Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
April Fools’ Day: உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் எப்படியெல்லாம் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது தெரியுமா?
April Fools' Day: ஏப்ரல் 1 ஆம் தேதியை நாம் முட்டாள்கள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளுக்கு பின்னால் பல வேடிக்கையான தகவல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாடுகளிலும் வேடிக்கையான கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.
பிரான்ஸ், ஐப்பான், அமெரிக்கா என பல நாடுகளில் இந்த முட்டாள்கள் தினத்தை வேடிக்கையாக கொண்டாடி வருகின்றனர். இங்கு ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றுவதை காட்டிலும் பல வேடிக்கையான நிகழ்ச்சிகளை அவர்கள் செய்து வருகின்றனர். அதைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

முட்டாள்கள் தினக் கொண்டாட்டம் முதலில் எங்கு தொடங்கியது?
முட்டாள்கள் தினம் முதன் முதலில் ஐரோப்பியக் கண்டத்தில் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. 5 ஆம் நூற்றாண்டில் இருந்து 15 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
வித்தியாசமான முட்டாள்கள் தினக் கொண்டாட்டம்:
பிரான்ஸ் : முதுகுக்கு பின்னாடி மீன்களை ஒட்டுதல்
பிரான்ஸில் இந்த முட்டாள்கள் தினத்தில் ஒரு வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. நீண்ட கால பாரம்பரியமாக ஒருத்தர் முதுகுக்கு பின்னாடி காகித மீன்களை ஒட்டி மகிழ்கின்றனர். மேலும் " kick me" என்ற வாசகங்களையும் எழுதுகின்றனர். இதை " ஏப்ரல் ஃபிஷ்" கொண்டாட்டம் என்கின்றனர். இந்த மாதிரியான வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்கள் மகிழ்கின்றனர்.
அமெரிக்கா: அப்பாவிகளின் நாளாக கொண்டாடப்படுகிறது
அமெரிக்காவில் முட்டாள்கள் தினத்தை அப்பாவிகளின் நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் நகைச்சுவை மற்றும் குறும்புகளுக்கு பஞ்சமே இருக்காது. "தியா தாஸ் மென்டிராஸ்" அல்லது "டே ஆஃப் லைஸ்" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி மகிழ்கின்றனர்.
ஸ்பெயின் : உணவு சண்டை போடுகிறார்கள்
ஸ்பெயினின் ஒரு பகுதியில் உணவு சண்டை புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது. ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் நகரம் முழுவதும் உணவுப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். "எல் டியா டி லாஸ் இனோசென்டெஸ்" என்ற பெயரில் இதை கொண்டாடுகின்றனர். இந்த பாரம்பரியம் அங்கு 200 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறதாம். இங்கு இராணுவ பாணியில் "கைப்பற்றுதல்" நடைபெறுகிறது. ஒருத்தர் மேல் ஒருத்தர் மாவு எறிவது, நடனம் என கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஈரான் : பழைய மரபை கொண்டாடுகின்றனர் (சிஸ்தா பெதார்)
ஈரானில் உள்ள மக்கள் பழைய மரபை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த மரபுக் கொண்டாட்டம் கிமு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது. இவர்கள் தங்கள் முன்னோர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். இது பண்டைய ரோமானியர்களின் ஹிலாரியா கொண்டாட்டம் போன்று முன்னோடிகளுடன் தொடர்புடையது என்கின்றனர் அங்குள்ள மக்கள்.
ஸ்காட்லாந்து : காக்கா பறவைகள் என்ற கொண்டாட்டம்
ஸ்காட்லாந்தில் முட்டாள்கள் தினமானது gowkie தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஏமாற்றப்படுபவர்கள்" கெளக்ஸ்" (காக்கா பறவைகள்) என்று அழைக்கப்படுகின்றனர். முட்டாள்கள் " காக்காயின் சின்னமாக" அனுசரிக்கப்படுகின்றனர்.
நெதர்லாந்து: நினைவு கூர்தல் தினம்
டச்சு மக்கள் ஏப்ரல் 1 ஆம் தேதியை நகைச்சுவையாக விளையாட விரும்புகிறார்கள். அவர்கள் 1572 ஆம் ஆண்டு இதே நாளில் டென் பிரைல் நகரத்தை ஸ்பானியரிடம் இருந்து கைப்பற்றியதை அவர்கள் நினைவுகூருகிறார்கள். அதற்கு முன்னாடி நெதர்லாந்து ஸ்பானிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த நாளை அவர்கள் நகைச்சுவை உணர்வுகளுடன் கழிக்கின்றனர்.
கிரீஸ்: ஒருத்தரை ஒருத்தர் கேலி செய்வது
கிரீஸில் மக்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து மகிழ்கின்றனர். முட்டாள்கள் தினத்தில் யாரையாவது வெற்றிகரமாக ஏமாற்றினால் அந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகின்றனர். மழையில் நடனமாடுவது போன்ற விஷயங்களை அவர்கள் செய்கின்றனர்.
ஸ்வீடன்: தந்திரமான விளையாட்டுகள்
ஸ்வீடனில் முட்டாள்கள் தினத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் தந்திரமான விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பி கொண்டாடுகின்றனர். ஸ்வீடிஷ் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், 1967 இல் தங்கள் கருப்பு மற்றும் வெள்ளை டீவி களுக்கு பதிலாக உடனடி கலர் டிவியைப் பெறலாம் என்று மக்களிடம் கூறியது.



Click it and Unblock the Notifications
