Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2013 ஃபேஷன் வீக்கில் கலக்கிய பிரபலங்கள்!!!
டெல்லியில் நடைபெற்ற இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் 2013 நேற்று முடிந்தது. இந்த பிரைடல் ஃபேஷன் வீக்கில் பல நட்சத்திரங்கள், மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை அணிந்து வந்தனர். இதில் சாந்தனு மற்றும் நிகில், ஜே.ஜே.வலாயா, ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக், ரீனா தக்கா, ரோஹித் பால், ராகவேந்திரா சிங் ராத்தோர் மற்றும் பல டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த பிரைடல் கலெக்ஷன் ஆடைகளை வெளிக்கொணர்ந்தனர்.
மேலும் அந்த ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை ஒருசில பிரபலங்கள் அணிந்து ராம்ப் வாக் நடந்தனர். அதில் கங்கனா ரானாட், கபூர் பேடி, நேகா தூபியா, ஈசா குப்தா, அனில் கபூர் மற்றும் சோனம் கபூர் போன்றோரும் நடந்தனர்.
இப்போது இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் 2013 ஆம் ஆண்டு ராம்ப் வாக் மேற்கொண்ட பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

சோஃபி சௌத்ரி
இது ரினா டக்கா என்னும் ஆடை வடிவமைப்பாளரின் ஆடையை அணிந்து சோஃபி சௌத்ரி கலக்கலாக நடந்த போது எடுத்தது.

ப்ரதீக் மற்றும் மியரா தஸ்தர்
இது ரினா டக்காவின் மற்றொரு சிறப்பான ஆடையை ப்ரதீக் மற்றும் மியரா தஸ்தர் அணிந்து நடக்கும் போது எடுத்த படம்.

கபீர் பேடி
பாலிவுட் நடிகரான கபீர் பேடி, ஜே.ஜே. வலாயா என்னும் ஆடை வடிவமைப்பாளரின் உடையை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

கங்கனா ரானாத்
இது ஜே.ஜே. வலாயாவின் தங்க வேலைபாடுகளுடன் கூடிய லெஹெங்காவை அணிந்து கங்கனா ராம்ப் வாக் நடந்து போது எடுத்தது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் ஜோஸ்னா திவாரி வடிவமைத்த பிங்க் நிற கவுனை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அணிந்து நடந்தார்.

நேகா தூபியா
நேகா தூபியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக்கின் ஆடையை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

அனில் கபூர்
என்று மறக்க முடியாத நடிகரான அனில் கபூர், ராகவேந்திரா ராத்தோரின் கருப்பு நிற பந்த்கலா குர்தா மற்றும் வெள்ளை சுடிதார் அணிந்து, மிகவும் ஸ்டைலாக ராம்ப் வாக் நடந்தார்.

நர்கிஸ் ஃபேக்ரி
அஸிமா மற்றும் லீனா வடிவமைத்த ஆலப் கலெக்ஷனை, நர்கிஸ் ஃபேக்ரி அணிந்து நடந்தார்.

சோனம் கபூர்
ரோஹித் பால் டிசைன் செய்த லெஹெங்கா ஆடையை சோனம் கபூர் அணிந்தார். இதில் இந்த ஆடையானது சோனம் கபூரின் அழகை மேலும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

ஈசா குப்தா
ஆதர்ஸ் கில் என்னும் டிசைனரின் ஆடையை, பிரைடல் வீக்கின் ஐந்தாம் நாளில் ஈசா குப்தா அணிந்து நடந்தார்.

சித்ராங்கதா சிங்
பாலிவுட் நடிகையான சித்ராங்கதா சிங், சுனித் வர்மா என்னும் ஆடை வடிவமைப்பாளரின் ஒரு பாரம்பரிய ஆடையை அணிந்து ராம்ப் வாக் சென்றார்.

அலியா பட்
அலியா பட் என்னும் பாலிவுட் நடிகை, AZVA என்னும் நகை பிராண்ட்டிற்கு ராம்ப் வாக் நடந்தார்.

லிசா ஹேடன்
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இறுதி நாளில் தருண் தஹிலியனி என்னும் டிசைனரின் ஆடையானது வெளிவந்தது. இவரது ஆடையை லிசா ஹேடன் அணிந்து ராம்ப் வாக் சென்றார்.



Click it and Unblock the Notifications
