Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த 3 விஷயங்களை செய்வதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள்... அதான் நல்லது...!
சாணக்கியர் இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளில் ஒருவராவார். அவரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவை, அதனால்தான் இன்றும் சாணக்கிய நீதி புகழ்பெற்றதாக இருக்கிறது.
சாணக்கிய நீதியின் படி வாழ்க்கையில் சில விஷயங்களை செய்வதற்கு ஒருபோதும் தயங்கக்கூடாது, இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தை சந்திக்கக்கூடும் என்று அவர் நம்பினார். ஏனெனில் ஆச்சார்யா சாணக்கியரின் வாழ்க்கையே பல போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது.

சாணக்கியர் தனது வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டார், ஆனால் அவை ஒருபோதும் அவரது ஆற்றல் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. பேரழிவை எப்படி வாய்ப்பாக மாற்றுவது என்பதில் சாணக்கியர் வல்லவராக இருந்தார். அவரது படைப்புகளில் சாணக்கியர் இவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு நபர் செய்வதற்கு தவிர்க்கும் சில விஷயங்கள் உள்ளன, ஆனால் அந்த செயல்களை செய்ய தயங்கக்கூடாது. அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடனை கேட்க தயங்கக்கூடாது
பொருளாதார செழிப்பு இல்லாமல், பொருள்சார்ந்த இந்த சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்று சாணக்கியர் நம்பினார். உங்கள் கருணையால் நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுத்திருந்தால், அதைத் திரும்பக் கேட்க ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம் என்று அவர் கூறினார். நீங்கள் பண விஷயத்தில் வெட்கப்பட்டால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சாப்பிட தயங்கக்கூடாது
பெரும்பாலும், ஒருவர் உறவினர் அல்லது நண்பர் வீட்டிற்குச் செல்லும்போது, மக்கள் தயங்கி தயங்கி பாதி வயிறு மட்டுமே சாப்பிடுவார்கள். சாணக்கியர் உணவை எப்போதும் வயிறார சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எந்த இடத்தில் அமர்ந்தாலும் சாப்பிடத் தயங்கக் கூடாது, எந்த நேரமாக இருந்தாலும்,இடமாக இருந்தாலும் சாப்பிடத் தயங்கக்கூடாது.
கற்றுக்கொள்வதற்கு தயங்கக்கூடாது
ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பார் என்று சாணக்கியர் நம்பினார். நீங்கள் குருவிடமிருந்து அறிவைப் பெறுகிறீர்கள் என்றால், அதற்காக ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம் என்று அவர் நம்பினார். உங்களுக்கு எந்த விஷயத்திலாவது ஆர்வம் இருந்தால், அதைப்பற்றி கேள்வி கேட்க ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம். அவ்வாறு செய்தால் நஷ்டம் ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் பிரச்சனைகளையும், இழப்புகளையும் சந்திக்க வேண்டி வரும்.



Click it and Unblock the Notifications
