Latest Updates
-
ராகி பன் தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீட்டை தேடிவருமாம்...! -
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது... -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்? -
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. -
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..!
போக்குவரத்துகளில் எரிச்சலை ஏற்படுத்தும் நபர்கள்!!!
பொதுவாக அலுவலகம் அல்லது ஒரு நிகழ்ச்சி செல்வதற்கு பொது போக்குவரத்துகளில் சென்றால் உங்கள் நாள் அதை விட மோசமாக இருக்க போவதில்லை. இந்த உலகம் முழுவதும் உங்களை எரிச்சலடைய செய்கிற பல நபர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படி பட்ட நபர்கள் ஏன் நீங்கள் பயணிக்கும் அதே மெட்ரோ இரயில் அல்லது மாநகர பேருந்தில் பயணிக்கிறார்கள் என்று சலித்து கொண்டுள்ளீர்கள் தானே?
உங்களுக்கு மட்டுமே இந்த உணர்வு ஏற்படுகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை. இந்த உணர்வு ஏற்படுகிற பல பேர்களில் நீங்களும் ஒருவர். இப்படி பயணிக்கும் பலரின் மனதில் ஓடும் பொதுவான எண்ணம் தான் இது. இப்படி எரிச்சலை ஏற்படுத்துகிற சக பயணியால் அந்த மெட்ரோ இரயில் அல்லது மாநகர பேருந்தில் போவதையே வெறுக்க தொடங்குவீர்கள்.
அது இரயிலோ அல்லது பேருந்தோ, இப்படி எரிச்சை ஏற்படுத்தும் ஒருவராவது உங்களுடன் பயணிக்கவே செய்வார்கள். வெறும் தும்மல், இருமல் அல்லது சத்தமாக பெருமூச்சு விடுதல் போன்றவைகள் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துமா? அப்படியானால் நீங்கள் அனுபவிப்பது வெறும் டிரைலர் தான். இன்னும் முழு படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும். பொது போக்குவரத்துகளில் பயணிக்கும் போது சக பயனிகளினால் பல விதமான அனுபவங்களை பெற்றிருப்பீர்கள்.
அவற்றில் சிலவகை சுவாரசியமாக இருந்தாலும் கூட, பல அனுபவங்கள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையிலேயே அமையும். அப்படி என்ன தான் செய்வார்கள் என்று அனுபவம் இல்லாத பலர் கேள்வி எழுப்புவது எங்களுக்கு கேட்கிறது. பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது எரிச்சலும் ஏற்படுத்தும் சிலர் என்ன செய்வார்கள என்பதை பார்க்கலாமா? இவ்வகை ஆட்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அழகு ராணிகள்
எரிச்சல் ஏற்படுத்தும் கும்பலை சேர்ந்த சிலர், லிப்ஸ்டிக் போடுவதற்கும் நக பாலிஷ் போடுவதற்கும் பொது போக்குவரத்து தான் சிறந்த இடம் என்று நினைக்கின்றனர். முடிந்த வரை தன் அழகை மேம்படுத்தும் வேலையை அவர்கள் இங்கே செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முயல்வர்.

உங்கள் மேல் வாடை வீசுகிறது
இவ்வகையான எரிச்சலூட்டும் நபர்களை பொது போக்குவரத்துகளில் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? அவர்களின் மேல் வீசும் கெட்ட வாடை தான். அவர்கள் அடிக்கும் வாடையே அனைத்தையும் கூறி விடும். வியர்வை மற்றும் தரமற்ற டியோடரண்ட்டின் கலவை சேர்ந்து வீசும் போது உங்களுக்கு எரிச்சல் ஏற்படுவது இயல்பு தானே?

நடிகையர் திலக சாவித்திரிகள்
"இந்த உலகம் ஒரு நாடக மேடை" என்ற வாசகத்திற்கு ஈடாக அவளுடைய நண்பன் பேருந்தை விட்டு இறங்கிய மறு நொடியே கூத்து ஆரம்பித்து விடும். உடனே தன் கைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்து அவன் அவளை விட்டு அவன் வீட்டுக்கு சென்றதால் இந்த வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஒரு அபலை பெண்ணை போல உணர்ச்சியை அவனிடம் வெளிப்படுத்துவாள். அப்படி என்ன தான் அவளுக்கு சோகம் ஏற்பட்டிருக்கும் என்றி எண்ணி சக பயணிகள் குழம்பி போவார்கள்.

நான்கு கால் ஜீவிகள்
எரிச்சலூட்டும் வகையிலேயே மிகவும் மோசமானவர்கள் இவர்கள் தான். தினமும் ஒரு முறையாவது இவ்வகை ஆட்களை நாம் சந்திக்காமல் இருப்பதில்லை. பொது போக்குவரத்துகளில் மூக்கு முட்ட குடித்து விட்டு வாந்தி வேறு எடுக்கும் சில நபர்களை நாம் அன்றாடம் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்.

காட்ஜெட் பைத்தியங்கள்
எரிச்சலூட்டும் நபர்களில் அடுத்த வகை என்ன தெரியுமா? நவீன உலகத்தில் கிடைக்கும் காட்ஜெட் பொருட்களை கொண்டு சீன் போடுபவர்கள். தங்கள் கையில் எப்போதும் ஐ-பேட், ஐ-போன், டேப்லெட் மற்றும் காலக்சி போன்ற சாதனங்களை வைத்து படம் போடுவார்கள். இப்படி விலை உயர்ந்த பொருட்களை கொண்டு என்ன சொல்ல வேண்டுமாம் அவர்களுக்கு? வேறு என்ன, அனைவரையும் ஈர்ப்பதற்காகவே இதையெல்லாம் செய்கின்றனர்.

வேலையில் மும்முரமாக இருக்கும் காதல் புறாக்கள்
எரிச்சல் ஊட்டும் வகை நபர்களில் மிகவும் சுவாரசியமானவர்கள் என்றால் அது தன் கைகளை தன் காதலி மீதிருந்து எடுக்காமல் நெருங்கி உட்கார்ந்து சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகளே. ஒரு வயதான பெண்மை இடம் கிடைக்காமல் அவர்கள் முன் நிற்கும் போது காரணமே இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் விழுவதும் சில்மிஷகள் செய்வது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமா இல்லையா?

உங்களை விட என்னால் அதிகமாக கத்த முடியும்
இவ்வகை நபர்கள் உலகம் முழுவதும் அனைவராலும் வெறுக்கப்படுகின்றனர். பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது தங்களின் கைப்பேசியில் பேசும் போது அடுத்தவர்களை பற்றி கவலை படமால் கத்தி பேசுவார்கள். அவர்களின் அறுவை கதைகள் மற்றும் வாழ்க்கையின் நிகழ்வுகளை உலகமே கேட்கும் படி கத்தி கூறுவார்கள். "உனக்கு நேரம் சரியில்லை என்றால் எனக்கென்ன, உன் நாய் ஒழுங்காக சாப்பிடவில்லை என்றால் எனக்கென்ன, தயவு செய்து உன் திஉவாஇயை மூடு" என்று அவர்களை பார்த்தால் உங்களுக்கு தோன்றும் தானே. இப்படி பட்ட நபர்கள் உடன் இருக்கும் போது கண்டிப்பாக பலருக்கும் இதே எண்ணம் தான் தோன்றும்.



Click it and Unblock the Notifications











