Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
சாணக்கிய நீதி படி உங்களின் இந்த சின்ன சின்ன தவறுகள் உங்க திருமண வாழ்க்கையை மொத்தமாக அழிச்சிருமாம்...!
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார். மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார். ஆச்சார்ய சாணக்கியரின் வார்த்தைகளை பின்பற்றினால்
ஒருவரின் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்கிவிடும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, திருமணமானவர்கள் அவர்களுக்கேத் தெரியாமல் சில தவறுகளைச் செய்கிறார்கள், அதனால் அவர்களது உறவுகள் விரைவில் முறிவடைந்து விடும் என்று சாணக்கியர் கூறுகிறார்கள். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த சிறிய விஷயங்கள் திருமண வாழ்க்கையை சிதைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிண்டல்
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் இரவும், பகலும் போல மாறி மாறி வரும். ஒருவரது வாழ்வில் பிரச்சனைகள் எப்போதும் வந்து கொண்டே இருக்கும், அதற்காக கணவன்-மனைவி ஒருவரையொருவர் எதற்கும் கேலி செய்து கொள்ளக்கூடாது. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது போன்ற சிறிய விஷயங்களே காரணமென்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் வாழ்க்கையில் சிறிய விஷயங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். இதைச் செய்யாவிட்டால் உங்கள் திருமண வாழ்க்கையே வீணாகிவிடும்.
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பது
உங்கள் திருமண வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திக் கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார். கணவன்-மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் வருவது தவிர்க்க முடியாதது, ஆனால் அதற்காக பேசுவதை நிறுத்தக்கூடாது, இல்லையெனில் அந்த சிறிய சண்டை பெரிய பிரச்சினையாக மாறும். பெரும்பாலும் மக்கள் சண்டைக்குப் பிறகு பேசுவதை நிறுத்துகிறார்கள், இந்த தவறு காலப்போக்கில் பிரிவுக்குக் காரணமாகிறது.
ஒத்துழைப்பு இல்லாமை
கணவன்-மனைவி இருவரும் அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் வீட்டு வேலைகளை பெண்களிடமே தள்ளி விடப்படுகிறது, ஆரம்பத்தில் அது நன்றாக இருக்கும், ஆனால் பின்னர் அது சண்டைக்கு காரணமாகலாம். திருமண வாழ்வில் கணவன் மனைவி இருவரின் பங்களிப்பும் அவசியம். வாழ்க்கையை ஒழுங்காக நடத்த வேண்டுமென்றால், ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டியது அவசியம்.
தீங்கிழைப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, சிறுவயதிலிருந்தே நாம் யாரிடம் பழகுகிறோமோ அவர்களின் தீய குணங்கள் நமக்கு தீமையை மட்டும்தான் ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கைத்துணை இந்த குணங்களுடன் இருந்தால் திருமணத்திற்கு பிறகும் இது தொடரலாம். எனவே அவர்களை யாருக்கும் தீய காரியங்களை செய்ய அனுமதிக்காதீர்கள். திருமண வாழ்க்கையில் இருவரின் வீட்டிலேயும் சில தீய குணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் அதனை ஒருபோதும் மிகைப்படுத்தாதீர்கள் ஏனெனில் இது உங்கள் திருமண வாழ்க்கையை சிதைக்கத் தொடங்கும்.



Click it and Unblock the Notifications
