Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களில் ஒன்று உங்ககிட்ட இருந்தாலும் உங்க வீட்டை தேடி வறுமை ஓடிவருமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் தன் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களையும், அனுபவங்களையும் மற்றும் தான் கற்றுணர்ந்த ஞானத்தையும் தன்னுடைய சாணக்கிய நீதியில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். வறுமை இல்லாத வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புவார்கள், அதற்காகத்தான் அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள்.
வாழ்க்கையில் செய்யும் சில தவறுகள் ஒருவரை வறுமையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அப்படிப்பட்ட சில பழக்கங்களைப் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் விரிவாக சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் கடின உழைப்புடன் சரியான பாதையில் நடப்பது மிகவும் அவசியம் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

கடின உழைப்பால் சம்பாதித்த செல்வம் மட்டுமே எப்போதும் உங்கள் வாழ்க்கையில் நிலையாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் சில பழக்கங்களை வாழ்க்கையில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார்., அதனால் லட்சுமி தேவி ஒருபோதும் உங்கள் மீது கோபப்பட மாட்டார். இந்த பழக்கங்களை பின்பற்றவில்லையெனில் உங்கள் வாழ்க்கையில் விரைவில் வறுமை வந்துவிடும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியர், உங்கள் பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை செய்யாதவர் மீது லட்சுமி தேவி கோபம் கொள்கிறார், இதனால் அவர்கள் விரைவில் வறுமையை சந்திக்க நேரிடுகிறது. அதுமட்டுமின்றி தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
எப்போதும் மென்மையாக பேச வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் எப்போதும் கடுமையாக பேசுபவராகவும், எப்போதும் கசப்பான வார்த்தைகளைப் பேசுபவராகவும் இருந்தால், அவர் வீட்டில் செல்வம் ஒருபோதும் நீண்ட காலம் தங்காது, அத்தகைய வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் கோபமாக இருப்பார். அத்தகைய நபர் மிகவும் கடினமாக உழைத்தாலும் எப்போதும் கடுமையான நிதி சிக்கல்களால் சூழப்பட்டிருப்பார்.
மாலை நேரத்தில் தூங்கக்கூடாது
ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒருவர் எப்போதும் மாலை நேரத்தில் தூங்கவே கூடாது என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்வது மிகவும் அசுபமான காரியம் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, மாலையில் தூங்கும் போது லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவதில்லை என்பதால், மாலையில் தூங்கக்கூடாது என்று அறிவுத்துகிறார்.
அதிகமாக சாப்பிடக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் உடல்நலம் தொடர்பான புகார்கள் ஏற்படும். நோய்வாய்பட்டிருக்கும் ஒரு இடத்தில் எப்போதும் லட்சுமி தேவி தங்கமாட்டார். அத்தகைய நபரின் பணம் முழுவதும் சிகிச்சைக்கே செலவிடப்படுகிறது. அதனால்தான், உடல் ஆரோக்கியமாக இருக்க, அதிகப்படியான உணவைத் தவிர்க்க வேண்டும்.
மோசடியில் ஈடுபடக்கூடாது
வஞ்சகம் மற்றும் தீய செயல்களில் ஈடுபடுபவருக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார். அப்படிப்பட்டவர் விரைவில் அழிவின் பாதையை சந்திப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார். நல்ல வழியில் நடந்து, ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications













