Latest Updates
-
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்!
சாணக்கிய நீதி படி இந்த அறிவுரைகளை பின்பற்றுபவர்கள் அவங்க வாழ்க்கையில் எல்லா எதிரிகளையும் ஈஸியா ஜெயிப்பார்களாம்
Chanakya Niti: சாணக்கியர் தனது அனுபவங்களை தொகுத்து எழுதிய சாணக்கிய நீதியில் மனித வாழ்வு பற்றிய பல செய்திகளை குறிப்பிட்டுள்ளார். சாணக்கிய நீதியின் படி, எல்லா மனிதர்களுக்கும் ஒரு எதிரியாவது நிச்சயம் இருப்பார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு நபரும் தனது எதிரியை பலவீனமானவராக கருதக்கூடாது, அவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் எதிரி வாய்ப்பு கிடைத்தவுடன் உங்களைத் தாக்குவார்.
இரண்டு வகையான எதிரிகள் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். ஒன்று நாம் கண்ணிற்கு புலப்படக்கூடிய எதிரிகள், மற்றொன்று கண்ணுக்கு தெரியாத மற்றும் திருட்டுத்தனமாக தாக்குபவர்கள். இந்த இரண்டு வகை எதிர்களிடமுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நீங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்பினால், சாணக்கியரின் அறிவுரைகளை வாழ்க்கையில் செயல்படுத்துங்கள். சாணக்கியர் தனது கொள்கைகளில் எதிரிகளை தோற்கடிக்க சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார், அவற்றை மனதில் வைத்து பின்பற்றினால் உங்கள் எதிரிகளை வெல்ல முடியும். எதிரிகளை தோற்கடிக்க சாணக்கிய நீதியில் சில வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கெட்ட நண்பர்களைத் தவிர்க்கவும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது குடும்பத்தை விட, தனது நண்பர்கள் மற்றும் வேலை செய்யும் நபர்களுடனேயே அதிக நேரத்தை செலவிடுகிறார். எனவே ஒவ்வொரு நபரும் தனது நண்பர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கெட்டவர்களுடன் பழகினால், எதிரிகள் அதை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிப்பார்கள். எனவே உங்கள் நட்பு வட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பேச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் எதிரி அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார். உங்கள் பேச்சு மோசமாக இருந்தால், உங்கள் உறவுகள் மோசமடையக்கூடும்.
தவறான பேச்சு காரணமாக, உங்களின் நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை விட்டு விலகத் தொடங்குவார்கள். ஏனென்றால் பொதுவாக மக்கள் கசப்பாகவும் கடுமையாகவும் பேசுபவர்களிடம் இருந்து விலகி இருப்பார்கள். எனவே யாரிடம் பேசினாலும், உங்கள் பேச்சை எப்போதும் இனிமையாகவும், கண்ணியமாகவும் பேசுங்கள்.
தவறான பழக்கங்களை கைவிட வேண்டும்
மக்கள் எப்போதும் போதைப் பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் எதிரிகளால் எளிதில் தோற்கடிக்கப்படுகிறார்கள். ஒரு குடிகாரன் தனது புத்திசாலித்தனத்தை எப்போதும் பயன்படுத்த முடியாது, அத்தகைய சூழ்நிலையில் அவர் பல தவறுகளைச் செய்வார்கள், அதை உங்கள் எதிரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எதிரியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
உங்கள் எதிரியை நீங்கள் தோற்கடிக்க விரும்பினால், உங்கள் எதிரி தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் எதிரியின் பலம் பற்றி உங்களுக்கு எப்போதும் ஒரு கணிப்பு இருக்க வேண்டும். உங்கள் எதிரியைப் பற்றிய முழுமையான தகவல்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் அவர்களை எளிதாக தோற்கடிக்கலாம்.
மனஅமைதியுடன் வேலை செய்ய வேண்டும்
விறகில் பற்றும் நெருப்பு அதை முழுவதுமாக அழிப்பது போல, ஒரு மனிதனுக்குள் எரியும் கோபத்தின் நெருப்பு அவருடைய புத்திசாலித்தனத்தை மொத்தமாக அழிக்கிறது. கோபத்தில், ஒரு நபர் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் சக்தியை இழக்கிறார். இதை எதிரிகள் சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் தோல்வியையே தழுவினாலும், அதனைப் பற்றி உங்கள் எதிரியை தெரிந்து கொள்ள அனுமதிக்காதீர்கள். மனதை அமைதியாக வைத்துக் கொண்டால், எதிரியை வெல்லும் ஆற்றல் உங்களுக்குள் வளரும்.
திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் படி, உங்கள் திட்டங்களை ஒருபோதும் பகிரங்கப்படுத்த வேண்டாம், இதனால் உங்கள் எதிரியை நீங்கள் வெல்ல முடியும். உங்கள் திட்டத்தைப் பற்றி எல்லோரிடமும் சொன்னால், அது உங்கள் எதிரியை அடைய அதிக நேரம் எடுக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்.
அத்தகைய நேரங்களில், ஒரு நபர் தனது திட்டங்களைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க வேண்டும். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து உங்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள். உங்களின் உண்மையான தோழர்களை மட்டும் உதவிக்காக உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
