Latest Updates
-
பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
செவ்வாய் மேஷ ராசியில் இருப்பதால் ஜூன் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வீட்டைச் சுற்றி புழுதிப் புயலா? இந்த வாஸ்து செடிகளை மட்டும் வைங்க… காற்று சுத்தமாகும், பணமும் தானாக வரும்! -
12 ஆண்டுகள் கழித்து நிகழும் குரு-சுக்கிர சேர்க்கை: இன்று முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
ஹைதராபாத் ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, அட்டகாசமாக இருக்கும் -
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க..
2012 ஆம் ஆண்டின் சிறந்த மற்றும் மோசமான புடவை ஸ்டைல்கள்!!!
2012 ஆம் ஆண்டு மிகவும் ஸ்பெஷலான ஒரு ஆண்டு என்று சொல்லலாம். ஏனெனில் இந்த ஆண்டில் தான் உலகம் அழியப் போகிறது, அதிலும் டிசம்பர் 21 அன்று அழியும் என்று மாயன் காலாண்டரில் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய ஆண்டில் பல புதிதானவை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் உடுத்தும் உடையான புடவைகளில் பல டிசைன்கள் வெளிவந்துள்ளன. அந்த புடவை டிசைன்களில் இந்த ஆண்டில் வெளிவந்த லெஹெங்கா புடவையும் ஒன்று. அதாவது இது சாதாரண புடவை போன்றது தான். ஆனால் இதனை உடுத்தும் விதம் தான் லெஹெங்கா.
இத்தகைய புடவைகளை நிறைய திரையுலக நடிகைகள் இந்த ஆண்டில் நடைபெற்ற பல விழாக்களுக்கு அணிந்துவந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பல புடவை மாடல்களையும் உடுத்தியுள்ளனர். ஆனால் அவ்வாறு உடுத்துவதால், சில சேலைகள் ஸ்டைல்கள் மிகவும் சிறந்ததாகவும், சில ஸ்டைல்கள் மோசமானதாகவும் இருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த வருடம் திரையுலக நடிகைகள் சிலருக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்தின் போது உடுத்திய சேலைகளில் சில புடவைகள் சிறந்ததாகவும், சில மோசமானதாகவும் உள்ளது. இப்போது அந்த மாதிரியான 2012 ஆம் ஆண்டின் சிறந்த மற்றும் மோசமான புடவை ஸ்டைல்கள் சில உங்கள் பார்வைக்காக பட்டியலிட்டுள்ளோம்.

மஞ்சள் காட்டு மைனா
ப்ரீத்தி ஜிந்தா இந்த புடவையில் பார்ப்பதற்கு சூரியகாந்தி போன்று அழகான மஞ்சள் நிற லெஹெங்கா புடவையில் இருக்கிறார். அதிலும் இந்த புடவையின் எவ்வாறு கட்டினால் அழகாக இருக்குமோ, அவ்வாறு கட்டி, இந்த புடவைக்கு மிகுந்த அழகைக் கொடுத்துள்ளார்.

பொலிவற்ற மஞ்சள்
மஞ்சள் நிறத்தில் டிசைன் செய்யப்பட்ட ப்ரீத்தியின் சேலையை பார்த்தப் பின், இதனை பார்த்தால், மிகவும் பொலிவிழந்தது போன்று உள்ளது. மேலும் இந்த புடவையில் மஞ்சளுடன் சேர்ந்திருக்கும் நிறங்கள் சரியானதாக இல்லை.

வெள்ளை அழகே அழகு
இந்த புடவை மிகவும் அருமையாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிலும் இதில் உள்ள ஒட்டியாணம், இந்த புடவைக்கு ஒரு வித்தியாசமான அழகைத் தருகிறது.

சிங்சாங் கலர்
ராஸ்மி தேஸி அணிந்திருக்கும் இந்த புடவையானது, அளவுக்கு அதிகமான அடர்ந்த மஞ்சள் நிறத்துடன், மற்ற அடர்ந்த நிறங்களை சேர்ந்திருப்பதால், அது பார்ப்பதற்கு ஒருவித கெட்டதாக தெரிகிறது.

பழுப்பு நிற அழகு
இந்த பழுப்பு நிற ப்ளைன் ஷிப்பான் புடவையை, சோனாம் கபூர் அழகான அணிந்திருப்பது, அந்த சேலையை மிகுந்த அழகோடு வெளிக்கொணர்கிறது.

அழகு ஆனால் இல்லை
இந்த சேலை பார்ப்பதற்கு நன்றாக இருத்தாலும், இதனை கவுரி கான் உடுத்தியிருக்கும் விதம், ஒருவிதமாக உள்ளது.

க்ரீமி புடவை
இந்த சேலையை ஜரின் கான் 2012 IIJW-வில் அணிந்துள்ளார். இது க்ரீம் நிறத்தில், பார்டரில் பச்சை நிற சில வேலைபாடுகளுடன் பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

நெட் புடவை
இந்த மாதிரியான வலையால் ஆன சேலையை அணிந்தால், அனைத்துமே நன்கு தெரியும். இதனை ராணி முகர்ஜி அணிந்து, அவரது வயிறு நன்கு தெரிவதால், அழகான அவர் கூட கெட்டதாக காணப்படுகிறார்.

கரும்பச்சை மற்றும் தங்க நிறம்
இந்த புடவையானது கரும்பச்சை நிறத்துடன், தங்க நிற வேலைபாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தனி அழகை, இந்த சேலையின் சரிகை ஜாக்கெட் தருகிறது.

தவறான நிறங்கள்
கெட்டதான புடவை என்றால் இதற்கு இதனை சொல்லலாம். ஏனெனில் இந்த புடவையில் உள்ள நிறங்கள் ஒவ்வொன்றும் பொருத்தமாக இல்லை.

சிவப்பு ரோஜா
எந்த வேலைபாடுகளும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் புடவைகளின் அழகே தனிதான். அதற்கு சிறந்த உதாரணம் என்றால், அது சிவப்பு நிற சில்க் புடவை தான்.

கெட்டதாக ஜொலிப்பது
அழகை வெளிப்படுத்தும் என்று அளவுக்கு அதிகமாக ஜொலிக்கும் படியாக டிசைன் செய்தால், அது நிச்சயம் அழகைக் கெடுக்கும் என்பதற்கு இந்த சேலை சிறந்த உதாரணமாக இருக்கும்.

போங் ஸ்டைல்
கஜோல் துர்கா பூஜையின் போது பாரம்பரிய புடவையான பட்டு சேலையை அணிந்துள்ளார். அதிலும் தங்கம் மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனில். சொல்லப்போனால் இந்த மாதிரியான பாரம்பரிய உடையும் எப்போதும் ஃபேஷன் தான்.

போர் அடிக்கும் கருப்பு
கருப்புடன் தங்க நிறம் கலந்திருந்தால், நன்கு பளிச்சென்று இருக்கும். ஆனால் அதை உடுத்தியிருக்கும் விதம் சரியில்லாததால், சரியானதாக இல்லை.

மற்றொரு சிவப்பு
இந்த சிவப்பு நிற புடவையில் கருப்புடன், தங்க நிற பார்டர் கலந்திருப்பது மிகுந்த அழகைத் தருகிறது.



Click it and Unblock the Notifications