Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த 3 நபர்களுக்கு தெரியாமகூட உதவி பண்ணிராதீங்க... அதான் உங்களுக்கு நல்லது!
சாணக்கியர் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவ அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் அரச ஆலோசகர் ஆவார். அவர் வரலாற்றில் கௌடில்யர் அல்லது விஷ்ணுகுப்தா என்று அடையாளம் காணப்படுகிறார்.
சாணக்கியர் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவ அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் அரச ஆலோசகர் ஆவார். அவர் வரலாற்றில் கௌடில்யர் அல்லது விஷ்ணுகுப்தா என்று அடையாளம் காணப்படுகிறார். வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக அவர் கொடுத்த ஆலோசனைகள் மற்றும் தந்திரங்கள் இப்போதும் இலட்சக்கணக்கான மக்களால் பின்பற்றப்படுகின்றன, மேலும் இந்த நவீன காலத்தில் அந்த தந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

சாணக்கிய நீதி நாம் எப்படி வாழ வேண்டுமென்று கூறுகிறதோ அதேபோல எப்படி வாழக்கூடாது என்றும் சில விஷயங்களைக் கூறுகிறது. உதவி செய்வது அனைத்து மனிதர்களும் கொண்டிருக்க வேண்டிய ஒரு அடிப்படை குணமாகும். ஆனால் சிலருக்கு உதவி செய்வது உங்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. இந்த பதிவில் யாருக்கெல்லாம் உதவி செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
மோசமான குணமுள்ள பெண்கள்
ஒரு இளம் பெண் கவலையில் இருப்பதைப் பார்க்கும்போது மக்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். இருப்பினும், அந்தப் பெண் தன் தவறினால் உண்மையில் சிக்கலில் இருக்கிறாரா என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். இது ஏனென்றால், உலகில் பல பெண்கள் தொடர்ந்து பிரச்சனையில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் நடத்தை மற்றும் செயல்களால் மட்டுமே அவர்கள் அந்த சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய பெண் குணமில்லாதவராக இருக்கலாம், அதாவது அந்த பெண் எந்த ஒரு நபருக்கும் ஒருபோதும் உண்மையாகவோ அல்லது விசுவாசமாகவோ இல்லை, அவர் ஒரு மோசமான இயல்புடைய பெண்ணாக இருக்கலாம். அத்தகைய பெண்ணுக்கு உதவுவது அவர்களுக்கு உதவுபவர்களுக்கு சிக்கலையும் கவலையையும் மட்டுமே ஏற்படுத்தும். அத்தகைய பெண்கள் தங்கள் சுயநல காரணங்களுக்காக மட்டுமே ஆண்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தகைய பெண்ணிடம் ஒருவர் சிக்கிக் கொண்டால், அது அவர்களின் சமூக நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
எப்போதும் சோகமாக இருப்பவர்கள்
எந்த காரணமும் இல்லாமல் தனிமையில் இருப்பவர்கள் அல்லது சோகமாக இருப்பது போல் நடிக்கும் நபர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும்.அவர்கள் தங்களிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்பதில்லை, இல்லாத அனைத்திற்கும் தொடர்ந்து ஏங்குவார்கள்.அப்படிப்பட்டவர்களுடன் இருப்பது அவர்களைப் போலவே உங்களை சோகமாக்கும். அவர்கள் எப்போதும் பேராசை மற்றும் பிறரிடம் இருப்பதைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். அவர்களை விட நன்றாக இருப்பவர்களுக்கு எப்போதும் சாபமிடுவார்கள். அத்தகையவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பது சிறந்தது, ஏனெனில் இது மன அமைதியைப் பாதிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்யாதீர்கள்.
முட்டாள்கள்
நாம் எப்போதும் முட்டாள் மக்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும், ஏனென்றால் உலகில் நடக்கும் எதையும் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும், உணர்வும் இருக்காது, அவர்கள் எப்போதும் மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருப்பார்கள், மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். முட்டாள்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை 'விழலுக்கு இரைத்த நீர்' போலாகும். அறிவுப்பூர்வமான விஷயங்களைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு உதவலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறாகும். வாழ்க்கையில் சரியான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாள்களுக்கு அறிவுரை கூறுவதில் அல்லது உதவுவதில் அர்த்தமில்லை. அவர்கள் சிறிய விஷயங்களுக்குக் கூட வாதிட ஆரம்பித்து உங்கள் நேரத்தையும் முயற்சியையும் வீணடிக்கலாம். மேலும் அவர்கள் தங்களை சரியானவராக நிரூபிக்க முயற்சிப்பார்கள் மற்றும் உங்களை தவறானவராகக் காட்ட முயற்சிப்பார்கள். எனவே முட்டாள் மக்களிடமிருந்து விலகி, அவர்களுக்கு அறிவுரை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உங்கள் முயற்சியையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும்.



Click it and Unblock the Notifications

