Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டில் நடக்கும் இந்த 4 சம்பவங்கள் பண நெருக்கடி வரப்போவதை தான் குறிக்கிறது... உஷாரா இருங்க...
Astrology Tips In Tamil: ஒருவருக்கு நல்லது அல்லது கெட்டது நடக்கப் போகிறது என்றால், அதற்கு முன் அதை உணர்த்தும் வகையில் ஒருசில அறிகுறிகள் தென்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
எப்படி ஒருவரிடம் நிறைய பணம் சேரப் போகிறது என்றால் ஒருசில அறிகுறிகள் தெரிகிறதோ, அதேப் போல் பண பிரச்சனை அல்லது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகியிருந்தால், அதையும் ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும்.

எப்போது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகிறோமோ, அப்போது தான் ஒருவரது வாழ்வில் பண பிரச்சனைகள் அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கை சிரமங்கள் நிறைந்து இருக்கும். இதைக் குறிக்கும் அறிகுறிகள் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எப்போது ஒருவர் தங்கள் வீடுகளில் இம்மாதிரியான அறிகுறிகளை அல்லது சம்பவங்களை சந்திக்கிறாரோ, அப்போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது பண நெருக்கடி அல்லது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகியிருந்தால் வெளிப்படும் அறிகுறிகளைக் காண்போம்.
1. நகை காணாமல் போவது
வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனாலோ அல்லது கீழே விழுந்தாலோ, அது லட்சுமி தேவி உங்கள் மீது கோபமாக உள்ளார் என்பதற்கான அறிகுறியாகும். இம்மாதிரியான சூழ்நிலையில் தங்களிடம் உள்ள மற்ற பொருட்களை இன்னும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை தவிர்க்கக லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.
2. குழாயில் நீர் சொட்டுவது
நீரை வீணாக்குவது பண இழப்பைக் குறிக்கிறது. அதுவும் உங்கள் வீட்டில் உள்ள குழாயில் இருந்து நீர் சொட்டுகிறது என்றால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அந்த நீர் வீணாவது போன்று, கையில் உள்ள பணமும் வீணாக செலவாகும். இதன் விளைவாக மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
3. பால் கை தவறுவது
வெள்ளையான பால் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. பாலால் செய்யப்பட்ட பலகாரங்களை லட்சுமி தேவிக்கு படைத்து வழிபட்டால் லட்சுமி தேவி மகிழ்வதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பால் கைத்தவறி அடிக்கடி விழுவிது நல்லதல்ல. அப்படி விழுகிறது என்றால் லட்சுமி தேவி கோபமாக உள்ளார் என்று அர்த்தம். இதனால் மிகுந்த பண நெருக்கடியை சந்திக்க நேரிம். இதைத் தவிர்க்க லட்சுமி தேவியை மகிழ்விக்கும்படியான பூஜைகளை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.
4. மணி பிளாண்ட் காய்ந்து போவது
தற்போது பெரும்பாலானோரின் வீட்டில் மணி பிளாண்ட் வளர்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் வாஸ்துப்படி மணி பிளாண்ட் பணத்தை ஈர்க்கும் செடியாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமென பலரும் தங்கள் வீடுகளில் இதை வளர்த்து வருகிறார்கள். ஆனால் இந்த மணி பிளாண்ட் செடியின் இலைகள் காய்ந்து போவது நல்லதல்ல. அப்படி காய்ந்தால், வீட்டில் பண பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். இந்நிலையில் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications