Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சாணக்கிய நீதி படி இந்த பழக்கம் உள்ளவர்கள் வாழ்க்கை முழுக்க ஏழையாகத்தான் இருக்கணுமாம்... உடனே மாத்திக்கோங்க...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் பிரபலமானவை. அவர் கூறிய கொள்கைகளை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒரு நபர் வாழ்க்கையில் வெற்றிக்கான வழியைக் காணலாம். அது மட்டுமின்றி, இந்த கொள்கைகள் ஒரு நபருக்கு தனிப்பட்ட முறையில், சமூகரீதியாக மற்றும் அரசியல்ரீதியாக சரியான திசையை வழங்குகின்றன. சாணக்கியர் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் சில பழக்கவழக்கங்களை பற்றி தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

உண்மையில் ஒருவரின் இந்த பழக்கவழக்கங்களால், அவர்கள் வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கிறார்கள். இருப்பினும், அவர்களால் அத்தகைய பழக்கங்களை அடையாளம் காண முடியாது மற்றும் அவற்றை விடவும் முடியாது. சாணக்கிய நீதி கூறும் ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணத்தை வீணாக்குதல்
முன்யோசனை இல்லாமல் பணத்தை செலவழிப்பது என்பது மிகவும் மோசமான பழக்கமாகும். இத்தகைய பழக்கவழக்கங்கள் அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அத்தகையவர்கள் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க முடியாது. யோசிக்காமல் பணத்தை செலவு செய்பவர்கள் மிக விரைவில் ஏழையாகி விடுவார்கள் என்கிறார் சாணக்கியர்
சோம்பேறித்தனம்
மனிதர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய எதிரி சோம்பேறித்தனம்தான். சோம்பேறித்தனம் காரணாமாக, ஒருவர் வெற்றிபெற பல வாய்ப்புகளை இழக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் தோல்விகளை பார்த்தும் அவர்கள் வருந்துவதில்லை. அத்தகையவர்கள் வாழ்க்கையில் அதிக நிதி நெருக்கடியை எதிர்கொள்கிவார்கள் என்கிறார் சாணக்கியர்.
சுகாதாரமின்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் பற்கள் மற்றும் ஆடைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.குளிப்பதைத் தவிர்ப்பவர்களுக்கும் , அழுக்கான ஆடைகளை அணிந்தவர்களுக்கும் லட்சுமி தேவியின் அருள் ஒருபோதும் கிடைக்காது. அத்தகையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் தங்கள் பணத்தை செலவிடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் கஷ்டங்களையும், துன்பங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் வறுமையின் பிடியில்தான் இருக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
அதிக தூக்கம்
சாணக்கிய நீதியின் படி காலை நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. எனவே வெற்றியை விரும்பும் ஒருவர் எப்போதும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இதற்கிடையில், காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் பல நோய்களை ஈர்க்கிறார்கள். காலை முதல் மாலை வரை தூங்குபவர்கள் பணக்காரர் ஆக முடியாது என்கிறார் சாணக்கியர்.
சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை தூங்குபவருக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது. எந்த காரணமும் இல்லாமல் தூங்குவது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும், முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல. அவர்கள் எப்போதும் வறுமையில் வாழ்வார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
நெறிமுறையற்ற செயல்கள்
நேர்மையின்மை, தந்திரம் மற்றும் தவறான செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் நீண்ட காலம் பணக்காரர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் விரைவில் பணத்தை இழக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர். நேர்மையான வழியைக் கைவிட்டு ஒழுக்கக்கேட்டான சம்பவத்தில் ஈடுபடுபவர்களுடன் லட்சுமி தேவி நீண்ட காலம் தங்க மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மோசமான பேச்சு
மற்றவர்களை எப்போதும் கெட்ட வார்த்தையால் வசைபாடுபவர்கள் மற்றும் மோசமான பேச்சு பேசும் பழக்கம் உள்ளவர்கள் எப்போதும் எதிர்மறை ஆற்றலை பரப்புவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் யாரும் நீண்ட காலம் பழகுவதில்லை. இதன் காரணமாக, வெற்றிக்கான அனைத்து கதவுகளும் அவர்களுக்கு மூடப்பட்டு, அவர்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள் என்கிறார் சாணக்கியர். தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களைக் காயப்படுத்துபவர்கள் ஒருபோதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
