Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நூடுல்ஸ் மற்றும் மோமோவை பிரசாதமாக கொடுக்கும் காளி கோவில்... இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா?
Chinese Kali Temple: இந்தியாவின் கோவில்கள் உலகப்புகழ்பெற்றவை, அதற்கு காரணம் அவற்றின் கட்டிடக்கலையும், வரலாறும் மட்டுமல்ல. அந்த கோவில்களில் உள்ள சில தனித்துவமான பழக்கவழக்கங்களும்தான். இந்தியாவில் வினோதமான நடைமுறைகள் கொண்ட பல கோவில்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான கோவிலைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
சமீபத்தில், கொல்கத்தாவில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான சீன காளி கோவில் இணையத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த கோவில் டாங்ராவில் உள்ள மாதேஷ்வர்தலா சாலையில் அமைந்துள்ளது. கிழக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள டாங்ரா பகுதியில், இந்தியாவை தங்கள் வீடாக மாற்றிய சீன குடியேறிகள் வசிக்கின்றனர்.

1930-களில் சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், தங்குமிடம் தேடிய அகதிகளைஇந்தியாவிற்கு வர வழிவகுத்தது. கம்யூனிசம், பௌத்தம் போன்ற தத்துவங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சீன மக்கள் ஒரு இந்து தெய்வத்தை வழிபடுவது மிகவும் சுவராஸ்யமான ஒன்றாகும்.
சைனீஸ்(சீனா) காளி கோவிலின் கதை
டாங்ரா பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் ஒரு மரத்தின் அடியில் குங்குமம் தடவிய இரண்டு கிரானைட் கற்களை பல ஆண்டுகளாக வணங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது 10 வயது சீன சிறுவன் ஒருவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தான், மருத்துவர்களால் அந்த சிறுவனை குணப்படுத்த முடியவில்லை. கடைசி முயற்சியாக, பெற்றோர்கள் அந்த சிறுவனை கற்களுக்கு முன்னால் கிடத்தி, பல நாட்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது, அந்த சிறுவன் குணமடைந்தான். இந்த சம்பவம் தெய்வீகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது, மேலும் வங்காள மற்றும் சீன சமூகங்கள் ஒன்றிணைந்து காளி தெய்வத்தின் நினைவாக ஒரு கோவிலைக் கட்டின.
கோவிலின் தனிச்சிறப்பு
டாங்ராவில் உள்ள இந்த புகழ்பெற்ற கோவிலில் இந்திய மற்றும் சீன பழக்கவழக்கங்களின் கலவை காணப்படுகிறது. மற்ற காளி கோயில்களில் காணப்படுவது போல, சிவப்பு செம்பருத்தி மாலைகள் தெய்வத்தின் சிலையை அலங்கரிக்கின்றன. இருப்பினும், மாலை நேர ஆரத்தி, சீன தேவாலயங்களில் காணப்படும் ஒரு சடங்கை உள்ளடக்கியது. காகிதத்தால் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள் தீய சக்திகளை விரட்டப் பயன்படுத்தப்படுகின்றன. சீன தூபக் குச்சிகள் ஏற்றப்படுகின்றன, மேலும் இதன் நறுமணம் மற்ற கோவில்கள் உணரப்படும் நறுமணத்திலிருந்து வேறுபட்டது.
கோவிலின் பிரசாதம்
இந்தியக் கோவில்களின் தனிச்சிறப்பே கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம்தான். இந்து மதத்தில் கோவில் பிரசாதங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தெய்த்திற்கும் பிரசாதம் வழங்குபவருக்கும் இடையில் அன்பளிப்பாக வழங்கப்படும் பரிசு என்று நம்பப்படுகிறது. சீன காளி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் உங்களை ஆச்சரியப்படுத்தும். பழங்கள் அல்லது இனிப்புகளுக்குப் பதிலாக, இது சாப் சூய், நூடுல்ஸ், வறுத்த காய்கறிகள், மோமோஸ் மற்றும் ஸ்டிக்கி அரிசி உள்ளிட்ட சீன உணவு வகைகள் இங்கு பிரசாதங்களாக வழங்கப்படுகிறது. இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் இந்தோ-சீன உணவு, இந்தியாவில் சீனர்கள் குடியேறியதன் விளைவாகும். இரண்டு கலாச்சாரங்களும் கலந்த பிறகு இந்த உணவுகள் உருவானது.
கலாச்சார பிணைப்பு
சீன காளி கோவிலின் கதை மனித குலத்தின் ஒற்றுமைக்கான அடையாளமாகும். வெவ்வேறு மதங்களும் சமூகங்களும் தங்கள் தனித்துவத்தைப் கடைபிடித்தாலும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நம்பிக்கையும், மதமும் முற்றிலும் எதிரெதிர் துருவங்களில் இருந்தாலும், மக்களை அவற்றால் இணைக்கு முடியும் என்பது சைனீஸ் காளி கோவில் சிறந்த சான்றாகும்.



Click it and Unblock the Notifications