Latest Updates
-
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..
இன்று ஆடி முதல் செவ்வாய்.. துர்கை அம்மனை இப்படி வழிபட்டால் திருமணம் கைக்கூடும்..!
தமிழ் மாதத்தின் 4வது மாதமான ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகும்.. இந்த மாதம் அம்மனுக்குரிய மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.. ஆடி மாதத்தில் அனைத்து தெய்வங்களின் சக்தியும் அம்பிகைக்குள் அடக்கம் என்பதால், பெண் சக்தியான மகாலட்சுமியை இந்த நாளில் வழிபடுவது அனைத்து விதமான செல்வமும் உங்க வீட்டிற்கு வந்துச் சேரும்..
அதிலும் ஆடி செவ்வாய் கிழமையில் துர்கை அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.. திருமணம் ஆன பெண்களுக்கு கணவனின் ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை..குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். அந்த வகையில் இன்று முதல் ஆடி செவ்வாய்கிழமை ஆகும்..

துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம்
செவ்வாய் கிழமையிலும் வெள்ளிகிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த வழிபாடு நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றி வணங்கிட வேண்டும்.
பூஜை செய்யும் முறை
இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்க வேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.
துர்கை அம்மனுக்குரிய மந்திரம்
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
துர்கைக்கு விளகேற்றும் முறை
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகள் தீர, செவ்வாய்க்கிழமையில் மாலை 3:30மணி 4:30மனை வரை ராகுக்கால நேரம்.. இந்த நேரத்தில் 5 எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டி கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்து ஏற்றலாம்..
அப்படி ஆடி மாதம் வரும் 5 செவ்வாய் கிழமைகளிலும் விளக்கு ஏற்றி வர பித்ரு தோஷம் மற்றும் திருமண தோஷம் நீங்கி நல்ல பலன் உண்டாகும். உடனே திருமணம் நிச்சமாகும் குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராகுகாலத்தில் பூஜை செய்வதினால் கிடைக்கும் பலன்கள்
ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக கருதப்படுகிறது. அதற்கு ஒரு காரணம் செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவராவார்... அதனால் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து செய்யும் ராகுகால துர்க்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். அதனால் திருமணத்தடை நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.



Click it and Unblock the Notifications