Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
அந்த இரண்டு வார்த்தைகள்!
ஒரு ஊரில் துறவி மடம் ஒன்று இருந்தது. அங்கு அமைதியையே பின்பற்ற வேண்டும். துறவிகள் யாரும் பேசவேக் கூடாது. ஆனால் அங்குள்ள துறவிகள் பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பேசலாம். அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசலாம்.
அப்போது அங்கு பத்து வருடங்கள் தங்கிய பிறகு துறவி ஒருவர் குருவிடம் சென்றார். குரு "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "மெத்தை...கடினம்.." என்று தெரிவி்த்தார். அதற்கு குரு "அப்படியா!" என்று கேட்டார்.
மீண்டும் பத்து வருடம் கழித்து குருவிடம் சென்றார். "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று குரு மறுபடியும் கேட்டார். அதற்கு அந்த துறவி "உணவு...நாற்றம்..." என்று கூறினார். அதற்கு குரு "அப்படியா!" என்று மட்டும் கேட்டார்.
அந்த துறவி மறுபடியும் பத்து வருடத்திற்கு பிறகு குருவைப் பார்க்க போனார். குருவும் "இந்த பத்து வருடத்திற்கு நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "நான் செல்கிறேன்" என்று சொன்னார். அதற்கு அந்த குரு "எனக்கு ஏன் என்று தெரியும். ஏனெனில் உனக்கு எப்போதும் புகார் கூறுவதே வழக்கமாக இருந்தது" என்று சொன்னார்.
துறவியாக ஆசைப்படுபவர்களுக்கு எந்த ஒரு தேவையும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் துறவியாக முடியாது என்பது தான் இந்த கதையின் கருத்து ஆகும்.



Click it and Unblock the Notifications
