Latest Updates
-
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சாணக்கிய நீதி படி கணவன்-மனனவி காலையில் இந்த விஷயங்களை பண்ணுனா அவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணரும் இராஜதந்திரியுமான சாணக்கியர், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு பல விஷயங்அறிவுரைகளைக் கொடுத்துள்ளார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கையை எளிமையாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவது தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கணவன்-மனைவிக்குள் பிரிவினை ஏற்படாது, மேலும் அவர்களின் திருமண வாழ்க்கை யும் மகிழ்ச்சியாக இருக்கும். கணவனும் மனைவியும் ஏழு பிறவிகளை சேர்ந்தவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். கணவன்-மனைவி இடையேயான உறவு நல்லதா கெட்டதா என்பதில் உங்களைச் சுற்றியுள்ள ஆற்றலும் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே உங்களைச் சுற்றி எப்போதும் அதிக நேர்மறை ஆற்றலைக் கொண்டிருக்க எப்போதும் முயற்சி செய்யுங்கள்.

ஒரு நாளை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு காலை நேரம் மிகவும் முக்கியமானது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் எழுந்து தனது கணவருடன் சில பணிகளைச் செய்தால், அவர்களின் உறவு மிகவும் வலுவாக மாறும். செழிப்பும் அதிர்ஷ்டமும் உங்கள் வாழ்க்கையில் நுழையும். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, தினமும் காலையில் கணவனும் மனைவியும் சேர்ந்து செய்ய வேண்டிய சில செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
யோகா
காலையில் கணவன்-மனைவி இணைந்து யோகா செய்தால், இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இதனை செய்தால் உங்கள் உடலும் ஆரோக்கியமும் எப்போதும் சிறப்பாக இருக்கும், மனமும் அமைதியாக இருக்கும். அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. இதனால் தம்பதியிடையே சண்டை மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படாது. இதனால் உங்கள் நாள் நன்றாக இருக்கும்.
அன்பு
கணவன்-மனைவி அன்பான செயல்களுடன் நாளைத் தொடங்கினால், அவர்களின் மனநிலை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதன்மூலம் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பீர்கள், மேலும் உங்கள் அனைத்து வேலைகளையும் அதிக ஆற்றலுடன் செய்யலாம். இதன் காரணமாக, உங்கள் உறவில் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். எனவே காலை எழும் போது ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு எழுந்திருங்கள்.
வழிபாடு
கடவுளின் ஆசீர்வாதத்துடன் நாளைத் தொடங்குவது மிகவும் புனிதமானது. இது ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் உடலில் நேர்மறை ஆற்றல் பாய்கிறது. எனவே கணவனும் மனைவியும் காலையில் கடவுளை வணங்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
துளசிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்
கணவன்-மனைவி இருவரும் காலை நீராடி துளசி தேவிக்கு நீர் ஊற்றினால், வாழ்நாள் முழுவதும் நல்லுறவுடன் வாழலாம். அப்படிப்பட்டவர்களின் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் வராது, மேலும் போதிய செல்வத்தைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும் சாணக்கியர் சில வழிகளைக் கூறியுள்ளார்.
பரஸ்பர மரியாதை
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, மிக முக்கியமான விஷயம் ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் இருக்க வேண்டும். சாணக்கிய நீதி படி பரஸ்பர மரியாதை இருக்கும்போது, உங்கள் உறவு ஆழமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எப்போதும் மதித்து ஒத்துழைக்க வேண்டும்.
தற்பெருமை கொள்ளக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒரு வாகனத்தின் இரு சக்கரங்களைப் போன்றவர்கள். அதன் இரண்டு சக்கரங்களும் ஒன்றாக முன்னோக்கி நகரும்போது மட்டுமே அந்த உறவும் நன்றாக வேலை செய்கிறது. கணவனும் மனைவியும் எந்த விஷயத்திலும் தற்பெருமை கொள்ளக் கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் அகந்தையை வெளிப்படுத்தினால், உங்கள் உறவு விரைவில் தோல்வியடையும்.
பொறுமை
எந்த சூழலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மிக மோசமான சூழ்நிலையையும் எளிதில் எதிர்கொள்ள முடியும், மேலும் எந்த சிரமத்திலிருந்தும் எளிதாக வெளியேற முடியும். கணவனும் மனைவியும் நல்ல உறவைப் பேணுவதற்கு எப்போதும் பொறுமையாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
