Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
ஏகதந்தா பற்றிய புராணங்கள்: விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கட்டுரை
ஏன் பிள்ளையாருக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருக்கிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? பலர் அதை கவனித்திருக்கவே மாட்டோம் அல்லவா! எதனால் ஒரு தந்தம் மட்டும் இருக்கிறது என்பதை அறிய மேலும் படியுங்கள்.
ஏகதந்தா என்பது ஒற்றை தந்தம் மட்டுமே உடைய பிள்ளையாரின் வடிவமாகும். இந்து மதத்தின் முத்கல புராணத்தில் கணபதியின் இந்த உருவம் குறிப்பிடப்படுகிறது. ஏகதந்தா என்றால் ஒற்றைப் பல் என்று பொருள். மேலும் பிள்ளையாரின் 22 ஆவது அவதாரமாக ஏகதந்தா கருதப்படுகிறது. மதசுரா என்ற அசுரனை அழிக்க வேண்டி, இந்த அவதாரத்தை கணபதி எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
கணபதியின் ஏகதந்தா அவதாரத்தை ஒட்டி நிறைய புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றை கீழே காணலாம்.

பத்ம புராணத்தின் படி, சிவனைக் காண அவரது சிஷ்யரான பரசுராம் கைலாச மலை சென்றாராம். சிவன் தவத்தில் இருந்ததால், பரசுராமனை கணபதி தடுத்து நிறுத்த, கோபத்திற்கு புகழ்பெற்ற பரசுராமர் கணபதியை தனது கோடாரியால் தாக்கிவிட்டார்.
அந்த கோடாரி சிவனால் பரசுராமருக்கு பரிசளிக்கப்பட்டதை உணர்ந்து கொண்ட கணபதி, பரசுராமரை தடுக்காததால் கோடாரி வீச்சில் ஒரு தந்தம் உடைந்துவிட்டது. அன்றிலிருந்து கணபதி ஏகதந்தா என்றழைக்கப்பட்டார். பின்னர் பரசுராமன் தன் தவறை உணர்ந்து சிவன், பார்வதி மற்றும் பிள்ளையாரிடம் மன்னிப்பு கோரினார்.
ஒரு விருந்தில் மிக அதிகமான அளவில் லட்டுகளையும், மொடாக்குகளையும் உண்டு விட்டு, கணபதி அவரது வாகனமான கரெளஞ்சா என்னும் மூஞ்சூரின் மேல் அமர்ந்து திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு பாம்பைக் கண்டதும் கணபதியை அப்படியே போட்டுவிட்டு, மூஞ்சூர் ஓடிவிட்டது.
இதன் காரணமாக கணபதியின் வயிறு வெடித்து உள்ளே இருந்த இனிப்புகள் அனைத்தும் வெளியே வந்துவிட்டது. உடனே அந்த பாம்பைப் பிடித்து தன் வயிறை இறுகக் கட்டினாராம் கணபதி. இதைப் பார்த்து, சந்திரக்கடவுளும் சிரித்துவிட கணபதிக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் தனது ஒரு தந்தத்தைப் பிடிங்கி சந்திரனின் மேல் எறிந்து, இனி நீ முழு பிரகாசத்துடன் ஜொலிக்கவே முடியாது என சாபமிட்டாராம். ஏகதந்தா என அழைக்கப்பட இதுவும் ஒரு காரணமாம். மேலும் இதனால் தான் பிள்ளையார் சதுர்த்தியின் போது மக்கள் நிலவைப் பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள்.
மற்றொரு கதையில் தன் ஒரு தந்தத்தைப் பயன்படுத்தி மகாபாரதத்தின் ஒரு அத்தியாயத்தை வேத வியாசருக்காக கணபதி எழுதியதாகச் சொல்கிறார்கள்.
பொதுவாக ஏகதந்தா கணபதி பெரிய வயிறுடன், கருமையான நிறத்தில், நான்கு கைகளுடனும், உடைந்த தந்தத்துடனும் தோற்றமளிக்கிறார். அவரை வணங்குவது எந்த செயலிலும் வெற்றியைத் தரும் என சொல்லப்படுகிறது. மேலும் தன் பக்தர்களுக்காக கணபதி எதையும் தியாகம் செய்வார் என்பதையே ஒற்றை தந்தம் குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஆகவே ஏகதந்தா கணபதியை வழிபட்டு, அனைத்து காரியங்களிலும் வெற்றி வாகை சூடுங்கள்.



Click it and Unblock the Notifications
