Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
சாணக்கிய நீதி படி ஆண்களுக்கு இந்த வகை பெண்களின் மீது ஏற்படும் மோகம் அவங்க வாழ்க்கையை சிதைச்சிருமாம்...!
இந்தியாவின் மிகவும் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் மனித வாழ்வின் மேன்மைக்கான பல செய்திகளை தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அதன்படி அனைவரும் ஆசைப்படுவது நிம்மதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்பதுதான், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு தடையாக இருப்பதும் நாம்தான்.
சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் சில விஷங்களை சந்திக்கும் வரை மட்டுமே ஆரோக்கியமான மற்றும் தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று கூறியுள்ளார். இந்த விஷங்களுக்கு இரையாவது ஒருவரது அமைதியான வாழ்க்கையை மட்டுமல்ல, மனசாட்சியையும் பாதிக்கும்.

சாணக்கிய நீதியில், "அனாப்யஸே விஷம் சாஸ்த்ரமகீர்ணயே போஜனம் விஷம் | தரித்ரஸ்ய விஷம் கோஷ்டி விருதஸ்ய தருணி விஷம்" என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த 4 விஷங்கள் அவ்வப்போது வருகின்றன, ஆனால் அவர் அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துகிறார் என்பது அவரது வெற்றிக்கு வழிவகுக்கிறது.
அனாப்யாஸே விஷம் சாஸ்திரம்
பயிற்சி செய்யாமல் சாஸ்திரத்தின் தத்துவார்த்த அறிவைப் பெறுவது விஷத்திற்கு சமம். 'சாஸ்திர ஞானத்தில்' பண்டிதர் ஆனதாகப் பெருமையடித்துக் கொள்ளும் எவரேனும், அதைப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே மனப்பாடம் செய்து வாழ்ந்து வந்தால், அந்த விஷம் ஏற்படுத்தும் பாதிப்பால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
எதிர்காலத்தில், இது அவரது பொய்களுக்காக அவமானப்படுத்தப்படுவதற்கும், அவரது மரியாதையை இழப்பதற்கும் வழிவகுக்கும். எனவே அனைவருக்குமே அரைகுறையான அறிவு விஷத்திற்குச் சமம்.
அஜீர்ணயே போஜனம் விஷம்
வயிறு பிரச்சினை உள்ளவர்களுக்கு உணவே ஒரு விஷமாகும், அது அவரது உடலை உள்ளிருந்து மேலும் அழுகச் செய்யும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் செரிமானம் அவருடைய சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவதற்கு அவரை ஊக்குவிக்கிறது, ஆனால் மோசமான செரிமானம் கொண்ட ஒரு மனிதன், சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். வயிறு உபாதைகளுடன் உணவு உட்கொள்வது நமக்குள் விஷமாக மாறி, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. அவர் உடல்நிலை சரியாகும் வரை, அவர் உணவைத் தவிர்க்க வேண்டும்.
தரித்ரஸ்ய விஷம் கோஷ்டி
வறுமையில் உள்ள ஒரு மனிதனுக்கு, ஒரு பண்டிகையின் பொது செல்வந்தர் போல இருக்க வேண்டுமென்ற ஆசை, அவரது அமைதி, செல்வம் மற்றும் மரியாதையைக் கெடுத்துவிடும். அவர் தன்னைத் தாழ்வாக நினைக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல, பேராசையுடன் ஒருவரின் ஆடம்பர வாழ்க்கையை வாழ முயற்சிப்பது வாழ்க்கையில் விஷத்தை கலந்துவிடும். உங்கள் வசதிக்கு ஏற்ப வாழாமல், உங்களிடம் உள்ளதை அவமதிப்பது மற்றும் மற்றவர்களைப் போல வாழ வேண்டுமென்ற எண்ணம், வாழ்க்கையில் அவமானம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் துக்கம் ஆகியவற்றைக் கொண்டுவரும்.
விருத்தஸ்ய தருணி விஷம்
வயது முதிர்ந்த ஆண் ஒருவர், தன்னை விட இளைய பெண்ணை ஆசையுடன் தேடுவது விஷத்திற்கு சமம். ஒரு நல்ல மற்றும் இணக்கமான திருமணம் குறைந்த வயது வித்தியாசம் அல்லது ஒத்த வயதினரிடையே மட்டுமே நீடிக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்துகொண்டு திருப்திப்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். உங்கள் வயதை விட மிகக் குறைவான பெண்களை திருமணம் செய்வது அல்லது உறவுகொள்வது ஒருவரது குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், அவரது ஆசையைத் பூர்த்தி செய்ய முடியாமல் தாம்பத்திய வாழ்வில் தீராத மோதல்கள் ஏற்படும்.



Click it and Unblock the Notifications
