Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
பெங்களூரை சேர்ந்த பெண் தூங்கியே 9 லட்சம் சம்பாதித்துள்ளார்... அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?
இன்றைய மோசமான வாழ்க்கை முறையிலும், மனஅழுத்தம் நிறைந்த பணிசூழலிலும் இளைஞர்களின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. மனஅழுத்தத்தாலும், வேலைப்பளுவாலும் இளைஞர்கள் தூங்குவதற்கே சிரமப்படுகின்றனர். ஆனால் பெங்களூரை சேர்ந்த ஒரு இளம்பெண் தூங்கியே 9 லட்சம் சம்பாதித்துள்ளார்.
பெங்களூரில் வசிக்கும் முதலீட்டு வங்கியாளரான சாய்ஸ்வரி தூங்கும் எளிய செயலை லாபகரமான வாய்ப்பாக மாற்றி, Wakefit இன் புதுமையான ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூன்றாவது சீசனில் 'ஸ்லீப் சாம்பியன்' ஆக ரூ.9 லட்சத்தை வென்றுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சி, தற்போதைய வேகமான உலகில் தரமான தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டதாகும்.

ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டம்
Wakefit நிறுவனத்தின் ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டம் என்பது தங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய அம்சமாக தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இந்த தனித்துவமான அனுபவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பங்கேற்பாளர்களில் சாய்ஸ்வரியும் அடங்குவார், ஆரோக்கியமான தூக்க பழக்கத்தை பராமரிக்க அவருக்கு கடுமையான அர்ப்பணிப்பு தேவைப்பட்டது.
இந்த போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஒரு ப்ரீமியம் மெத்தை மற்றும் காண்டாக்ட் இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனத்தைப் பெற்றனர். நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்கள் தங்கள் இரவு தூக்கத்தை மேம்படுத்தவும், வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் தூக்க நிபுணர்களால் நடத்தப்பட்ட ஒர்க் ஷாப்புகளையும் பார்த்தனர். இந்த நிகழ்ச்சி இப்போது மூன்றாவது சீசனாக நடத்தப்படுகிறது, இந்த மூன்று ஆண்டுகளில், Wakefit 1 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது மற்றும் 51 பயிற்சியாளர்களை பணியமர்த்தியுள்ளது, அதே நேரத்தில் உதவித்தொகையாக ரூ.63 லட்சம் வழங்குகிறது.
போட்டியில் கலந்து கொள்ளத் தேவையான தகுதிகள்
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற, போட்டியாளர்கள் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். அவை என்னவெனில்,
தூங்கும் நேரம்: ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒவ்வொரு இரவும் 8 முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
பகல்நேர தூக்கம்: அவர்களின் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் பகலில் 20 நிமிடம் தூங்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.
தூக்க கண்காணிப்பு: பங்கேற்பாளர்களுக்கு பிரீமியம் மெத்தைகள் மற்றும் ஸ்லீப் டிராக்கர்கள் வழங்கப்பட்டன, இது இன்டர்ன்ஷிப் முழுவதும் அவர்களின் தூக்க முறைகளைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் உதவும்.
வொர்க் ஷாப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
பங்கேற்பாளர்கள் தங்கள் தூக்கத்தைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், அனுபவம் வாய்ந்த தூக்க ஆலோசகர்களால் நடத்தப்படும் வழக்கமான பயிற்சிப் பட்டறைகளிலும் கலந்து கொண்டனர். இந்த வொர்க் ஷாப்கள் மூலம் சுற்றுச்சூழல், வழக்கமான மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் உட்பட சிறந்த தூக்கத்திற்கு பங்களிக்கும் காரணிகளைப் பற்றி பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர். மேலும், பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு தளர்வு நுட்பங்கள் மற்றும் டெக்னிக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஸ்லீப் சாம்பியன்
போட்டியில் வெற்றி பெற்ற சாய்ஸ்வரி விழித்தெழுதல் மற்றும் படுக்கைக்குச் செல்வது போன்ற அட்டவணைகளை கடைபிடிப்பது ஒரு சிறந்த ஒழுக்கம் என்று கூறினார். "நீங்கள் இந்த போட்டியில் நல்ல மார்க் மதிப்பெண் பெற விரும்பினால், திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற இரவு நேரங்களில் செய்யக்கூடிய செயல்களில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும்," என்று அவர் கூறினார். COVID-19 தனது தினசரி அட்டவணையை எவ்வாறு பாதித்தது மற்றும் அவரது வேலை அட்டவணை எவ்வாறு அவரது தூக்க முறைகளைப் பாதித்தது என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
சீசன் 4
சீசன் 4 க்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்க்கப்படுகின்றன, தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்களுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகையும் மற்றும் ஸ்லீப் சாம்பியனாக வெல்பவர்கள் ரூ. 10 லட்சம் வரை பரிசுத்தொகை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications
