Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
தீபாவளியின் போது இந்த விஷயங்களை தெரியாமகூட செஞ்சுராதீங்க... இல்லனா பணக்கஷ்டம் வீட்டில் தாண்டவமாடும்...!
Diwali 2023: கொண்டாட்டத்தின் திருவிழாவான தீபாவளி நெருங்கி விட்டது. இந்த நாளில் லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வருவார் என்பது நம்பிக்கை. தீபாவளி நாட்களில், லட்சுமி தேவியை மகிழ்விக்க பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளுடன், சில விஷயங்களைத் தவிர்ப்பதும் அவசியம். தீபாவளி நாட்களில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. தீபாவளியன்று தடை செய்யப்பட்ட இந்த வேலைகளைச் செய்தால், அதற்குப்பிறகு நீங்கள் என்ன செய்தாலும் லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்காது, மேலும் உங்கள் வீட்டில் பணக்கஷ்டமும் நீங்காது.

காலை நீண்ட நேரம் தூங்கக்கூடாது
ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்றாலும், காலையில் தாமதமாக எழுபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கத்தான் செய்கின்றனர். சாஸ்திரங்களின்படி தீபாவளி அன்று அனைவரும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். இந்த நாட்களில் சூரிய உதயம் வரை தூங்குபவர்களால் மகாலட்சுமியின் அருளைப் பெற முடியாது.
பெற்றோர்கள் மற்றும் வயதில் மூத்தவர்களை அவமதிக்கக்கூடாது
தீபாவளியன்று, எந்தச் சூழ்நிலையிலும் மதத்தை அவமதிக்கும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த நாளில் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்க வேண்டும். பெற்றோரை அவமரியாதை செய்பவர்களுக்கு தெய்வங்களின் அருள் கிடைக்காது, வறுமையும் அதிகரிக்கும். இந்த நாளில் யாரையும் ஏமாற்றாதீர்கள், பொய் சொல்லாதீர்கள் அனைவரையும் அன்புடன் நடத்துங்கள்.
வீட்டை அழுக்காக வைத்துக்கொள்ளக்கூடாது
தீபாவளியன்று வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டின் அனைத்து மூலையையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியும் எந்தவிதமான துர்நாற்றமும் இருக்கக் கூடாது. சுத்தம் செய்வதோடு, நறுமணப் பொருட்களையும் பயன்படுத்தி வீட்டை நல்ல வாசனையாக வைத்திருக்க வேண்டும்.
கோபப்படக்கூடாது
தீபாவளியன்று ஒருவர் கோபப்படக்கூடாது, மேலும் சத்தமாக கத்துவதும் அசுபமானது. இந்த நாட்களில் கோபப்படுபவர்கள் அல்லது சத்தமாக கூச்சலிடுபவர்கள் லட்சுமியின் அருளைப் பெற முடியாது. வீட்டில் அமைதியான, இனிமையான மற்றும் தூய்மையான சூழ்நிலையை பராமரிக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடுகளில் லட்சுமிதேவியின் அருள் நிறைந்திருக்கும்.
இந்த நாட்களில் வீட்டில் எந்தவிதமான சண்டையும் இருக்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அன்புடன் வாழ வேண்டும், மகிழ்ச்சியான சூழலைப் பேண வேண்டும். சண்டை, சச்சரவு இருக்கும் வீடுகளில் அம்மன் அருள் இருக்காது. வீட்டிலும், வெளியிலும் யாருடனும் வாக்குவாதம், சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மாலை நேரத்தில் தூங்குவது
சில விசேஷ சூழ்நிலைகளைத் தவிர பகலிலோ அல்லது மாலையிலோ தூங்கக் கூடாது. ஒரு நபர் நோய்வாய்ப்பட்டிருந்தால், வயதானவர் அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அவர்கள் பகலில் அல்லது மாலையில் தூங்கலாம், ஆனால் ஆரோக்கியமான நபர் பகலில் அல்லது மாலையில் தூங்கக்கூடாது. சாஸ்திரங்களின்படி, அத்தகைய நேரங்களில் தூங்குபவர்கள் ஏழைகளாகவே இருப்பார்கள்.
குடிபோதையில் இருக்கக்கூடாது
சாஸ்திரங்களின்படி, இந்த நாட்களில் எந்த வகையான போதைப்பொருட்களையும் உட்கொள்வது தவறான செயலாகும். தீபாவளி தினத்தன்று மது அருந்துபவர்கள் எப்போதும் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும். குடிபோதை வீட்டின் அமைதியைக் குலைத்து அனைத்து உறுப்பினர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் வாக்குவாதங்கள் ஏற்படலாம், லட்சுமி பூஜையும் சரியாக நடைபெறாது.



Click it and Unblock the Notifications
