Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
அடுத்த 20 ஆண்டுகளில் இந்த நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடப்பதாக கூறும் பாபா வாங்கா.. என்னென்ன நாடு-ன்னு பாருங்க..
Baba Vanga's Prediction: உலகில் எதிர்காலத்தைக் கணிக்கும் பல தீர்க்கதரசிகள் உள்ளனர். அதில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் பாபா வாங்கா. இதுவரை பாபா வாங்கா கணித்த பல நிகழ்வுகள் உண்மையாகியுள்ளதால், இவரது கணிப்புகளை அறிய பலரும் ஆவலுடன் இருப்பர். குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போர் முதல் செர்னோபில் பேரழிவு வரை இவரது கணிப்புகள் உண்மையாகியுள்ளன.
பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கத்தரசியான பாபா வாங்காவின் உண்மையான பெயர் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா ஆகும். இவருக்கு பார்வை தெரியாது. 12 வயதாக இருக்கும் போது, ஒரு சம்பவத்தால், அவரது பார்வை பறிபோனது.

ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் ஒரு அற்புதமான சக்தி கிடைத்தது. அது தான் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்கும் திறன். ஆரம்பத்தில் இவர் கூறியதை எவரும் நம்பவில்லை.
ஆனால் ஒருகட்டத்தில் இவரது கணிப்புகளுள் சில நடக்க தொடங்கிய பின், மக்கள் இவரது கணிப்புகளை அறிய விரும்பினர். இவர் இறப்பதற்கு முன் வரவிருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருக்கும் சம்பவங்களை கணித்து குறிப்புக்களாக எழுதி வைத்துள்ளார்.
இஸ்லாமிய ஆட்சியை கணித்த பாபா வாங்கா
பாபா வாங்காவின் பிரபலமான கணிப்புகளில் ஒன்று ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், 2043 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பா முஸ்லீம் ஆட்சியின் கீழ் வரும் என்று கணித்துள்ளார். அதோடு 2076 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் கம்யூனிச ஆட்சி மீண்டும் வரும் என்றும் பாபா வாங்கா கணித்தார். மிக முக்கியமாக, ஒரு இயற்கை நிகழ்வின் காரணமாக உலகம் இறுதியாக 5079 இல் முடிவுக்கு வரும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இப்போது பாபா வாங்காவின் வேறுசில கணிப்புகளைக் காண்போம்.
* 2028 ஆம் ஆண்டில் உலக பசியை ஒழிக்கும் புதிய சக்தி ஆதாரம் உருவாக்கப்படுவதோடு, மனிதர்கள் வீனஸ் கிரகத்தை அடைவார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
* 2033 ஆம் ஆண்டில் கடல் மட்டம் உயர்வது போன்ற காலநிலை மாற்றம் ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதோடு, பேராபத்தை ஏற்படுத்தும் என்று பாபா வாங்கா கணித்துள்ளதாக டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் அறிக்கை கூறுகிறது.
* 2043 ஆம் ஆண்டில் ஐரோப்பா ஒரு செழிப்பான பொருளாதாரத்தை அனுபவிப்பதோடு, இஸ்லாமிய ஆட்சி நடத்தும் நாடாகவும் மாறும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
* 2046 ஆம் ஆண்டில் செயற்கை உறுப்புகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாக பாபா வாங்கா கணித்துள்ளார்.
* 2066 ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு சுற்றுச்சூழல் அழிவு ஆயுதத்தை கண்டுபிடிக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











