Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இளமைத் துள்ளலுடன் டெல்லி கவுச்சர் வீக்கில் கலக்கிய தபு!!!
பாலிவுட் நடிகையான தபுவை சாதாரணமாக, எந்த ஒரு விழாவிலும் காண முடியாது. ஏனெனில் சமீப காலமாக அவர் எந்த ஒரு விழாவிலும் பங்கு கொண்டதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவ்வளவு சீக்கிரம் எதிலும் பங்கு கொள்ளாதவர், டெல்லி கவுச்சர் வீக் 2013 ஆம் ஆண்டின் முதல் நாளில், மிகவும் பிரபலமான அஞ்சு மோடி என்னும் ஃபேஷன் டிசைனரின் ஆடையை அணிந்து, ராம்ப் வாக் நடந்தார்.
தபு அணிந்திருக்கும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்து லெஹெங்காவைப் பார்த்தால், அஞ்சு மோடி அந்த ஆடையை அவருக்காக வடிவமைத்திருப்பது போன்று காணப்படும். ஏனெனில் அந்த அளவில் தபு, லெஹெங்கா ஆடையில் மிகவும் இளமையான தோற்றத்தில் அழகாக காணப்படுகிறார்.
இப்போது அந்த டெல்லி கவுச்சர் வீக்கில், இளமைத் துள்ளலுடன் தபு ராம்ப் வாக் நடந்த போது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக...

அழகான நடை
இந்த படம் தபு டெல்லி கவுச்சர் வீக் 2013 இல் ஸ்டைலாகவும், இளமைத் துள்ளலுடனும் ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

வெல்வெட் ஜாக்கெட்
தபு அணிந்திருக்கும் லெஹெங்கா ஆடைக்கு, பழைய ஸ்டைலான ஃபுல் ஸ்லீவ் வெல்வெட் ஜாக்கெட் மீண்டும் ஒரு புதிய ட்ரெண்ட்டை வெளிப்படுத்துகிறது.

ஆரஞ்சு மற்றும் சிவப்பு லெஹெங்கா
உண்மையிலேயே, இந்த சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த லெஹெங்கா ஆடையில், நடிகை தபு செம அழகாக இருக்கிறார் தானே!

ஹேர் ஸ்டைல்
தபுவிற்கு அழகு என்று சொன்னால், அவரது கூந்தல் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவரது அந்த பட்டுப் போன்ற கூந்தலை, ஆடைக்கு ஏற்றவாறு ப்ரீ ஹேர் விட்டு வந்திருப்பது, அவரது அழகை இன்னும் கூட்டுகிறது.

நெக்லேஸ்
தபு, இந்த லெஹெங்காவிற்கு ஜாரோ நெக்லேஸ் அணிந்திருக்கிறார். சொல்லபோனால், இந்த ஆடைக்கு எந்த ஒரு அணிகலன்களை அணியாமல் இருந்தாலும், எந்த குறையும் தெரியாது. ஏனெனில், இவர் காதுகளுக்கு எந்த ஒரு கம்மலையும் போடவில்லை. ஆனால், எந்த குறையும் தெரியவில்லை தானே!

ப்ரேஸ்லெட்
தற்போது ப்ரேஸ்லெட் மிகவும் பிரபலமாகிவிட்டது. ஏனென்றால், சமீப காலமாக எந்த ஒரு பெண்ணும் வளையல்களை அதிகம் அணிந்திருப்பதை பார்க்க முடியவில்லை. அந்த வகையில் தபுவும், நல்ல அடர்த்தியான ஜாரோ ப்ரேஸ்லெட் அணிந்துள்ளார்.

முடிந்து வைத்த துப்பட்டா...
தபு, இந்த லெஹெங்கா ஆடைக்கு இருக்கும் துப்பட்டாவை, இடுப்பில் முடிந்திருப்பது, இன்னும் அழகாக உள்ளது.

அஞ்சு மோடியுடன்...
இந்த படம், தபு டெல்லி கவுச்சர் வீக்கில் ஃபேஷன் டிசைனரான அஞ்சு மோடியுடன் மேடையில் நடந்து வரும் போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
