Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
முகேஷ் அம்பானி அவரது வீட்டிற்கு எவ்வளவு கரண்ட் பில் கட்டுறாரு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..
Mukesh Ambani: ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவர் சமீபத்தில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை உலகமே வியந்து பார்க்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த திருமணத்திற்கு பல மில்லியன் கணக்கில் செலவழித்துள்ளார்.
முக்கியமாக திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாப்பட்ட ஆனந்த் அம்பானியின் திருமண வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணைய தளங்களில் அதிகம் பரவி வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி திருமணத்திற்கு மில்லியன் கணக்கில் செலவழித்த முகேஷ் அம்பானி, அவரது ஆரம்பரமான வீடான ஆண்டிலியாவிற்கு எவ்வளவு கரண்ட் பில் கட்டுகிறார் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?

கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனது கும்பத்தினருடன் மும்பையில் உள்ள ஆண்டிலியா என்னும் ஆரம்பரமான வீட்டில் தான் வசித்து வருகிறார். இந்த வீடு பார்ப்பதற்கே பிரமாண்டமாக ஒரு பெரிய மாளிகை போன்று இருக்கும். 27 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டில் 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், 9 பெரிய லிப்ட்கள், நீச்சல் குளம், 3 ஹெலிபேடுகள், 160 கார்கள் நிறுத்தும் அளவில் பெரிய இடம் உள்ளன.
இவ்வளவு பெரிய வீடு 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. 4 லட்சம் பரப்பளவைக் கொண்ட இந்த வீடு கட்டுவதற்கு சுமார் ரூ.15,000 கோடி செலவானது. இந்த வீட்டின் ஆடம்பரமான தோற்றம், வசதிகள், மற்றும் வடிவமைப்பு காரணமாக அரண்மனை போன்று அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது.
முக்கியமாக இவ்வளவு பெரிய வீட்டில் சுமார் 600-க்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். அதோடு இந்த வீட்டில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் தாராளமாக சம்பளத்தைப் பெறுவதாக கூறுப்படுகிறது. சில அறிக்கைகளின் படி, இங்கு பணிபுரிபவர்கள் மாதத்திற்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இது தவிர, மற்ற வசதிகளையும் அனுபவிக்கிறார்களாம்.
ஆண்டிலியா கட்டிடமானது மிகவும் அகலமானது மற்றும் உயரமானதும் கூட. எனவே இதற்கு உயர் அழுத்த மின் இணைப்பு தேவைப்படும். அதுவும் இந்த வீட்டிற்கு செலவாகும் மின்சாரத்தின் அளவானது மும்பையில் உள்ள 7,000 நடுத்தர மக்களின் குடும்பங்களுக்கு செலவாகும் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. யூனிட் அடிப்படையில் கூற வேண்டுமானால், மாதாந்திர நுகர்வு தோராயமாக 6,37,240 யூனிட்டுகள் இருக்கும். இதன் விளைவாக கரண்ட் பில் மட்டும் ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு ஆரம்பரமான அரண்மனை போன்ற வீட்டு கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, முகேஷ் அம்பானியிடம் உள்ள அபரிமிதமான செல்வத்தையும் வெளிக்காட்டுகிறது என்றே கூற வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications