Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
திருப்பதிக்கு எந்த மாதத்தில் சென்றால் கூட்டத்தை தவிர்க்கலாம் தெரியுமா?
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கோயிலுக்கு தினசரி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அங்கு வரும் கூட்டம்தான். எந்த நேரத்தில் போனாலும் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். சிறியதாக வார விடுமுறை கிடைத்தாலும் கூட மக்கள் விரும்பி செல்லும் இடம் திருப்பதிதான்.
அதில் வேலைக்கு செல்பவர்கள் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதாலும் வங்கி ஊழியர்களுக்கு எல்லா ஞாயிறுகளிலும் குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் விடுமுறை என்பதாலும் அவர்கள் குடும்பத்துடன் செல்லும் இடம் திருப்பதிதான்.

மேலும் திருப்பதியில் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க சுவாமியை காணும் வினாடிகள் மிக மிக குறைவாக இருக்கும். சில நேரம் நிற்கக் கூட விடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். மணிக்கணக்கில் காத்திருந்து திடீரென நம்மை அரை நொடி கூட பார்க்க விடாமல் தள்ளி விடுவார்கள்.. திருப்பதிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். ஆனால் பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என்கின்றனர் தேவஸ்தான ஊழியர்கள்..
எத்தனை கூட்டம் வந்தாலும் தேவஸ்தான நிர்வாகத்தினர் அதை சமாளிக்கிறார்கள். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் பல மாதங்களுக்கு முன்பே காத்திருந்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு சென்றாலும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சில மாதங்களில் சென்றால் திருப்பதியில் கூட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் ஃப்ரீயாக சென்ரு வரலாம்..
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய சிறந்த மாதம் என்றால் பிப்ரவரியும், நவம்பரும்தான். இந்த மாதங்களில் மிதமான தட்பவெப்பநிலை நிலவும் என்பதால் இது பக்தர்களுக்கு நல்லதொரு உணர்வை ஏற்படுத்தும். கோடை விடுமுறையில் கூட்டம் அலைமோதும் சுவாமி தரிசனம் செய்யவே ஒன்றரை நாட்கள் ஆகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை புரட்டாசி தொடங்காத வரை பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும்.
இதனால் அந்த மாதங்களில் திருப்பதி சென்றால் விரைவாகவும் நிம்மதியாகவும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்கின்றனர் தேவஸ்தான ஊழியர்கள்.. அது போல் ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். எனவே திருப்பதிக்கு அந்த பண்டிகையின் போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்கள் வரமாட்டார்கள். எனவே விநாயகர் சதுர்த்தியின் போதும் கூட்டம் குறைவாக இருக்கும். அது போல் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது திருப்பதியில் கூட்டம் குறைவாக இருக்கும். அதனால் அப்போது திருப்பதி கோவிலுக்கு சென்று வரலாம்.. இதனால் பெரும் கூட்டத்தையும் அதனால் ஏற்படும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்..



Click it and Unblock the Notifications