Latest Updates
-
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபட்டால் பண கஷ்டம் வராது..!
மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் கடவுள் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமைதான். புனிதமான இந்த கிழமையில்தான் பலரும் விரதம் இருப்பார்கள்.. காரணம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்தது.
தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும். அப்படி செவ்வாய் கிழமையில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம் வாங்க...

ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகன். தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை முருகனை நினைத்து விரதம் இருந்து வர கடன் நீங்கி நம் வீட்டில் செல்வம் சேர ஆரம்பிக்குமாம்... வருவாய் தரும் செவ்வாய் என்றே முன்னோர்கள் சொல்லுவார்கள்..
விரதம் இருக்கும் முறை:
செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும். வீட்டில் உள்ள பண கஷ்டமும் சரியாகிவிடும்.
வழிபடும் முறை:
முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிறத்தில் நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். வழிபடும் போது முருகனின் வேல் வைத்து வழிபடுவது நல்லது. மேலும் நாம் விரதம் இருக்கும் போது வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் படத்தை வைத்து வணங்குவது நல்லது. விரதத்தை தொடங்கும் போது முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும்.
கார்த்திகேயன் அன்னதானப் பிரபு என்பதால், இந்த விரதம் மேற்கொள்ளும் போது உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பான பலன் தரும். அதனால் முருகப்பெருமானின் அருள் பெறலாம்.
முருகனைவழிபட சிறந்த மந்திரம்:
"ஓம் சரவணா பவ " என்பதாகும். "ஓம்" என்பது பிரணவத்தை குறிக்கிறது, "ச" என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது "ரா" என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது "வ"என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது. "ந" என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளைதீர்க்கக்கூடியது. "ப" என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது. "வ" என்பது நம் வாழ்வின்எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.
பலன்கள்:
ரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை



Click it and Unblock the Notifications