Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
காஞ்சிபுரம் சேலையில் கலக்கிய சோனம் கபூர்!!!
இந்தியில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்து வெளிவந்த ராஞ்சனா திரைப்படம் வெற்றிகாரமாக ஓட வேண்டுமென்று, சோனம் கபூர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, அப்படத்தை விளம்பரப்படுத்தினார். அப்போது சோனம் கபூர் தமிழ்நாட்டிற்கு, தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அழகான காஞ்சிபுர பட்டுப்புடவையில் சோனம் கபூர் வந்தார்.
இந்த நிலையில் அந்த ராஞ்சனா திரைப்படம், இன்று தமிழில் அம்பிகாவதியாக வெளியாகியுள்ளது. இவர் ராஞ்சனா படத்திற்காக தமிழ் பாரம்பரியத்தில் வந்து விளம்பரப்படுத்தியது ராஞ்சனாவிற்கு மட்டுமின்றி, தமிழில் வெளியாகியுள்ள அம்பிகாவதிக்கும் என்பது போல் தான் இருந்தது. ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் ராஞ்சனாவிற்கு விளம்பரப்படுத்திய விதம், தமிழிலும் அந்த படம் வரப்போகிறது, அதை தவறாமல் பாருங்கள் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது. சரி, இப்போது சோனம் கபூர் தமிழ்நாட்டிற்கு வந்த போது எப்படி வந்தார் என்பதைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்க்கலாமா!!!

காஞ்சிபுரம் சேலை
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு சேலை தான் காஞ்சிபுரம். பொதுவாக இந்த சேலையை பெண்கள் திருமணம் மற்றும் மற்ற ஆடம்பர நிகழ்ச்சிகளின் போது உடுத்துவார்கள். சோனம் கபூரும், ஆரஞ்சு கலந்த ரோஸ் நிற பட்டுப்புடவையை அணிந்து வந்தார்.

ஜிமிக்கி
சாதாரணமாக பட்டுப்புடவைக்கு ஜிமிக்கி போட்டால் தான் முகத்திற்கு ஒரு கலையே வரும். அந்த வகையில் சோனம் கபூர் அழகான பெரிய ஜிமிக்கியைப் போட்டிருப்பது, அவரது முகத்தில் இன்னும் அழகை அதிகரிக்கிறது.

கொண்டை
புடவைக்கு பெண்கள் கொண்டை அல்லது பின்னல் போடுவார்கள். ஆகவே சோனம் கபூர், இந்த பட்டுப் புடவைக்கு ஸ்டைலான ஒரு கொண்டைப் போட்டு வந்தார்.

மல்லிகைப்பூ
பொதுவாக தென்னிந்திய பெண்கள் புடவை அணிந்தால், மல்லிகைப்பூ வைக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படித் தான் சோனம் கபூரும், பட்டுப் புடவைக்கு கொண்டையின் மேல் மல்லிகைப் பூவைச் சுற்றி வைத்து வந்துள்ளார்.

பார்டர் ஜாக்கெட்
காஞ்சிபுர பட்டுப் புடவைக்கு, அதற்கு மேட்சாக பார்டர் உள்ள ஜாக்கெட்டுகளை அணிந்தால் தான் நன்றாக இருக்கும். எனவே சோனம் கபூர், சிறிதும் மாறாமல் அப்படியே வந்திருந்தார்.

காஜல்
பெண்களுக்கு அழகே கண்கள் தான். அத்தகைய கண்கள் கவர்ச்சியாக வெளிப்பட, சோனம் கபூர் கண்களுக்கு சற்று அடர்த்தியாக காஜலை போட்டு வந்திருந்தார்.

போட்லி பேக்
என்ன தான் தலை முதல் கால் வரை பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தாலும், அங்கு பேக் மட்டும் இல்லாமல் இல்லை. சோனம் கபூர் முற்றிலும் தென்னிந்திய பாணியில் காணப்பட வேண்டுமென்று, உடைக்கு ஏற்றவாறே அழகான சிறிய போட்லி பேக்கை கொண்டு வந்தார்.

அழகி
எவ்வளவு தான் ஃபேஷனாக இருந்தாலும், தமிழ் பாரம்பரிய உடையை அணிந்ததும், சோனம் கபூரின் தோற்றமே மாறிவிட்டது தானே!



Click it and Unblock the Notifications
