Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
உலகம் ஒன்னுதான்.. ஆனால் அதில் எத்தனை வகை 'பாஸ்தா' இருக்குன்னு தெரியுமா?
பாஸ்தா ஒரு அருமையான இத்தாலியன் ரெசிபி. இது பலருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவுப் பொருள். ஆனால் பாஸ்தா இத்தாலியில் உருவானது இல்லை. உண்மையில் பாஸ்தாவானது ஒரு சீனாவில் தான் உருவாக்கப்பட்டது. மேலும் இதைப் பற்றிய ஒரு கட்டுக்கதையும் உள்ளது. அது என்னவெனில், 13 ஆம் நூற்றாண்டில் மார்கோபோலோ சீனாவில் இருந்து இத்தாலிக்கு செல்லும் போது பிரபலப்படுத்தினார் என்பது தான்.
அதுமட்டுமின்றி, இன்னொரு ஆச்சரியமான விஷயமும் உள்ளது. அது பாஸ்தா எந்த இயந்திரம் கொண்டும் செய்யப்படாமல், கையால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள். மேலும் பாஸ்தாவை உருவாக்கும் முதல் இயந்திரமானது 18 ஆம் நூற்றாண்டில் நேபிள்ஸ் அரசரான இரண்டாம் ஃபெர்டினாண்டோவால் உருவாக்கப்பட்டது. மேலும் முதலில் இத்தாலியில் கிடைக்கக்கூடிய மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாக உலர்ந்த பாஸ்தா இருந்தது. ஏனெனில் அதனை தயாரிக்க நிறைய செலவானது. அதன் பின்னர் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, பாஸ்தா அனைவரும் சாப்பிடக்கூடிய வகையில் மலிவான விலையில் கிடைத்தது.
இன்று உலக பாஸ்தா தினமாதலால், இப்போது பாஸ்தாவைப் பற்றிய யாரும் கேட்டிராத சில உண்மைகளைப் பார்ப்போம்.

* உலகில் இதுவரை 600 வகையான பாஸ்தாக்கள் கிடைக்கின்றன.
* இத்தாலியில் உள்ள சராசரி மக்கள், வருடத்திற்கு 51 பவுண்ட்டிற்கு மேலான பாஸ்தாவை சாப்பிடுவார்கள்.
* பாஸ்தாவில் உள்ள பச்சை நிற பாஸ்தா பசலைக்கீரையாலும், சிவப்பு நிற பாஸ்தா தக்காளியாலும், சாம்பல் நிற பாஸ்தா ஒருவித மையாலும் தயாரிக்கப்படுகிறது. ஆம், உண்மையில் சாம்பல் நிற பாஸ்தாவும் உள்ளது.
* ஒரு பில்லியன் பவுண்ட் பாஸ்தாவை சமைப்பதற்கு 2,021,452,000 கேலன் தண்ணீர் வேண்டும். இந்த தண்ணீரைக் கொண்டு 75,000 ஒலிம்பிக் அளவுள்ள நீச்சல் குளத்தையே நிரப்பலாம்.
* உயர் தர பாஸ்தாவானது, அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதியில் விளையும் ஒருவித கோதுமையினால் செய்யப்படுகிறது.
* இத்தாலியில் பாஸ்தாவை பிரபலப்படுத்திய கிறிஸ்டோபர் கொலம்பஸ், உலக பாஸ்தா நாளான அக்டோபர் மாதத்தில் தான் பிறந்தார்.
* சீன மக்கள் இந்த பாஸ்தாவை கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே சாப்பிடுகிறார்கள்.
இவையே பாஸ்தாவைப் பற்றிய உண்மைகள். ஆகவே உலக பாஸ்தா தினமான இன்று ஒருமுறையாவது பாஸ்தாவை சமைத்து சாப்பிட்டு, உலக பாஸ்தா தினத்தைக் கொண்டாடுங்கள்.



Click it and Unblock the Notifications