Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
அட்சய திருதியை நாளில் தங்கத்திற்கு பதிலா இந்த பொருட்களை வாங்கினால் செல்வம் இரட்டிப்பாகும்...
Akshaya Tritiya 2023: அட்சய திருதியை மிகவும் புனிதமான நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளானது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும், அந்த காரியத்தில் இரட்டிப்பு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிககை. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 22 ஆம் தேதி வருகிறது.
இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளில் 6 மங்களகரமான யோகங்கள் உருவாவதால், இந்நாள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பொதுவாக அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போதைய தங்கத்தின் விலையைப் பார்க்கும் போது, சாமானிய மக்களால் தங்கத்தை வாங்குவது என்பது எளிதானது அல்ல. இருப்பினும் தங்கத்தைத் தவிர, வேறு சில பொருட்களை வாங்கினாலும், வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும். இப்போது அந்த பொருட்களை எவையென்பதைக் காண்போம்.

2023 அட்சய திருதியை தேதி
இந்து நாட்காட்டியின் படி, சித்திரை மாதத்தின் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 07.48 மணிக்கு அட்சய திருதியை திதி தொடங்கி, ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.46 மணிக்கு திதி முடிவடைகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் எப்போது வேண்டுமானாலும், ஒருவர் தங்கம் மற்றும் அதற்கு இணையான பலனைத் தரும் பொருட்களை வாங்கலாம்.
மங்களகரமான யோகங்கள்
ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை நாளில் 6 மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. அவை சர்வார்த்த சித்தி யோகம், திரிபுஷ்கர் யோகம், ஆயுஷ்மான் யோகம், சௌபாக்ய யோகம், ரவி யோகம் மற்றும் அம்ரித சித்தி யோகம் ஆகியவை ஆகும். இந்த யோகங்கள் அனைத்துமே மங்கங்களரமானதாக கருதப்படுவதால், இந்த ஆண்டு அட்சய திருதியை மேலும் சிறப்பாக வாய்ந்ததாக திகழ்கிறது. இப்போது அட்சய திருதியை அன்று தங்கத்தை தவிர வேறு எவற்றை வாங்கலாம் என்பதைக் காண்போம்.
பருப்பு/பயறு வகைகள்
அட்சய திருதியை நாளில் பயறு/பருப்பு வகைகளை வாங்குவது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக இவை செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இவற்றை நீரில் ஊற வைக்கும் போது, அவை பெரிதாக வீங்குவதால், அட்சய திருதியை நாளில் வாங்கி அவற்றை சமைக்கும் போது, வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சங்கு
சங்கு லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சங்கை அட்சய திருதியை நாளில் வீட்டில் வாங்கி வந்தால், வீட்டில் லட்சுமி தேவி குடிபுகுவாள். மேலும் லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செல்வம் பன்மடங்கு பெருகும். எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள், இந்த சங்கை வாங்கலாம்.
ஒற்றை கண் தேங்காய்
ஒற்றைக் கண் தேங்காய் மிகவும் அரிதானது. இந்த வகை தேங்காய் அதிர்ஷ்டத்தை மற்றும் செல்வத்தை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. இந்த ஒற்றை கண் தேங்காய் வீட்டில் இருந்தால், அந்த வீட்டில் லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும். மேலும் இந்த தேங்காய் வீட்டில் உள்ள பண பிரச்சனைகளை போக்கி, செல்வத்தை அதிகரிக்க வழிவகை செய்யும்.
மஞ்சள், கல் உப்பு
இந்து மதத்தில் மஞ்சள், கல் உப்பு போன்றவை மங்களகரமான பொருட்களாகும். எந்த ஒரு விசேஷம் நடந்தாலும், அதில் இந்த இரண்டு பொருட்களும் அவசியம் இடம் பெறும். ஏனெனில் இந்த இரண்டு பொருட்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்கிறார். எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள் மஞ்சள், கல் உப்பை அட்சய திருதியை நாளில் வாங்கலாம்.
ஸ்படிக ஆமை
உங்கள் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டமும், செழிப்பும் இருக்க வேண்டுமென விரும்பினால், அட்சய திருதியை நாளில் ஸ்படிக ஆமையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். சாஸ்திரத்தில் ஆமை ஒரு செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் செல்வம் பெருக இந்த வகை ஆமையை வாங்கி வீட்டில் வைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications














