Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உலகில் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பூச்சிகள்!!!
நிச்சயம் தலைப்பை படித்ததும், அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் பொதுவாக பூச்சியைப் பார்த்தாலே புல் அரிக்கும். இந்த நிலையில் பூச்சியை யாராவது சாப்பிடுவார்களா? என்ற எண்ணம் தான் அனைவரது மனதிலும் கேள்வியை எழுப்பும். ஆனால் உண்மையில், உலகில் உள்ள சில மக்கள் பூச்சிகளை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அதிலும் உலகில் உள்ள 80 சதவீத மக்கள், பூச்சிகளை சாப்பிடுவதில் அதிக நாட்டம் உள்ளவர்களாக உள்ளனர். அப்படி சாப்பிடக்கூடிய பூச்சிகளைக் கொண்டு செய்யப்படும் ரெசிபிக்களும், உலகிலேயே மிகவும் விலை அதிகமானவையாகவும் உள்ளன.
இப்போது அப்படி உலகில் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் சில பூச்சிகள் என்னவென்று பார்ப்போமா!!!

சாக்லெட் தேள்
பொதுவாக தேள் கொட்டும் தன்மையுடையது. ஆனால் இந்த தேள் கொட்டாது. ஏனெனில் இதனைத் தான் எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து விடுகிறோமே, பின் எப்படி கொட்டும். மேலும் இப்படி பொரித்தப் பின்னர், அதன் சுவையை அதிகரிக்க, அதன் மேல் சாக்லெட் சாஸ் ஊற்றி பரிமாறுகிறார்களாம்.

கரையான்
வீட்டில் உள்ள நாற்காலிகளை அழிக்கும் கரையான்களைக் கூட, ஆப்ரிக்காவில் உள்ள மக்கள் வறுத்து சாப்பிடுகிறார்களாம்.

பார்பெக்யூ கூட்டுப்புழு
அனைவரும் பார்பெக்யூ சிக்கன் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பார்பெக்யூ கூட்டுப்புழு கேள்விப்பட்டதுண்டா? ஆம், உலகில் உள்ள சில மக்கள் கூட்டுப்புழுவை நன்கு வேக வைத்து, அதனுள் இருக்கும் சதையை ரசித்து ருசித்து சாப்பிடுவார்களாம்.

கொசு முட்டை
அனைவரையும் கடித்து துன்புறுத்தும் கொசுக்களை பழிவாங்கும் விதமாக, மெக்சிகோவில் உள்ள மக்கள் கொசுக்களின் முட்டையை வெயிலில் உலர வைத்து, பின் அதனை வறுத்து, அதன் மேல் எலுமிச்சை சாற்றினை பிழிந்து சாப்பிடுவார்களாம்.

வறுத்த சிலந்தி
இது பார்ப்பதற்கே அருவெறுப்பாக இருந்தாலும், உண்மையில் கம்போடியாவில் உள்ள மக்கள் சிலந்திகளை வறுத்து, சாப்பிடுவார்களாம்.

கரப்பான் பூச்சி
உலகமே அழிந்தாலும், அழியாமல் இருக்கும் பூச்சியான கரப்பான் பூச்சியைக் கண்டால், அனைவரும் பயப்படுவோம். ஆனால் இந்த கரப்பான் பூச்சியை உலகின் சில பகுதிகளில் உள்ள மக்கள், வறுத்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவார்கள்.

வெட்டுக்கிளி
பண்டைய காலத்தில் உள்ள கிரேக்க நாட்டு மக்களின் விருப்பமான உணவு தான் வெட்டுக்கிளி. இப்போதும் இந்த வெட்டுக்கிளியை கிரேக்க மக்கள் விரும்பி சாப்பிடுவார்களாம்.



Click it and Unblock the Notifications