Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் எங்க ஹனிமூன் போயிருக்காங்க தெரியுமா? இங்க ஒரு நாளுக்கு தங்க எவ்வளவு தெரியுமா?
கடந்த சில மாதங்களாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக இருந்த முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் மகனின் திருமணம் முடிந்துவிட்டது. பிரம்மாண்டமான திருமணத்திற்கு முந்தைய விழாக்களுக்குப் பிறகு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் அதைவிட பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அறிக்கைகளின்படி, அம்பானி திருமணத்திற்கான செலவு இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் செலவான 163 மில்லியன் டாலர்களை கடந்துவிட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்கள் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர்கள் தோன்றியதைத் தொடர்ந்து, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இப்போது கோஸ்டாரிகாவில் தங்கள் தேனிலவை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. General Directorate of Migration அறிக்கையின் படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகஸ்ட் 1 அன்று கோஸ்டாரிகாவை அடைந்தனர்.
புதுமணத் தம்பதிகள் ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் காசா லாஸ் ஓலாஸில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த தனித்துவமான இடமானது அதன் விருந்தினர்களுக்கு பிரத்தியேகமானது மற்றும் அதன் ஆடம்பரமான வேலைப்பாடுகள் மற்றும் நேர்த்தியான சுற்றுப்புறங்களுக்காக நன்கு அறியப்பட்டதாகும். இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒரு இரவுக்கான விலை $30,000 அதாவது ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாகும்.
இந்த திருமணத்தில் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட அவரது ஆடையின் விலையே 214 கோடி ரூபாயாகும். 14-கோடி ப்ரூச் மற்றும் ரிச்சர்ட் மில்லே RM 52-05 Tourbillon Pharrell Williams உட்பட இதன் விலை நம்ப முடியாததாகும். மேலும் ஆனந்த் அம்பானி கட்டியிருக்கும் கடிகாரத்தின் விலை 54 கோடியாகும். இந்த நிலையில் ஒரு இரவுக்கு 25 லட்சம் செலவழிப்பது அவர்களுக்கு பெரிய விஷயமல்ல.
காசா லாஸ் ஓலாஸ் பிரீட்டா விரிகுடாவின் காட்சிகளைக் கொண்ட ஒரு ஆடம்பரமான ரிசார்ட் ஆகும். இது காஸ்மோபாலிட்டன் நேர்த்தியை வீட்டு வசதியுடன் ஒருங்கிணைக்கிறது மற்றும் நிறைய திறந்தவெளிகள், பனை மரங்கள் மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த முன்புறம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாஸ்டர் படுக்கையறைகள் விரடோர் கடற்கரையின் பாறைகள் மற்றும் நீரின் காட்சியை வழங்குகிறது. இந்த இடத்தில் ஒரு அதிநவீன ஊடக அறை மற்றும் ஒரு கம்பீரமான 100-அடி குளத்தால் சூழப்பட்ட ஒரு விரிவான வெளிப்புற பொழுதுபோக்கு பகுதி உள்ளது.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணமானது, இவான்கா டிரம்ப், மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜஸ்டின் பீபர் மற்றும் கர்தாஷியன் சகோதரிகள், ஜான் சீனா போன்ற சர்வதேச பிரபலங்கள் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நயன்தாரா, இயக்குனர் அட்லீ உட்பட பல திரைபிரபலங்கள் உட்பட பல குறிப்பிடத்தக்க விருந்தினர்களின் வருகையைக் கொண்டிருந்த ஒரு உயர்மட்ட நிகழ்வாகும்.
இந்த திருமணத்திற்கான சரியான செலவு எவ்வளவு என்று தெரியவில்லை என்றாலும், முகேஷ் அம்பானி, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புடன், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு 5000 கோடி ரூபாய் செலவிட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications
