Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஐஐஎஃப்ஏ 2013 விருது விழாவில் அசத்தலாக வந்த நட்சத்திரங்கள்!!!
ஒவ்வொரு வருடமும் ஐஐஎஃப் என்னும் திரைப்பட விருது விழா நடைபெறும். இந்த விருது விழாவிற்கு பல நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள். பொதுவாக விருது விழாவில் சிவப்பு கம்பளத்தில் தான் திரை நட்சத்திரங்கள் நடப்பார்கள். ஆனால் இந்த விருது விழாவில் பச்சை கம்பளத்தில் நட்சத்திரங்கள் பல ஸ்டைலில் வந்து கலக்குவார்கள்.
அந்த வகையில் இந்த விருது விழாவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன், சிறந்த நடிகர் மற்றும் நடன மாஸ்டருமான பிரபுதேவா, ஸ்ரீதேவி போன்றோர் கலந்துள்ளனர். மேலும் பாலிவுட்டின் கிங் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், அர்ஜூன் கபூர் போன்றோரும் கலக்கலாக வந்துள்ளனர்.
ஆனால் இதில் பலர் மிகவும் கலக்கலாகவும், சிலர் மிகவும் மோசமான உடையிலும் வந்துள்ளனர். இப்போது ஐஐஎஃப்ஏ விழாவில் பங்குகொண்ட நடிகர், நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

கமலஹாசன்
உலக நாயகனான கமலஹாசனுக்கு வயதானாலும், அவரது அழகான சிரிப்பே, அவரை இன்னும் இளமையான தோற்றத்தில் வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் அழகான அவருக்கு எடுப்பாக இருக்கும் கருப்பு நிற ஆடையில் வந்து அசத்தியுள்ளார்.

பிரபுரேவா
நடன இயக்குநரான பிரபுதேவா, அவருக்கு பொருந்துமாறு கிரே நிற சூட்டில் மிகவும் அழகாக வந்துள்ளார்.

ஸ்ரீதேவி
என்றும் இளமை குறையாமல் காட்சியளிக்கும் ஸ்ரீதேவி, டைட் பிட் க்ரீம் கலர் கவுன் அணிந்து, ஆளை மயக்கும் புன்னகையுடன் பச்சை கம்பளத்தில் நடந்து வந்துள்ளார்.

ஸ்ரேயா சரண்
தென்னிந்திய அழகியான ஸ்ரேயா, மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையான எலுமிச்சை பச்சை நிற நெட்டட் சேலைக்கும், பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கலக்கலாக பச்சை நிற கம்பளத்தில் நடந்துள்ளார்.

ஷாருக்கான்
ஷாருக்கானை அறியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள். அவரும் இந்த ஐஐஎஃப்ஏ விழாவில் அழகான கருப்பு நிற சூட் அணிந்து வந்துள்ளார்.

வித்யா பாலன்
வித்யா பாலன் மிகவும் அழகான கருப்பு நிற லெஹெங்கா புடவையில் வந்து அசத்தியுள்ளார். அதிலும் கருப்பு நிற புடவைக்கு அவர் அணிந்திருக்கும் வேலைபாடுகளுடன் கூடிய க்ரீம் நிற ஜாக்கெட் அருமையாக உள்ளது.

மாதுரி திட்சித்
மாதுரியின் அழகிற்கு இணை எவரும் இருக்க முடியாது. அந்த அளவில் அவர் மிகவும் அழகான கருப்பு நிற நெட்டட் புடவையில் வந்து, பச்சை கம்பளத்தில் நடந்துள்ளார்.

சாஹித் கபூர்
பாலிவுட் நடிகரான சாஹித் கபூரும் சூப்பரான கருப்பு நிற சூட் அணிந்து, ஐஐஎஃப்ஏ-வில், அழகான தோற்றத்தில் வந்துள்ளார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன், சிவப்பு நிறத்தில் சில்வரால் வேலைபாடுகள் செய்யப்பட்டு டீப் கட் கவுன் அணிந்து, ஐஐஎஃப்ஏ விழாவில் கலந்து கொண்டார்.

சோனு சூட்
என்ன தான் வில்லன் கேரக்டரில் நடித்தாலும், இவரது அழகிற்கு குறைவில்லை. அதிலும் ஆண்களுக்கு கருப்பு நிற உடையைத் தவிர சிறந்த ஆடை எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

அபிஷேக் பச்சன்
பாலிவுட் நடிகர் மற்றும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன், அவருக்கு சூட்டாகாத பிங்க் நிற சூட் அணிந்து, சூப்பராக வராமல் சப்பையாக வந்துவிட்டார்.



Click it and Unblock the Notifications
