Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
புடவைக்கு அழகு சேர்க்க, இந்த ஜாக்கெட் டிசைன்களை ட்ரை பண்ணுங்க...!!!
இந்தியாவின் பாரம்பரிய உடை தான் புடவை. மற்ற உடையை விட, புடவையில் தான் பெண்கள் மிகவும் அழகாகவும், பாரம்பரியத் தோற்றத்திலும் தெரிவார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதே சமயம் பெண்களுக்கு சரியான உடை என்றால் அதுவும் புடவை தான். ஆனால் அது ஒருவர் அணியும் விதத்தில் தான் உள்ளது. அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம்.
அதுவும் தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில லேட்டஸ்ட் ஜாக்கெட்டுகளின் டிசைன்களைக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்றும் கொடுத்துள்ளது. அதைப் பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள்.

மெட்டாலிக் ஜாக்கெட்
ப்ளைன் நிறத்தில் புடவை அணிந்தால், அதற்கு படத்தில் காட்டப்பட்டவாறு மெட்டாலிக் ஜாக்கெட்டி அணிந்தால், அது வித்தியாசமான தோற்றத்துடன், ஸ்டைலாகவும் இருக்கும்.

டபுள் கலர் ஜாக்கெட்
இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உடலுக்கு ஒரு நிறமும் வைத்து தைக்கப்படும் ஒரு டிசைன். இது அதிகப்படியான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.

கருப்பு மற்றும் கோல்டன் நிற ஷீர் ஜாக்கெட்
ஷீர் டைப் பிடிக்குமானால், இந்த மாதிரியான ஸ்டைலில் ஜாக்கெட்டை மேற்கொள்ளலாம்.

பஃப் ஜாக்கெட்
இன்னும் வித்தியாசமாக எதிர்பார்த்தால், படத்தில் காட்டியவாறு பஃப் கொண்ட ஜாக்கெட்டை அணியலாம்.

மின்னும் ஜாக்கெட்
இது மற்றொரு ஸ்டைலான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால், இது சில்வர் மற்றும் கோல்டன் கலந்து மின்னுவதால், இதனை சில்வர் மற்றும் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து புடவைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

வெல்வெட் ஜாக்கெட்
வெல்வெட் ஜாக்கெட் ஒரு ஸ்டைலான லுக்கை கொடுக்கும். அதிலும் இந்த ஜாக்கெட்டின் முனைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், இது ப்ளைனான அல்லது அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்
இது தான் ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட். இந்த மாதிரி ஜாக்கெட் அணிந்தால், அது செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஷீர் லேஸ் ஜாக்கெட்
புடவையை வித்தியாசமான முறையில் அணிய நினைத்தால், படத்தில் காட்டியவாறு ஷீர் லேஸ் கொண்ட ஜாக்கெட் அணிந்தால், அது புடவையின் தோற்றத்தையே மாற்றும்.

ஃபுல் நெக்லைன் ஜாக்கெட்
இந்த ஜாக்கெட் பார்த்தால், இதன் கழுத்து மேலே ஏறியும், முக்கால் கை கொண்டும் இருக்கும். இந்த மாதிரியான ஸ்டைலை, பல்வேறு நிறங்கள் கொண்ட புடவைக்கு மேற்கொள்ளலாம்.

ஒற்றை தோள்பட்டை கொண்ட ஜாக்கெட்
சோனம் கபூர் அணிந்திருக்கும் இந்த ஜாக்கெட் விசித்திரமான தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆகவே இந்த ஸ்டைல் பிடித்தால், அந்த மாதிரியான ஜாக்கெட்டை தேர்ந்தெடுங்கள்.

கோல்டன் ஜாக்கெட்
தங்க நிறம் கொண்ட புடவைக்கு, படத்தில் காட்டியவாறு காலர் கொண்டவாறான ஜாக்கெட்டை அணிந்தால், அது ஒரு ஹை லுக்கை கொடுக்கும்.

நீள்வட்ட ஜாக்கெட்
இந்த ஜாக்கெட்டின் ஸ்பெஷலை பார்த்தால், இதன் கழுத்து நீள்வட்ட வடிவில் இருக்கும். மேலும் முழுக் கை கொண்டிருக்கும்.

கட் அவுட் பேக்
இந்த ஜாக்கெட்டின் பின்புறம் டீப் கட் கொண்டிருப்பதோடு, கொக்கி இல்லாமல், கயிறு கொண்டு கட்டுவது போன்று இருக்கும்.

இடுப்பளவுள்ள ஜாக்கெட்
இந்த ஜாக்கெட் சட்டை போன்று, இடுப்பளவு நீளத்தில் இருக்கும்.

ரவுண்ட் நெக் ஜாக்கெட்
இந்த ஜாக்கெட் மிகவும் ஃபேஷனாகவும், கவர்ச்சியான தோற்றத்தையும் கொடுக்கும். ஏனெனில் இதில் கை ஏதும் இல்லாமல், ரவுண்ட் நெக் மட்டும் கொண்டிருக்கும்.

கோல்டன் ஜாக்கெட் பிளவுஸ்
இந்த பிளவுஸ் பார்ப்பதற்கு ஜாக்கெட் போன்று இருக்கும். இது பார்டர் கொண்ட ப்ளைன் நிற உடைக்கு பொருத்தமாக இருக்கும்.

ஹை நெக் ஜாக்கெட்
இந்த புடவையின் ஜாக்கெட்டைப் பார்த்தால், இது அதிக நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட காலர் மற்றும் ஃபுல் ஸ்லீவ் கொண்டு இருக்கும். இது அதிகப்படியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் புடவைக்கு ஏற்றதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications