Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
மகத்தான திருப்பம்
நள்ளிரவு நேரம். உலகே உறங்கும் பொழுதில் அந்த ஜென் குரு ஞான விசாரம் செய்கிற நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் திருடன் ஒருவன் அவருடைய அறைக்குள் நுழைந்தான். கூரிய கத்தியைக் காட்டி ‘பணம் கொடு' என்று மிரட்டினான்.
உடனே குரு ‘ நான் வேலையாய் இருப்பது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா? அதோ அந்த மேஜையில் பணம் இருக்கிறது எடுத்துப் போ' என்று கூறிவிட்டு புத்தகத்தை படிக்கத் தொடங்கினார்.
திருடன் மேஜையில் இருந்து பணத்தை எடுத்த போது ‘ நாளைக்கு எனக்கு செலவிருக்கிறது கொஞ்சம் பணத்தை எனக்காக வைத்துவிட்டுப் போ என்றார் குரு.
எதுவுமே நடக்காதது போல அமைதியாய் இருந்த ஒருவரை அப்பொழுதுதான் திருடன் முதன் முதலாக பார்த்தான். ஆச்சரியத்தோடு கொஞ்சம் பணத்தை வைத்து விட்டுப் போனான்.
சில நாளில் வேறோர் இடத்தில் திருடிய போது குருவின் பணத்தை திருடியதையும் காவலரிடம் ஒப்புக்கொண்டான் திருடன். அந்த வழக்குத் தொடர்பாக காவல் அதிகாரி திருடனை அழைத்துக் கொண்டு குருவிடம் வந்தார். ‘இவன் உங்களிடம் திருடியதாக சொல்கிறானே' என்று கேட்டார்.
‘இவன் திருடவில்லை தன்னுடைய கஷ்டத்தை என்னிடம் சொன்னார். நான் பணம் கொடுத்து அனுப்பினேன்' என்று பதிலளித்தார் குரு.
மற்ற திருட்டுகளுக்காக சிறைத்தண்டனை அனுபவித்தத் திருடன் பிறகு அந்த குருவிடமே வந்து தங்கி அவரது சீடராக பணி புரிந்தான்.
பணத்திருட்டு என்பது சின்ன விசயம்தான். ஆனால் காவல் அதிகாரியிடம் குரு சொன்னது சிந்திக்கத் தக்கது. அவருடைய ஒருவார்த்தை திருடனுடைய வாழ்க்கையில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.



Click it and Unblock the Notifications
