Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
புரட்டாசி மாதம் 2024: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் ஆகும்.. அன்றைய மாதத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேங்கள் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்களுக்கும் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில், சூரியன் 'கன்னி' ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பது பற்றி இந்த பதிபில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மார்கழியை விட புரட்டாசியையே பெருமாளுக்குரிய மாதமாக பக்தர்கள் வணங்குகிரார்கள்... அதோடு இது முன்னோர்களை வழிபடுவதற்கான மகாளய அமாவாசை, அம்பிகை வழிபாட்டிற்குரிய நவராத்திரி ஆகியவற்றை கொண்ட மாதமாகும். இதனால் இது வழிபாட்டிற்குரிய மாதமாகவும், உயர்வான புண்ணிய பலன்களை தரக் கூடிய மாதமாகவும் கருதப்படுகிறது.
புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது. இந்து மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர். ஆனால் தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை.
புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நெற்றியில் பெருமாளுக்குரிய திருநாமம் ஈட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில் சிறு உயிர்களும் உண்டு மகிழ மாக்கோலம் ஈட வேண்டும். பின்னர் வீட்டில் விளக்கேற்றி பெருமாள் வழிபாடு செய்யலாம். பல நாமாவளிகள் சொல்ல முடியாவிட்டாலும் "கோவிந்தா கோவிந்தா" என்று ஒரே ஒரு மந்திர செல்லை சொல்லி வணங்கலாம்.
பெருமாள் வழிபாடு, நவராத்திரி பூஜை, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக்கொள்ள தொடங்குவது சிறந்தது. பெருமாள் வழிபாடு, நவராத்திரி பூஜை, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியில் குழந்தைகளுக்கு புதிதாக கல்வி கற்றுக்கொள்ள தொடங்குவது சிறந்தது.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று பெயர். இந்த மாததில் வரக்கூடிய பெளர்ணமிக்கு பின் அமாவாசை வரை வரக்கூடிய 15 நாட்கள் மகாளயபட்சம் என்று பெயர். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட உகந்த நாட்களாகும்.
புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாதவை
புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யப்படுவதில்லை.. இருப்பினும், ஒரு நிலம், மனை வாங்கி பத்திரப் பதிவு செய்ய ஏற்ற மாதமாகும். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வந்தால் தோஷங்கள் அனைத்து நீங்கி நன்மை நடக்கும்..



Click it and Unblock the Notifications