Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி ஆண்கள் தங்கள் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க இந்த 5 விஷயங்களை அவசியம் செய்யணுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் திறமையான ஆசிரியர். வாழ்க்கைப் பற்றிய பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆழமான அறிவு அவருக்கு இருந்தது, மேலும் நடைமுறை வாழ்க்கையில் நல்ல மற்றும் கெட்ட சூழ்நிலைகளின் அனுபவமும் அவருக்கு இருந்தது. அவர் தனது ஆழ்ந்த அறிவையும் வாழ்க்கை அனுபவத்தையும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தினார்.
அவரது அறிவுரைகளும், கொள்கைகளும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி கொண்டவையாக உள்ளன. அதனால்தான் சாணக்கியரின் கொள்கைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் பொருத்தமானதாகவே இருக்கிறது. சாணக்கிய நீதியில் உள்ள பல அறிவுரைகள் வாழ்வில் வெற்றி பெற பயனுள்ளதாக இருக்கும்.

சாணக்கிய நீதியில் கணவன் மனைவி உறவைப் பற்றிப் பல விஷயங்கள் கூறப்படுகின்றன. கணவன்-மனைவி இடையேயான உறவுதான் மிகவும் புனிதமானது என்று அவர் கூறுகிறார். பல கணவர்கள் தங்கள் மனைவிகளை எப்படி மகிழ்விப்பது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். ஆனால் இனி கவலைப்பட தேவையில்லை. சாணக்கியர் மனைவியை சந்தோஷப்படுத்த சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். இந்த விஷயங்களை சரியாக பின்பற்றினால், நீங்கள் நிச்சயமாக உலகின் மகிழ்ச்சியான கணவனாக இருப்பீர்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்கக்கூடாது
உங்களின் விருப்பத்தை உங்கள் துணையின் மீது திணிக்காமல், அவர்கள் விரும்பியபடி வாழ உறுதுணையாக இருக்க வேண்டும். பல ஆண்கள் தங்கள் மனைவிகள் மீது தங்கள் உரிமைகளையும், விருப்பங்களையும் நிலைநிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல கணவர்கள் தங்கள் மனைவிகள் தங்களின் முடிவை ஏற்றே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் இத்தகைய திணிப்புகளை விரும்புவதில்லை எனவே உங்கள் மனைவியை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள அவரது விருப்பங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்.
மரியாதை கொடுக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் மரியாதை மிகவும் முக்கியமானது. ஒரு நல்ல உறவு மரியாதை மற்றும் அன்பை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். மனைவியை மதிக்கும் கணவன் அல்லது பெண்களை மதிக்கும் ஆண்களுடன் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மதித்துத் தங்கள் திருமண வாழ்க்கையை வலுவாக வைத்திருக்க வேண்டும்.
ஏனென்றால் அனைவருமே மரியாதை மற்றும் அங்கீகாரத்தை விரும்புகிறார்கள். அதை புறக்கணிக்கும் யாரையும் யாரும் விரும்ப மாட்டார்கள், எனவே உங்கள் துணையை மற்றவர்கள் முன் அவமானப்படுத்தாதீர்கள். இது உங்கள் உறவை மிகவும் மோசமாக பாதிக்கும்.
நம்பிக்கை
அனைத்து உறவுகளிலும் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. தாம்பத்திய வாழ்வில் அன்பைப் பேண கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நம்ப வேண்டும். திருமண வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நம்பிக்கை இல்லாமல் எந்த திருமணமும் மகிழ்ச்சியாக நடக்காது.
எனவே மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க நம்பிக்கை இருப்பது மிகவும் முக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார். நம்பிக்கையில் சிறு குறை ஏற்பட்டாலும் உறவில் விரிசல் ஏற்படும். எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எல்லா சூழ்நிலைகளிலும் நம்பி இருக்க வேண்டும்.
பாதுகாப்பாக இருக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக உணரும் ஆண்களுடனேயே இருக்க விரும்புகிறார்கள். மனைவியைப் பாதுகாக்க முடியாத கணவன் தன் துணையுடன் நீடித்த உறவை வைத்திருக்க முடியாது. கணவன் தன் மனைவியின் திருப்திக்காகவும், மகிழ்ச்சிகாகவும் அவரைப் பாதுகாப்பாக உணர வைப்பது மிகவும் முக்கியம்.
தற்பெருமை கொள்ளக்கூடாது
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, தற்பெருமைமிக்க கணவன் தன் துணையுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எந்தவொரு உறவிலும் ஈகோவை விட அன்பு, கவனிப்பு மற்றும் பாசம் முக்கியம். ஒரு கணவருக்கு ஈகோ இருந்தால், அது உங்கள் வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்தும். திமிர் பிடித்த கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. மனைவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் கணவர்கள் கண்டிப்பாக தங்களின் ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
