Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
உலகப்போர் முதல் தங்க விலை உயர்வு வரை பாபா வாங்கா கணிப்பு படி 2026-ல் வரப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா?
பல தசாப்தங்களுக்கு முன்னரே காலமான போதிலும், பல்கேரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, உலகளாவிய ஆர்வத்திற்கும் சர்ச்சைகளுக்கும் உரிய ஒரு நபராகவே இன்றும் திகழ்கிறார். 'பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் இவர், உலகப் போர்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உட்பட உலகின் மிக முக்கியமான நிகழ்வுகளை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் எதிர்காலத்தைப் பற்றி அறிய விரும்பும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாபா வாங்காவின் கணிப்புகளைப் பற்றி தேடுகிறார்கள். உலகம் தொழில்நுட்ப முன்னேற்றம், புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் பருவகால நெருக்கடியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனம் குறித்த பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2026 ஆம் ஆண்டு ஒரு ஆபத்தான ஆண்டாக இருக்கும். உலகப் போர், பேரழிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் போன்ற கடுமையான பிரச்சினைகள் இந்த ஆண்டு உலகை அச்சறுத்தலாம். தற்போது வெனிசுலா-அமெரிக்கா இடையே நிலவும் பதட்டமான சூழல் காரணமாக உலகமே பதட்டமான சூழலில் உள்ளது. இந்த பதிவில் 2026-ல் உலகம் எதிர்கொள்ள போகும் அச்சுறுத்தல்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உலகப்போர்
பாபா வங்கா 2026-ல் சர்வதேச பதட்டங்கள் அதிகரிக்கும் என்று கணித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு பெரிய மோதல் ஏற்படலாம். 2026-ன் தொடக்கத்திலேயே அமெரிக்கா வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியிருப்பது இந்த கணிப்பை உறுதி செய்கிறது. முக்கிய நாடுகளுக்கு இடையேயான மோதல்களால் உலக அமைதி பாதிக்கப்படலாம்.
ரஷ்ய தலைவரின் உலகளாவிய எழுச்சி
2026-ஆம் ஆண்டில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு வலிமையான தலைவர் உலகெங்கிலும் அறியப்படுவார் என்று பாபா வங்கா கணித்துள்ளார். சர்வதேச அரசியலில் ரஷ்யா மேலும் சக்திவாய்ந்த நாடாக மாறக்கூடும். அந்த ரஷ்ய தலைவர் சர்வதேச மோதல்கள் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று கூறப்படுகிறது.
இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும்
வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் அதிகரிக்கக்கூடும். உலகின் சில நாடுகளில், காலநிலை சமநிலையின்மை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
ஏலியன்களுடனான தொடர்பு
பாபா வாங்காவின் சில கணிப்புகள் வேற்றுக்கிரக உயிரினங்களுடனான முதல் தொடர்பைப் பற்றி விளக்குகின்றன. அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேற்றுக்கிரக சிக்னல்களைக் கண்டறிய உதவக்கூடும். மேலும் இரகசிய விண்வெளித் திட்டங்கள் குறித்த தகவல்கள் அரசாங்கங்களால் வெளியிடப்படலாம்.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கட்டுப்படுத்தும்
செயற்கை நுண்ணறிவு உலகின் பல முக்கியமான துறைகளைக் கைப்பற்றக்கூடும். பல வேலைகளில், இயந்திரங்கள் மனிதர்களுக்குப் பதிலாக இடம்பிடிக்கலாம். செயற்கை நுண்ணறிவின் முடிவெடுக்கும் திறன் மேலும் பல நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்பக்கூடும். தொழில்நுட்பத்தின் மீதான அதீத சார்பு ஆபத்தானதாக இருக்கலாம். அன்றாட வாழ்க்கை டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்தப்படலாம்.
மருத்துவத்துறையில் திருப்புமுனை
மனிதர்களை அச்சுறுத்தும் சில கடுமையான நோய்களுக்குப் புதிய சிகிச்சைகள் கண்டறியப்படலாம். தொழில்நுட்பத்தால் மருத்துவத்துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படலாம். இந்த புதிய தொழிநுட்பங்களால் மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்.
பொருளாதார நிலையற்ற தன்மை
டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்கனவே கடுமையாக உயர்ந்து வருவதால், உலகச் சந்தைகள் கொந்தளிப்பைச் சந்திக்க நேரிடலாம். சில நாடுகளில் நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். பொருளாதர ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
குடியேற்றம் மற்றும் மக்கள்தொகை மாற்றம்
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக, பரவலான மக்களின் இடப்பெயர்வு ஏற்படலாம். மக்கள்தொகை இடப்பெயர்வானது பொருளாதார மற்றும் தட்பவெப்பநிலைக் காரணிகளால் தூண்டப்படுகிறது.



Click it and Unblock the Notifications
