Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் தோல்வி அடையாமல் இருக்க உங்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் என்ன தெரியுமா?
Chanakya Niti: சாணக்கியரும், அவரும் அறிவுரைகளும் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் மனிதர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒருவர் தனது நற்பண்புகளால் வாழ்க்கையில் வெற்றியை அடையலாம், அதேபோல ஒருவரின் கெட்ட எண்ணங்கள் வெற்றிகரமான செயல்களை கூட தோல்வியாக மாற்றும்.
ஒருவரிடம் சில குறைபாடுகள் இருந்தால், அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவரால் வெற்றி பெற முடியாது. சாணக்கியர் இதுபோன்ற சில விஷயங்களிலிருந்து எப்போதும் விலகி இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார். ஒருவரின் வாழ்க்கை முறை மற்றும் அவரது குணங்களே அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

மனிதர்கள் அனைவருக்குள்ளும் சில குறைகள் இருக்கும். ஆனால் இந்த குறைபாடுகளில் சிலவற்றை சரியான நேரத்தில் உங்களுக்குள் இருந்து நீக்காவிட்டால், அதன் விளைவு வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, தோல்விக்கு வழிவகுக்கும் ஒருவரின் குணங்கள் என்னென்ன எனறு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அமைதியான மனம்
வாழ்க்கையில் வெற்றியை அடைய அமைதியான மனம் மிகவும் அவசியம் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். மன அமைதி இல்லாத எந்த மனிதனும் மகிழ்ச்சியாகவும், வெற்றியையும் அடைய முடியாது. நிலையற்ற மனதுடன் இருப்பவர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது மற்றும் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும். இந்த குறைபாட்டால் அவர்கள் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமை
சாணக்கிய நீதியின் படி, பலருக்கு மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமை இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களின்றி தனியாக இருப்பார்கள், மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியையோ அல்லது மற்றவர்களின் ஆதரவையோ பெற மாட்டார்கள்.
கட்டுப்பாடில்லாத மனம்
சாணக்கியர் கூற்றின் படி, ஒரு நபர் தனது முழு உடலையும் தனது மனதின் மூலம் கட்டுப்படுத்துகிறார். மனக்கட்டுப்பாடு இல்லாத ஒரு மனிதனின் மனமும் உடலும் எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியாது. இத்தகையகட்டுப்பாடில்லாத மனம் உள்ளவர்கள் எந்த வேலையிலும் கவனம் செலுத்தி வெற்றிகளை பெற முடியாது. ஒருவரின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒழுக்கமின்மை
ஒழுக்கம் இல்லாதவர்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஒருவேளை குறுக்கு வழியில் வெற்றி பெற்றாலும் அது நீண்ட காலம் நீடிக்காது. உங்கள் பணிகளை வெற்றிபெற ஒழுக்கத்துடன் செய்வது மிகவும் முக்கியம். இந்த குணம் இல்லாமல் எந்த மனிதனும் வெற்றியை அடைய முடியாது.
கவனக்குறைவு2
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால், எந்த ஒரு வேலையையும் முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும். வேலையில் கவனக்குறைவாக இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள். கவனமின்மையே ஒருவரின் வெற்றிக்கான தடைக்கல்லாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
