Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்கள் பணக்காரரைக் கூட சீக்கிரம் ஏழையாக மாற்றிவிடுமாம்...!
Chanakya Niti: மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான வாழ்க்கைக்கு பணம் தேவை. சிறந்த பொருளாதார நிபுணராக அறியப்பட்ட சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் செல்வம் பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார். சில விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், பணக்காரர்களும் ஏழையாகிவிடலாம் என்கிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்த பல காரணங்கள் உள்ளன. ஒரு நபரின் நிதி அழிவுக்கு வழிவகுக்கும் சில காரணிகளை தனது சாணக்கிய நீதியில் சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார், மேலும் பணத்தை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் விளக்கியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை பூட்டி வைக்கக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பணக்காரர் தனது பணத்தை போட்டியிலேயே ஒருபோதும் பூட்டி வைக்கக்கூடாது. மாறாக சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அதன் மதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்காது. பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைந்துவிடும். மறுபுறம், பணத்தை ஒரு நல்ல இடத்தில் முதலீடு செய்வது அதை வளர வைக்கிறது.
அநீதி பக்கம் நிற்கக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, அநீதியின் பாதையைப் பின்பற்றும் நபரிடம் பணம் ஒருபோதும் தங்காது. அநீதி பாதையில் செல்பவர்கள் அதிக பணம் பெற ஆரம்பித்தால், அவர்கள் அழிவு நிச்சயம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
சிக்கனமாக தானம் செய்ய வேண்டும்
தானம் செய்வது ஒருவரின் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகவும் நல்ல விஷயம். ஆனால் சாணக்கியர் ஒருவர் தனது வருமானத்திற்கும், வசதிக்கும் ஏற்ப மட்டுமே தானம் செய்ய வேண்டும் என்கிறார். வருமானத்திற்கு அதிகமாக தானம் செய்வது உங்களை ஏழையாக்கும். எனவே எப்போதும் உங்கள் வருமானத்தை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்யுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்து, அதே விகிதத்தில் மற்றவர்களுக்கு உதவுங்கள்.
அதிகமாக செலவு செய்யக்கூடாது
உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது பத்தாது என்கிறார் சாணக்கியர். அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்களை பணக்காரர்களாக மாற்றாது. ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை நீண்ட நேரம் வைத்திருந்தால் கெட்டுப் போவது போல், சரியாகப் பயன்படுத்தாவிட்டால் செல்வமும் முக்கியமற்றதாகிவிடும் என்கிறார் சாணக்கியர்.
பணத்தை நினைத்து தற்பெருமை கொள்ளக்கூடாது
சாணக்கியர், ஒருவர் தனது பணத்தைப் பற்றி பெருமை கொள்ளக் கூடாது என்றும், எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். பணம் வரும்போது அகங்காரத்தை உங்கள் மனதில் நுழைய விடாதீர்கள். ஈகோ உங்கள் புத்தியைக் கெடுக்கிறது. இதன் காரணமாக ஒருவரின் செல்வம் விரைவில் அழிந்து விடுகிறது. எனவே ஆணவத்தைத் தவிர்த்து, உங்கள் நடத்தையில் பணிவுடன் இருங்கள்.



Click it and Unblock the Notifications

