Latest Updates
-
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட
சுய மரியாதையை மேம்படுத்தும் செயல்கள்!!
சுய மரியாதை என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் விஷயமாகும். எந்த மனிதனும் சுய மரியாதை இல்லாமல் வாழ்வது என்பது இயலாத காரியமாகும். ஒருவன் நீர், ஆகாரம் இல்லாமல் இருந்தால் இறக்க நேரிடும். ஆனால் சுய மரியாதை இல்லாமல் இருந்தால், வாழ்ந்தாலும் இறந்ததற்கு சமானம்.
வாழ்க்கை என்பது நம்பிக்கையும், மரியாதையும் தான். இவை இரண்டும் இல்லையென்றால் இயங்குவதே வேஸ்ட். இந்த மரியாதையை அடைய நமக்கு நாம் தான் ஆசிரியர். அதற்கு எதை செய்தால் நம் பலம் உயரும் என்பதை புரிந்து செய்தல் வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியமான செயல்களை செய்வதால், நம் சுய கெளரவத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
நம் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதால், பல காரியங்களை செய்ய முடிவதோடு, மரியாதையையும் நிலைப்படுத்த முடியும். இப்போது இங்கு சுய மரியாதையை அதிகரிக்கும் செயல்களைக் காண்போமா...

உங்களை நீங்களே அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்
ஆமாம், உங்களது கூந்தல் அல்லது முகத்தை உங்களுக்கு ஏற்றாற்போல் திருத்தம் செய்து கொள்வதால், உங்களுக்கான அதிகப்படியான சுய கெளரவத்தை கொண்டு வர முடியும். மேலும் இது உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.

அழகாக ஆடையை அணிந்து கொள்ளுங்கள்
உங்களது ஆடையை உங்களுக்கு ஏற்றாற்போல் உடுத்தி கொண்டால், உங்களை காண்பவர் யாவரும் வியக்கும் படி காட்சி தருவீர்கள். அதுவே உங்களது மரியாதையை உயர்த்தும்.

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
அறிவு ஒருவருக்கு மரியாதையை பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புத்தகங்கள் படிப்பது, பல மனிதர்களை சந்தித்து நட்பு வளர்த்து கொள்வது, ஃபேஸ் புக் போன்றவை அறிவை பலப்படுத்தி, உங்களுக்கான மரியாதையை பெற்று தரும்.

நேர்மறையாக யோசிக்கவும்
எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக யோசிக்கும் எண்ணத்தை விடுத்து, நேர்மறையாக யோசித்தால், எந்த ஒரு பெரிய விஷயத்தையும் எளிதில் அடையலாம்.

முன் வந்து உதவுங்கள்
எந்த ஒரு மனிதனும் தன்னுடைய பங்கீட்டை முழுமையாக சமுதாயத்திற்காக கொடுத்தால் அதற்கான மரியாதையை பெற முடியும். அதிலும் தானாக முன் வந்து உதவி புரிதல், பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் போன்றவை மரியாதையையும், சமூக அந்தஸ்தையும் பெற்று தரும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியமும், மன வலிமையும் மேம்படும். மேலும் இது சுறுசுறுப்புடன் இயங்க வைப்பதுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படவும் செய்யும். அதிலும் நீச்சல், யோகா போன்ற உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
