2025 ஆம் ஆண்டில் இதுவரை பலித்துள்ள பாபா வாங்காவின் அதிர்ச்சியளிக்கும் கணிப்புகள்..இவ்வளவு விஷயம் நடந்துருச்சா?

Baba Vanga's 2025 Shocking Predictions: உலகில் பல தீர்க்க தரிசிகள் தங்களின் சக்திவாய்ந்த தீர்க்க தரிசனங்கள் மூலம் வரலாற்றில் அழியாப்புகழை பெற்றுள்ளனர். அப்படி மிகவும் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள் ஒருவர்தான் பாபா வாங்கா. பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வாங்கா, பல உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுகிறது. அவரது பல சீடர்கள் அவரது தீர்க்கதரிசனங்கள் உண்மையாகிவிட்டதாக நம்புகிறார்கள். அதேசமயம், அவர் கணித்த அனைத்தும் இந்த நடந்த சம்பவங்களுடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்தும் எந்த பதிவுகளும் இல்லை.

இரண்டாம் உலகப் போர், செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் செப்டம்பர் 11 அன்று நியூயார்க் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை அவர் கணித்ததாகக் கூறப்படும் சில வரலாற்று நிகழ்வுகளாகும். 2025 ஆம் ஆண்டில், அவரது இரண்டு தீர்க்கதரிசனங்கள் நிஜமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பதிவில் 2025-ல் பலித்த பாபா வாங்காவின் கணிப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

Baba Vanga s 2025 Shocking Predictions That Came True

மியான்மர் பூகம்பம் 2025

மார்ச் 28, 2025 அன்று மியான்மரில் 7.9 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த இயற்கைப் பேரழிவில் 2,700-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், அதுமட்டுமின்றி 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாபா வாங்கா இந்த பேரழிவை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுகிறது. பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்களில் 2025 ஆம் ஆண்டு "நடுங்கும் பூகம்பங்கள்" ஏற்படும் என்று முன்னறிவித்தார். இந்த நிலநடுக்கம் மியான்மரை மட்டுமல்ல, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்நாமில் உள்ள கட்டிடங்களையும் உலுக்கியது.

ரஷ்ய பூகம்பம் 2025

ஜூலை 30 அன்று ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​2025-இல் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அலாஸ்கா, ஜப்பான், ஹவாய் மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு பூகம்பத்திற்குப் பிறகு உலகளவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். இருப்பினும், நிலநடுக்கம் அதிக சேதத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஒரு நல்ல செய்தி.

Baba Vanga s 2025 Shocking Predictions That Came True

ஜப்பானுக்கான இரட்டை தீர்க்கதரிசனம்

கம்சட்கா பூகம்பம் மிகப் பெரியதாக இருந்ததால் அது ஜப்பானிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றாலும், ஹொக்கைடோ மற்றும் ஹொன்ஷு கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாபா வாங்கா மட்டுமல்ல, ஜப்பானின் புதிய பாபா வாங்கா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ரியோ டாட்சுகியும் ஜூலை மாதம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்திருந்தார். இருப்பினும், ஜப்பானில் எந்த பேரழிவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த இரட்டை தீர்க்கதரிசனத்தின் காரணமாக சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்தது.

பொருளாதார வீழ்ச்சி

பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டு பொருளாதார பேரழிவை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளார். அவரது சமீபத்திய தாக்குதல் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. ரஷ்யாவிடம் எண்ணெயை வாங்குவதாகக் கூறி டிரம்ப் இந்தியாவின் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார். அவரது பொருளாதாரக் கொள்கைகள் உலக சந்தைகளில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவில் எரிமலை வெடிப்புகள்

பாபா வாங்கா "வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரே நேரத்தில் எழும் இரட்டை நெருப்பை" கணித்ததாகவும் நம்பப்படுகிறது. இது எரிமலை வெடிப்புகளைக் குறிக்கிறது என்று அவரை பின்பற்றுபவர்களால் நம்பப்படுகிறது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல எரிமலைகளை வெடிக்கத் தூண்டியது. கம்சட்கா பகுதியில் உள்ள கிளைச்செவ்ஸ்கயா சோப்கா முதலில் வெடித்தது, அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 550 ஆண்டுகளுக்குப் பிறகு க்ராஷென்னின்னிகோவ் எரிமலை வெடித்தது. பூகம்பத்தால் குறைந்தது ஏழு எரிமலைகள் ஆக்டிவ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன, மேலும் வரும் மாதங்களில் மேலும் வெடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Story first published: Monday, September 1, 2025, 12:24 [IST]
Desktop Bottom Promotion