Latest Updates
-
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! -
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்..
நீங்க நீண்ட ஆயுசோட வாழணும்னா சாணக்கிய சொல்லும் இந்த 4 விஷயங்களை எப்பவும் மறக்காதீங்க...!
Chanakay Niti: ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி பல பேரரசுகள் நிறுவப்பட்டன. அவரது கொள்கைகள் எக்காலத்திற்கும் மிகவும் பொருத்தமானவை. வாழ்க்கைக்கான ரகசியங்கள் மட்டுமின்றி மனிதர்களின் இயல்புகள் பற்றியும் சாணக்கியர் கூறியிருக்கிறார்.
வெற்றிகரமான மற்றும் பணக்காரர்களுக்கு எப்போதும் சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்த அறிவுரைகளை ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் தொகுத்துள்ளார்.

அன்றாட பணி நடத்தையில் எந்தெந்த விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம், இதனால் நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை மற்றும் நீங்கள் நிச்சயம் வெற்றியைப் பெறுவீர்கள்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் பேசும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறினார். எந்த நேரத்தில் அவர்கள் கோபப்படுவார்கள் என்று உங்களால் கணிக்க முடியாது, அதனால் நீங்களும் கோபப்படலாம், பிறகு நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
நீர் மிகவும் முக்கியமானது
சாணக்கியர் மனித வாழ்க்கைக்கு தண்ணீரின் பயனை விளக்கும் வகையில், தண்ணீரே வாழ்க்கை என்று குறிப்பிட்டள்ளார். ஆனால் ஒருவர் எப்போதும் நீர்நிலைகளுக்கு அருகில் வீடுகளை கட்டக்கூடாது, இதனால், தண்ணீர் பேரிடர் ஏற்பட்டால், தண்ணீரில் மூழ்கும் வாய்ப்புகள் குறையும். இது நம்முடைய சென்னைக்கும் முற்றிலும் பொருந்தும். நம்முடைய சென்னை நிலையை பல நூற்றாண்டுகள் முன்பே சாணக்கியர் கணித்துள்ளார்.
முட்டாள்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்
சாணக்கியர் முட்டாள்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார். அவர்களிடம் பேச வேண்டும் என்றால் எப்போதும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்களுக்குப் பதிலாக உங்களை எல்லா விஷயங்களிலும் தவறாக நிரூபிக்க முயற்சிப்பார்கள்.
வலிமை வாய்ந்தவர்களுடன் பகை கூடாது
தெரியாமல் கூட உங்களை விட பலம் மற்றும் அதிகாரம் வாய்ந்தவர்களுடன் பகை கொள்ளாதீர்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இப்படிச் செய்வதால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும், மேலும் இந்த முட்டாள்த்தனம் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது.
மேலும், லட்சுமி தேவி அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் ஆசீர்வதிக்க மாட்டார். ஒரு புத்திசாலி ஒரு சக்திவாய்ந்த மனிதனுடன் ஒருபோதும் பகைமை கொள்ள மாட்டான், மாறாக அவரை நண்பனாக்குவதன் மூலம் அந்த மனிதனை தோற்கடிக்கலாம். இதைச் செய்யக்கூடியவர் புத்திசாலி மற்றும் ஞானி என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவரது செல்வமும், ஆயுளும் பெருகும்.



Click it and Unblock the Notifications
