Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
கேட் மிடில்டன் குட்டி ராஜகுமாரனுடன் கொடுத்த போஸ்கள்!!!
இங்கிலாந்து இளவரசியான கேட் மிடில்டன் கர்ப்பமாக இருந்தது அனைவரும் அறிந்ததே. அவர் கர்ப்பமாக இருக்கும் போதே, என்ன குழந்தை பிறக்கும், என்ன பெயர் வைப்பார்கள் என்ற பேச்சு மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கேட் மிடில்டன், ஜூ1லை 23 ஆம் தேதி, இரவு 7.14 மணிக்கு, லண்டனில் உள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இதனால் குஷியில் உள்ள வில்லியம் மற்றும் கேட், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் முன், மக்களுக்கு தங்களது குட்டி இளவரசனை மீடியாவின் மூலம் வெளிக்காட்டினர். இப்போது கேட் மற்றும் வில்லியம் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

வெளியே வரும் போது...
செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் வெளியே வரும் போது எடுத்தது.

இளவரசி டயானா
இது பிரசவத்திற்கு பின் டயானா மருத்துவமனையில் இருந்து வரும் போது எடுத்தது.

அழகான புன்னகை
அம்மா என்று அழைக்க குழந்தை பிறந்துவிட்டான் என்ற சந்தோஷத்தில் மருத்துவமனையில் இருந்து புன்னகையுடன வெளிவரும் போது எடுத்த படம்.

கையில் குழந்தையுடன் வில்லியம்ஸ்
தந்தை ஆகிவிட்டோம் என்ற சந்தோஷத்துடன் வில்லியம்ஸ் குழந்தையை தூக்கும் போது எடுத்தது.

குழந்தையின் ஹாய்...
குழந்தையை உற்று நோக்கினால், குழந்தை கூட அனைவருக்கும் ஹாய் சொல்வதை பார்க்கலாம்.

பெற்றோர் என்ற சந்தோஷப் புன்னகை
பெற்றோர் என்ற சந்தோஷப் புன்னகையுடன், போட்டோவிற்கு போஸ் கொடுத்த போது எடுத்த படம்.

வயிற்று வீக்கம்
இந்த படத்தில் பிரசவம் முடிந்துவிட்டாலும், போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது வயிறு பெரியதாக இருப்பது நன்கு வெளிப்படுகிறது.

காருக்கு செல்லும் போது...
இது குழந்தையுடன் கார் ஏற செல்லும் போது எடுத்தப் படம்.

தயாரான நிலையில் கார்
இது மருத்துவமனையில் இருந்து அரண்மனைக்கு செல்வதற்கு, வில்லியம்ஸ் கேட் மற்றும் குழந்தைக்கு காரைத் திறக்கும் போது எடுத்தது.

சாதாரண உடையில் வில்லியம்ஸ்
வில்லியம்ஸ் என்னதான் இளவரசராக இருந்தாலும், பிறந்த குழந்தையை பார்க்க வரும் போது சாதாரண உடையில் தான் வந்தார். மேலும் கேட் அணிந்துள்ள நீல நிற உடைக்கு மேட்ச்சாக, நீல நிற சட்டையை அணிந்திருந்தார். ஆனால் வில்லியம்ஸின் தந்தை இளவரசர் வேல்ஸ், வில்லியம்ஸ் பிறந்த போது கருப்பு நிற கோட் சூட்டில் ஆரம்பரமாக இருந்தார்.

டயானாவின் மோதிரம்
கேட் மிடில்டன் மருத்துவமனையில் இருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் போது, டயானாவின் நீல நிற மோதிரத்தை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
