Children's Day 2023: இந்தியாவில் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன தெரியுமா?

Children's Day 2023: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் குழந்தைகள் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக குழந்தைகள் தினமானது கொண்டாடப்படுகிறது. நேரு அவர்கள் நவம்பர் 14, 1889-ல் பிறந்தார். எனவே அவருடைய பிறந்த நாளை இன்னும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

1964 நவம்பர் 20 ஆம் தேதி உலக குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது. இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள், நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள். எனவே இந்த குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதைப்பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

Childrens Day 2023: Rights That Children Have In India In Tamil

குழந்தைகளுக்கான உரிமைகள் என்னென்ன?

* 6-14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும்.
* குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.
* குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான உரிமைகளை சரியாக வழங்க வேண்டும்.
* வயது மற்றும் அவர்களின் வலிமைக்கு பொருந்தாத தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது.
* குழந்தைகளுக்கு சம வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
* குழந்தைகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு தேவையான மரியாதை, சுதந்திரம், சரியான சுகாதாரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், உடல், மன வளர்ச்சி, ஆரோக்கியமான சத்தான உணவு போன்றவற்றை வழங்க வேண்டும்.
* ஆய்வு மதிப்பீட்டின்படி, உலகில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட சுமார் 153 மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவற்றை மாற்ற வேண்டும். குழந்தை தொழிலாளர்களை அறவே ஒளிக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தவறு. அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்களால் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் பெரியவர்களாக என்றும் வளர முடியாது.
* அவர்களுக்கு சரியான கல்வியறிவை வழங்க வேண்டும்.
* குழந்தைகள் தினம் கொண்டாடுவதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ பாகுபாடு இல்லாமல் அவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்.
* அரசாங்கம் உலகெங்கிலும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் நலனை மேம்படுத்த அரசாங்கம் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
* பள்ளிகளில் குழந்தைகளுக்கான கற்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும். டிஜிட்டல் முறை மூலம் குழந்தைகளுக்கான கற்கும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்.
* குழந்தைப் பருவ நோய்க்கு எதிராக தடுப்பூசி வழங்க வேண்டும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாட்டு, நடனம், மேடை நாடகங்கள், பேச்சு மற்றும் அறிவிப்பு போட்டிகளை வழங்க வேண்டும். குழந்தைகளை பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் ஏற்ற ஒரு சட்டத்தை நாம் இயற்ற வேண்டும். குழந்தைகள் நம்மளைப் போல தனிப்பட்டவர்கள். எனவே அவர்களுக்கு சம உரிமையையும் சம அந்தஸ்தையும் வழங்க வேண்டும்.

உயிர் வாழ்வதற்கான உரிமை வழங்க வேண்டும்

குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்க வேண்டும். அவர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். உணவு, தங்குமிடம் மற்றும் உடை போன்ற சிறந்த உரிமைகளை வழங்க வேண்டும். சுகாதாரப் பாதுகாப்பு, பாதுகாப்பான குடிநீர், சத்தான உணவு, சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும்.

பாதுகாப்பு உரிமை வழங்க வேண்டும்

குழந்தைகளுக்கான பாதுகாப்பு உரிமையை வழங்க வேண்டும். உடல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமையை வழங்க வேண்டும்.

பங்கேற்பதற்கான உரிமையை வழங்க வேண்டும்

குழந்தைகளுக்கு கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை வழங்க வேண்டும். தகவல் அறியும் உரிமையை வழங்க வேண்டும். எந்தவொரு முடிவெடுப்பிலும் பங்கேற்கும் உரிமையை வழங்க வேண்டும்.

வளர்ச்சிக்கான உரிமை வழங்க வேண்டும்

குழந்தைகளுக்கு கல்வி உரிமை, கற்கும் உரிமை, ஓய்வெடுக்கவும், விளையாடுவதற்கான உரிமை அனைத்து வகையான வளர்ச்சிக்கும், அவர்களின் உணர்ச்சி மற்றும் மனநிலையை உணர்ந்து கொள்ளும் உரிமை போன்றவற்றை வழங்க வேண்டும்.

Desktop Bottom Promotion