Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் எப்போதும் வாழ்க்கையில் இலாபத்தை குவிப்பார்களாம்...!
Chanakya Niti for Success: சாணக்கியரின் பெயர் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் தவிர்க்க முடியாத ஒரு பெயராகும். அதற்கு காரணம் அவரின் சாதனைகளும், பல துறைகளில் அவர் கொண்டிருந்த மேன்மையான ஞானமும்தான். அவரின் போதனைகளை முழுமையாக பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றியை சுலபமாக அடையலாம்.
சாணக்கியரின் அனுபவத்தில் உதித்த சாணக்கிய நீதி இன்றும் பயனுள்ளதாக இருப்பதால்தான் இன்றும் அவரின் பெயர் நிலைத்து நிற்கிறது. அனைத்து மனிதர்களும் மனிதனும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

எண்ணிலடங்கா முயற்சிகள், கடின உழைப்பு இருந்தும் வெற்றி கிடைக்காமல் போவது வாழ்க்கையில் பலரும் சந்திக்கும் சூழலாகும். இதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். உங்கள் வாழ்க்கையிலும் இது போன்ற ஏதாவது நடந்தால், சாணக்கியரின் இந்த வார்த்தைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். குறிப்பாக நீங்கள் ஒரு வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் இந்த அறிவுரைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு வேலையிலும் வெற்றி பெற, தொடர்ச்சியான வேலையும், நேரத்தையும் எவ்வாறு பின்பற்றுவது என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். எந்தப் புதிய வேலையைத் தொடங்கினாலும் சரியான நேரத்தைப் பார்த்த பிறகே தொடங்க வேண்டும். சாணக்கியர் ஒரு நபரின் நேரம் நன்றாக இருக்கும் போது, அந்த நேரத்தில் செய்யப்படும் கடின உழைப்பு அதிசயங்களை செய்யும் என்று நம்புகிறார். இது வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ஒருவருக்கு இன்னொரு நபரை அடையாளம் காணும் கலை இருக்க வேண்டும். தன்னுடைய நண்பர் யார், எதிரி யார் என்பதை அவர்கள் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். தன்னை வெளிப்படையாக எதிர்க்கும் எதிரியைப் பற்றி ஒருவர் எச்சரிக்கையாக இருக்கிறார்கள், ஆனால் நண்பர்களின் வடிவத்தில் எதிரிகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது மற்றும் கடினம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நேர்மை உள்ளவர்கள் தாமதமாக வெற்றி பெறலாம், ஆனால் சில காலத்திற்குப் பிறகு நிச்சயமாக அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இருப்பினும்,எப்போதும் முதலில் நேர்மையான நபரே தாக்குப்படுவார்கள். இத்தகைய இயல்புடையவர்கள் அலுவலகத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உறவிலும் ஏதோ ஒரு சுயநலம் மறைந்திருப்பதாக சாணக்கியர் நம்பினார். பின்னர் அது ஒரு நண்பர், உடன் பணிபுரிபவர் அல்லது வேறு எந்த உறவினருடன் உள்ள உறவாக இருந்தாலும் சரி அதில் நிச்சயம் ஒரு சுயநலம் இருக்கும். இந்த உறவுகள் அனைத்தும் சுயநலத்தின் அடித்தளத்தில் உள்ளது. எனவே, ஒருவருடன் நட்பு கொள்வதற்கு முன், அவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வியாபாரத்தில் யாரையும் எப்போதும் முழுதாக நம்பிவிடக்கூடாது.



Click it and Unblock the Notifications

