Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 குணமுள்ள ஆண்களுடன்தான் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்களாம்...உங்ககிட்ட எத்தனை இருக்கு?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை சாணக்கிய நீதி என்ற நூலில் தொகுத்துள்ளார். வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான பல வழிகளை சாணக்கியர் இந்த நூலில் கூறியுள்ளார். ஆச்சார்ய சாணக்கியரின் இந்த அறிவுரைகளை நம் வாழ்வில் பின்பற்றினால், மிகப்பெரிய நெருக்கடிகளைக் கூட நாம் எளிதாகக் கடக்க முடியும்.
பெண்களை மகிழ்விக்கும் மற்றும் அவர்களின் இதயங்களைக் கவரும் விஷயங்களையும் சாணக்கிய நீதி விவரிக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி சாணக்கிய நீதியில் நிறைய எழுதப்பட்டுள்ளது. பெண்கள் ஆண்களிடம் விரும்பும் சில பழக்கவழக்கங்கள் உள்ளன, இத்தகைய பழக்கவழக்கங்கள் உள்ள ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புவார்கள். அது என்னென்ன பழக்கவழக்கங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நேர்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பொதுவாக நேர்மையான ஆண்களை விரும்புகிறார்கள். ஒரு நேர்மையான நபர் எப்போதும் தனது உறவுகளில் பொய் சொல்லி ஏமாற்றமாட்டார. பெண்கள் எப்போதும் நேர்மையான, உண்மையான அன்பை வெளிப்படுத்தும் ஒரு ஆணையே விரும்புவார்கள். ஒரு நேர்மையான ஆண் தனது வாழ்க்கைத்துணையை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்.
நல்ல நடத்தை
ஒருவரின் நல்ல நடத்தை அனைவரையுமே கவரக்கூடும். அதேபோல், ஒரு ஆண் நல்ல நடத்தை உள்ளவராக இருந்தால், ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக அவரைப் பிடிக்கும். ஆண்களின் பேச்சில் உள்ள இனிமையும் பாசமும் அவர்களின் சிறப்பு குணங்கள். இந்த குணங்களை உள்ள ஆணை எப்படிப்பட்ட பெண்ணும் விரும்புவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பெண்களை மதிக்கும் பழக்கம் உள்ளவர்கள்
ஒவ்வொரு பெண்ணும் தன் துணை எப்போதும் தன்னை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும் திறன் கொண்ட ஆண்களுடன் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் பிரச்சினைகளைக் கேட்டு அதற்கு தீர்வு காணும் ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய ஆண்களை பெண்கள் பார்த்தவுடன் காதலிப்பார்கள்.
கண்ணியமான ஆண்கள்
சாணக்கிய நீதியின் படி, பெண்கள் கண்ணியமான ஆண்களிடம் விரைவில் காதலில் விழுவார்கள். ஆணவம் இல்லாத, தங்களின் தவறை பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் பெண்களிடம் மிகவும் பிரபலமானவராக இருப்பார்கள். ஆண்களின் இந்த குணம் ஒரு உறவில் அன்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். கண்ணியமான ஆணுடன் வாழும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நம்பிக்கைக்குரிய ஆண்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஒரு பெண் தன்னைப்பற்றிய ரகசியத்தை ஒரு ஆணிடம் கூறி, அதை அவர் தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டால், அவர்கள் பெண்களின் பார்வையில் சிறந்த ஆணாக கருதப்படுகிறார்கள். பெண்களுக்கு இந்த வகையான விசுவாசமான ஆண்களை மிகவும் பிடிக்கும். பெண்கள் தங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் மற்றும் அவர்களின் வார்த்தைகளை காப்பாற்றும் ஆண்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

