆட்சி செய்தார்
சில மாதங்களுக்குப் பிறகு நஜிங்கா-வின் சகோதரர் மர்மமான முறையில் இறந்தார். அதன்பிறகு Njinga இராஜ்ஜியத்தை கைப்பற்றினார். அந்த காலக்கட்டத்தில் பெண் ஆட்சியாளர்களை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் இல்லாததால் நஜிங்கா பல எதிர்ப்புகளை சந்தித்தார்.
இந்த நேரத்தில், போர்த்துகீசிய இராணுவம் அவரைப் பின்தொடர்ந்தது. அவர் தன் மக்களை அழைத்துக்கொண்டு மீண்டும் மாதம்பா ராஜ்ஜியத்திற்கு தப்பி சென்றுவிட்டார். அவர் அந்த ராஜ்ஜியத்தை வென்று தன்னை ராணியாக அறிவித்தார். மாதம்பா ராணி ஆட்சி செய்த வரலாற்றைக் கொண்டிருந்ததால் அவர் ராணியாக மாறுவது மிகவும் எளிதாக இருந்தது.
நஜிங்கா போர்த்துகீசியர்களுக்கு எதிராக போரிட டச்சுக்களுடன் தனது கூட்டணியைப் பயன்படுத்தினார். டச்சுக்காரர்களும் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் Njinga இன் இராணுவத்துடன் இணைந்தனர். இது ஒரு புரட்சிகர கூட்டணியாக இருந்தது, ஏனெனில் ஒரு ஐரோப்பிய நாடு ஐரோப்பிய நாடு அல்லாத நாடுகளுடன் இணைந்து சக ஐரோப்பிய நாட்டிற்கு எதிராக போராடுவது இதுவே முதல் முறையாக இருந்தது.
நஜிங்கா தனது அதிகாரத்தை வலுப்படுத்தவும், போர்த்துகீசியர்களை முன்னேற விடாமல் தடுக்கவும் மற்ற படைகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். அவர் ஒரு தொலைநோக்கு இராணுவத் தலைவர் என்று அழைக்கப்பட்டார்.
டச்சு இராணுவத்துடனான அவரது கூட்டணியின் மூலம், அவர் Ndongo இராஜ்ஜியத்தை மீட்டெடுத்தார். அவர் இரண்டு ராஜ்ஜியங்களுக்கும் ராணியானார்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்
நஜிங்கா ஒரு கடுமையான போர்வீரராக இருந்தார், அவள் தன்னை ராணி என்று குறிப்பிடாமல் "ராஜா" என்று குறிப்பிடுகிறார். அவர் தனது அறுபதுகளில் கூட தனது இராணுவத்தை போருக்கு வழிநடத்தினார். நஜிங்கா மேலும் இராணுவத்தில் பெண்களை இணைத்து அவர்களில் சிலரை ஜெனரல்களாகவும் ஆக்கினார். அரசாங்கப் பதவிகளில் பெண்களை வைத்திருப்பதன் மூலம் அவர் அதை ஒரு படி மேலே கொண்டு சென்றார். நஜிங்கா சமூக எதிர்பார்ப்புகளை மீறி பெண்களுக்கான பதவிகளை உருவாக்கினார்.
நஜிங்காவின் கணவர்கள்
மற்ற எந்த பெண் ஆட்சியாளர்களுக்கும் இல்லாத வகையில் நஜிங்கா அதிகளவு கணவர்களை கொண்டிருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் படி அவருக்கு கிட்டத்தட்ட 70 கணவர்கள் இருந்தார்கள். நஜிங்கா ஆண்களைப் போல உடையணியும் வழக்கம் கொண்டவராக இருந்தார். அதைவிட முக்கியமாக அவர் தனது கணவர்களை பெண்களைப் போல ஆடையணிய கட்டாயப்படுத்தினார்.
அவருடன் இரவில் உறவு கொள்வதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் சாகும் வரை போரிட்டனர். இந்த சண்டையில் ஜெயிப்பவர்கள் அன்று இரவு நஜிங்காவுடன் உடலுறவு கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications












