Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
பாபா வங்கா சிரியாவில் நடக்கும் போர் பற்றி என்ன கணித்துள்ளார் தெரியுமா? இது நடந்தா மூன்றாம் உலகப்போர் கன்பார்ம்
பல்கேரியவை சேர்ந்த பாபா வங்காவின் பல கணிப்புகள் இதுவரை துல்லியமாக பலித்துள்ளது, அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போர் வெடிப்பது உட்பட பல அச்சுறுத்தும் தீர்க்கதரிசனங்களை அவர் செய்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் சிரியாவில் நடந்து வரும் அமைதியின்மை போன்ற உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து வருவதால், பாபா வங்காவின் கணிப்புகள் இந்த முறையும் சரியாக இருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள்.
சிரியாவின் வீழ்ச்சி பேரழிவு தரும் உலகளாவிய மோதலுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக செயல்படும் என்று பாபா வங்கா எச்சரித்துள்ளார். கிட்டதட்ட 12 ஆண்டுகளாக சிரியா உள்நாட்டு போரை எதிர்கொண்டுள்ள நிலையில், சமீபத்திய நிலைமை இந்த போரை தீவிரப்படுத்தியுள்ளன. ஒரு புதிய கிளர்ச்சிக் கூட்டணி சமீபத்தில் ஒரு எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கியது மற்றும் அலெப்போவை வெற்றிகரமாகக் கைப்பற்றியது. கடந்த 48 மணி நேரத்தில், சிரியாவில் டமாஸ்கஸ் வீழ்ச்சி, அதிபர் பஷர் அல்-ஆசாத் பதவி நீக்கம், நாடு முழுவதும் புதிய கிளர்ச்சிக் கொடி ஏற்றப்பட்டது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது.

சிரியா பற்றிய கணிப்புகள்
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் தொடர்புடைய போராளிகள் கடந்த வாரம் இந்த தாக்குதலை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது, கடந்த 12 ஆண்டுகளில் இப்போதுதான் கிளர்ச்சியாளர்கள் குழு குறிப்பிடத்தக்க பகுதியைக் கைப்பற்றி உள்ளது. இந்த சம்பவம் பாபா வாங்காவின் ஆச்சரியப்பட வைக்கும் தீர்க்கதரிசனத்திற்கு புதிய கவனத்தை கொண்டு வந்துள்ளது. "சிரியா வீழ்ச்சியடையும் போது, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போர் வரும். வசந்த காலத்தில், கிழக்கில் ஒரு மோதல் வெடிக்கும், இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் - அந்த போர் மேற்கு பகுதியை அழிக்கும் ". அவரது தீர்க்கதரிசனத்தின் மற்றொரு ரகசிய பகுதி, "சிரியா வெற்றியாளரின் காலில் விழும், ஆனால் வெற்றியாளர் ஒருவராக இருக்க மாட்டார்" என்று கூறுகிறது.
சிரியாவின் உள்நாட்டுப்போர்
வடக்கில் துருக்கி, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் ஈராக், மேற்கில் லெபனான் மற்றும் தென்மேற்கில் இஸ்ரேல் எல்லையில் உள்ள மத்திய கிழக்கு நாடான சிரியா, 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் மீண்டும் எழுச்சியை சந்தித்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கிளர்ச்சிக் கூட்டணி சமீபத்தில் ஒரு ஆச்சரியமான தாக்குதலைத் தொடங்கியது, 2016 க்குப் பிறகு இதுவே எதிர்பாராத முதல் தாக்குதலாகும். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் கட்டுப்பாட்டை கிளர்ச்சி கூட்டணி வெற்றிகரமாகக் கைப்பற்றியது.
பாபா வங்கா எப்படி துல்லியமாக தீர்க்கதரிசனங்ளை வழங்கினார்?
பாபா வங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா சுர்சேவா, அவர் 1911 இல் இன்றைய வடக்கு மாசிடோனியாவில் பிறந்தார். அவர் ஒரு பல்கேரிய ஆன்மீகவாதி மற்றும் மூலிகை மருத்துவர், அவர் ஒரு புயலில் இருந்து தப்பிய பின்னர் 12 வயதில் தனது பார்வையை இழந்தார், இது எதிர்பாராத சம்பவம் எதிர்காலத்தை கணிக்கும் திறனை தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.
வங்காவின் கணிப்புகள் அவற்றின் துல்லியம் காரணமாக உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளன. அவரது தீர்க்கதரிசனங்கள் 5079 ஆம் ஆண்டு வரை மட்டுமே நீடிக்கும் என்று கூறப்படுகிறது, இது உலகின் முடிவைக் குறிக்கும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போது, அவருடைய கணிப்புகள் கவனிக்கப்படுகின்றன, அவற்றில் பல இன்றும் உலகம் முழுக்க பெரும்பாலான மக்களால் கவனிக்கப்படுகின்றன.
அவரது முக்கிய கணிப்புகளில் 9/11 தாக்குதல்கள், 2000 குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் பேரழிவு, புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய கடுமையான காலநிலை மாற்றங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போரைப் பற்றிய எச்சரிக்கைகள் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை.



Click it and Unblock the Notifications

