Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் ஆபத்துகள் சூழ்ந்திருக்குமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு திறமையான அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர். உலகின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் விஷ்ணுகுப்தர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்பட்டார். சாணக்கியரால் எழுதப்பட்ட சாணக்கிய நீதி எந்த காலகட்டத்திற்கும் பொருத்தமானது. சாணக்கிய நீதி மதம், வாழ்க்கையின் அர்த்தம், கடமை மற்றும் வாழ்க்கையின் பல்வேறு கொள்கைகளை விவரிக்கிறது.
மனித சமுதாயத்தின் நலனுக்காக சாணக்கிய நீதியில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபரின் சில கெட்ட பழக்கங்கள் அவரை அழிக்கக்கூடும். இந்த பழக்கங்கள் இருந்தால், உடனடியாக அவற்றை நிறுத்த வேண்டும். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, இவை ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் கெட்ட பழக்கங்களாகும்.

தீய செயல்களை செய்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, மோசடி அல்லது மோசமான செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின் செல்வம் நீண்ட காலம் நீடிக்காது. அத்தகைய நபர்களைச் சுற்றி எப்போதும் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும், இதனால் அவர்களின் பணத்தை விரைவாக வீணடிப்பார்கள்.
அதிக நேரம் தூங்குபவர்கள்
காலை முதல் மாலை வரை தூங்குபவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்காது. சூரியன் உதிக்கும் வரை உறங்குபவர்கள் வாழ்க்கையில் வறுமையை எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் உயர்வை அடைய மாட்டார்கள் என்கிறார் சாணக்கியர்.
அதிகம் சாப்பிடுபவர்கள்
மனித வாழ்க்கைக்கு உணவு ஒரு அடிப்படைத் தேவையாகும், ஆனால் 'அளவிற்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'. தேவைக்கு அதிகமாக உண்பவர்கள் விரைவில்ஏழைகளாக மாறுகிறார்கள். அதிக உணவை உட்கொள்வது ஒரு நபரை வறுமைக்கு அழைத்துச் செல்கிறது, அத்தகையவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வமான ஆரோக்கியத்தை இழக்கிறார்கள்.
பேச்சில் நிதானம் இல்லாதவர்கள்
பேச்சில் கட்டுப்பாடில்லாதவர்களுடனும், எப்போதும் கடுமையான வார்த்தைகளை பேசுபவர்களுடனும் லக்ஷ்மி தேவி ஒருபோதும் வாசிக்க மாட்டார். ஏனென்றால், பிறரின் மனதைப் புண்படுத்துபவர்கள் மீது லட்சுமி தேவி கோபம் கொள்கிறார். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் சீக்கிரம் ஏழைகளாகி விடுவார்கள்.
தினமும் பல் துலக்காதவர்கள்
வாய் சுகாதாரம் என்பது ஓட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். பற்களை சுத்தம் செய்யாதவர்களுடன் லக்ஷ்மி ஒருபோதும் தங்க மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் மீது லட்சுமி தேவி கோபம் கொள்கிறார், அதனால் அவர்கள் விரைவில் ஏழையாகிறார்கள்.
சுகாதாரமின்றி வாழ்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தங்கள் வாழ்க்கைச் சூழலை சுத்தமாக வைத்திருக்காதவர்களுடனும், அழுக்கு ஆடைகளை அணிந்தவர்களை லக்ஷ்மி தேவி ஒருபோதும் ஆசீர்வதிக்க மாட்டார். அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் மரியாதை எப்போதும் கிடைக்காது.
மற்றவர்களை மோசமாக விமர்சிப்பவர்கள்
ஒருவரை பின்னால் இருந்து விமர்சிக்கக் கூடாது என்கிறார் சாணக்கியர். மற்றவர்களைக் குறை கூறுபவர்கள் இந்த பழக்கத்தால் என்றாவது ஒருநாள் அவமானத்தைச் சந்திக்க நேரிடும். எனவே இந்த கெட்ட பழக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும். மேலும், மற்றவர்களை விமர்சிப்பவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
