Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கேன்ஸ் 2013 திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் இந்திய திரை நட்சத்திரங்கள்!!!
கேன்ஸ் என்னும் திரைப்பட விருது விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்த கேன்ஸ் விருதும் ஆஸ்கர் விருதுக்கு நிகரான ஒன்று. இந்த விருதினையும் ஒவ்வொரு திரையுலக நட்சத்திரங்களின் மனதிலும் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். இந்த விருதானது, உலகில் உள்ள சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு திரைப்படங்களும் திரையிடப்படும். இந்த விருது விழாவிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
இத்தகைய விழாவில் இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர் போன்றோரும், மேலும் பல புதிய திரை நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர். அதில் வித்யா பாலன் மற்றும் அமீஷா பட்டேல் முதன்முறையாக சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இன்றும் அனைவரது மனதில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனும் சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கின்றனர்.
இந்த வருடத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு என்றால் அது இந்த இருவரின் வருகை தான். ஏற்கனவே முதல் நாளான நேற்று ஆரம்பித்த நிலையில், அமிதாப் பச்சன், வித்யா பாலன், சோனம் கபூர், ஃப்ரீடா பின்டோ ஆகியோர் வருகை தந்துவிட்டனர்.
இப்போது கேன்ஸ் 2013 திரைப்பட விருது விழாவில் அழகான ஆடைகளில் பங்கு கொள்ளும் இந்திய திரை நட்சத்திரங்களை பார்ப்போம்.

வித்யா பாலன்
இந்த விருது விழாவில் உள்ள 10 பேர் கொண்ட நடுவர் குழுமத்தில் ஒருவராக, வித்யா பாலன் இருக்கிறார். இவர் இந்த விழாவிற்கு இந்திய பாரம்பரிய உடையான அழகான புடவையில் கேன்ஸ் விழாவின் முதல் நாளே வந்துவிட்டார்.

அமிதாப் பச்சன்
'தி கிரேட் கேட்ஸ்பை' என்ற திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த அமிதாப் பச்சன், கேன்ஸ் விழாவின் முதல் நாளில் அழைக்கப்பட்டுள்ளார்.

சோனம் கபூர்
பாலிவுட் நடிகையான சோனம் கபூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் நாளே அழகான ஆடையில் வந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்துவிட்டார்.

ஃப்ரீடா பின்டோ
ஃப்ரீடா பின்டோ, அவரது 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படம் சர்வதேச மேல்முறையீடு காரணமாக, இவர் ஒவ்வொரு வருடமும் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளில் வருகைத் தருகிறார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
பொதுவாக ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவிற்கு வருகை தருகிறார். இந்த ஆண்டு இன்னும் அவர் வருகைத் தரவில்வை. எவ்வாறு வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நீல் நிதின் முகேஷ்
நீல் நிதின் முகேஷ், இவரது படமான 'ஷாட்கட் ரோமியோ' படத்திற்காக பங்கேற்கிறார்.

அமீஷா பட்டேல்
அமீஷா பட்டேலும் 'ஷாட்கட் ரோமியோ' படத்தின் ஒரு பகுதியில் நடித்துள்ளார். இவர் கேன்ஸ் விழாவிற்கு, சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது மனிஷ் மல்ஹோத்ரா அலங்காரத்தில் வருவதாக முடிவு செய்துள்ளாராம்.

ஷெர்லின் சோப்ரா
ஷெர்லின் சோப்ரா, அவர் நடித்த 'காமசூத்ரா 3டி' படத்திற்காக வருகைத் தருகிறார்.

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை எந்த பெரிய ஒரு விழாவிலும் பங்கேற்றதில்லை. இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வருகிறாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நந்திதா தாஸ்
இது நந்திதா தாஸின் இரண்டாவது வருகை. இவர் ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது, நடுவரில் ஒருவராக இருந்தார். இந்த வருடமும், இவர் சிறந்த குறும்படத்தை தேர்ந்தெடுக்கும் நடுவர்களுள் ஒருவராக இருக்கிறார்.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்பின் 'பாம்பே டாக்கீஸ்' படமானது, சினிமாவின் 100 ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் வகையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இது திரையிடப்படுகிறது.

நவாசுதீன் சித்திக்
நவாசுதீன் சித்திக், கேன்ஸ் 2013 இல் சிவப்பு கம்பளத்தில் நடக்கப்போகிறார்.



Click it and Unblock the Notifications
